Header Ads



நீர்கொழும்பு அசம்பாவிதங்களுக்கு நட்டஈடு, வழங்க பிரதமர் உத்தரவு

நீர்கொழும்பில் நேற்று மாலை ஏற்பட்ட அமைதியின்மையால், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு நட்டஈடு வழங்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த சேதங்கள் தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்டு, அதற்கான நட்டஈட்டை வழங்குமாறும், சம்பந்தப்பட்டவர்களுக்கு பிரதமர் யோசனை வழங்கியுள்ளாரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தேசிய  கொள்கைகள்,  பொருளாதார நடவடிக்கைகள், மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சின் கீழ் சேதங்களுக்கான அலுவலகம் ஊடாக சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

3 comments:

  1. Prevention is better than cure..
    This is like controlled demolition!

    ReplyDelete
  2. மதிப்புக்குரிய பிரதமர் அவர்களே
    உங்களது உடனடி நடவடிக்கைக்கு மிக்க நன்றி
    அதுபோலவே இந்த கலவரங்களில் ஈடுபட்டோர்களிடம்
    கேளுங்கள் முஸ்லிம்களாகிய நாங்கள் என்ன செய்தோம் அவர்களுக்கு
    இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து நாட்டிக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும்
    நாங்கள் ஆற்றிய தொண்டுகளும் இழந்த இழப்பீடுகளும் போதாதா
    இஸ்லாம் காட்டிய அழகிய வாழ்க்கை முறையில் வாழ நினைக்கிறோம் -எங்கள் இஸ்லாம் , குரான் , நபி எங்களுக்கு வன்முறையோ தீவிரவாதத்தையோ
    போதிக்கவில்லை அது எங்களுக்கு நேர் வலியுமல்ல அது எங்களுக்கு தேவையுமல்ல- யாரோ மூளை சலவை செய்யப்பட்ட ஒரு அநியாயக்கார கும்பல் செய்த குற்றங்களுக்காக முழு இஸ்லாமிய சமூகமும் கூனி குறுகி நிட்கின்றோம் -இறந்த எம் சகோதரர்களுக்கும் காயப்பட்ட உறவுகளுக்கும் ஆறுதல் சொல்ல முடியாமல்-வெட்கித்து நிட்கின்றோம் -முடிந்தவரை எம்மாலான உதவிகளை முப்படைக்கும் வழங்கி இந்த நாசகார கும்பல்களை அடியோடு ஒழிக்க முயல்கிறோம். இப்படி இருக்க எம் வீடு வாகனங்கள் மீது சொத்துக்கல் மீது அழிவுகளை ஏட்படுத்துவதன் மூலம் அவர்கள் என்ன சாதிக்கப்போவதாக நினைக்கிறார்கள்.
    தயவு செய்து வினயமாக கேட்டுக்கொள்கிறோம் எமது தரப்பு நிலைமைகளை எம் சகோதர இனத்தவர்களுக்கு தெரியப்படுத்தி- இனிமேலும் இதோபோன்ற வன்முறைகள் ஏட்படா வண்ணம் கடுமையான சட்டத்தினை அமுலுக்கு கொண்டுவருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

    இப்படிக்கு
    மர்சூக் மன்சூர்
    தோப்பூர்-07

    ReplyDelete
  3. Only order no practical action

    ReplyDelete

Powered by Blogger.