May 20, 2019

இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை

- S.H.M.Faleel -

இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது.

இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களாம்.

இங்கு மர்ஹும் அமீர் அவர்களது கைகளால் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரில் உள்ள தொலைபேசி இலக்கத்துடன் இனி யாரும் தொடர்பு கொள்ளமாட்டார்கள்.

அவருக்கு பால் மணம் மாறாத நான்கு பிள்ளைகள்.

இன்று அந்த வீட்டுக்கு சகோ.சார்ள்ஸ் தோமஸ் குழுவினருடன் தேசிய ஷூரா சபையைச் சார்ந்த டாக்டர் சைபுல் இஸ்லாம் சகோ.ரீசா யஹ்யா போன்றோருடனும் சென்ற வேளை உள்ளத்தில் ஏற்பட்ட வேதனையை எழுத முடியாது. அவர்களைப் போன்றே பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவளத்துணை அவசியம் என்பது உணரப்பட்டதனால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.நான்கு மதங்களையும் சேர்ந்த தனவந்தர்களும் அறிவாளிகள் பலரும் நேரில் சம்பவங்களைப் பார்த்து பிரமித்துப் போயினர்.

அல்லாஹ் போதுமானவன். அவனே பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறுமையையும் உயர்ந்த கூலியையும் கொடுப்பாயாக.

மினுவங்கொட, ஹெட்டிபொல பகுதிகளில் கண்ட காட்சிகள் பல செய்திகளைக் கூறின.சகோ.சால்ஸ் நிகழ்த்திய உரைகளில் சகல விதமான வன்முறைகளுக்கும் பின்னணியில் அரசியல் சுயநலம் இருப்பதை வலியுறுத்தினார்.நாம் அனைவரும் ஒன்றுபடுவதன் மூலமும் ஆன்மீகப் பலத்தின் மூலமும் மிகச் சிறிய அளவிலான பயங்கரவாதிகளையும் அரசியல் சுயநலமிகளையும் வெல்ல முடியும் என்றார்.

மீடியாப் பயங்கரவாதத்தை கடுமையாக சாடிய அவர் தான் அழைத்து வந்த தனது பிரத்தியேக மீடியாவினூடாக உள்ளதை உள்ளபடி கூறுவதாக வாக்களித்தார். அவர் பெரும்பான்மை சமூகத்துக்கு மத்தியில் பிரபலமானவராக இருப்பதால் அவரது கருத்துக்கள் செல்வாக்கு மிக்கவையாக அமைய வாய்ப்புள்ளது.இந்த நவீன கால அபூதாலிப்களையும் மீள் நல்லிணக்க வழிமுறைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஹெட்டிபொலை பள்ளி முன்றலில் நடைபெற்ற கூட்டத்தில் அ.இ.ஜ.உ.வைச் சேர்ந்த அஷ்ஷெய்க் உமர்தீன் அவர்களும் நாட்டின் பல பாகங்களில் இருந்து குறிப்பாக சீனன் கோட்டையிலிருந்து நிவாரணப் பணிகளுக்காக வந்த நல்லுள்ளம் படைத்தவர்களும் ஊர்மக்களும் கலந்து கொண்டனர்.

அல்லாஹ் இந்நாட்டை சமாதான பூமியாக மாற்றுவானாக.
3 கருத்துரைகள்:

அந்த பிள்ளைகளின் எதிர்காலதுக்காக முடியுமானலவு நிதி உதவிகளை அனைவரும் வழங்குங்கள்

கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் இனிமேலும் யாராவது வேலைவாய்ப்புக்கள் வழங்கும் போது தம் சகோதரர்களுக்கு முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்கி முன்னுரிமைப்படுத்தி உங்களுக்கு கிடைக்காத பட்சத்தில் மட்டும் அன்ியர்களுக்கு வேலை வாய்ப்பினை கொடுங்கள் இல்லை என்றால் இப்படியே தன்னுடையதை தின்ரு தனக்கே தீவைத்துக்கு போவான் அந்நியன்.

Unity & reconciliation mean nothing without severe Punishment for these notorious terror mobs. Firstly punish them. Punishment is of paramount importance. Muslims have already learnt bitter lessons in Mawanella,Dharga town, Digana & Ampara. Thereafter we can talk about peace and reconciliation.

Post a comment