Header Ads



அபாயா அணிந்து செல்லலாம் - ரணில் ஆசாத் சாலிக்கு உறுதியளிப்பு, புதிய சுற்றுநிருபமும் வெளிவரும்

- AAM.Anzir -

முஸ்லிம்கள் அபாயா அலுவலகங்களுக்கு செல்லும் போது, அபாயா அணிந்து செல்லும்படியான புதிய சுற்றுநிருபம் வெளியிடப்படுமென, பிரதமர் ரணில் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலிக்கு உறுதியளித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை (31) சற்றுநேரத்திற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவை ஆசாத்சாலி நேரடியாக சந்தித்து அரச அலுவலகங்களில் அபாயா அணிய விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து விவாதித்துள்ளார்.

அபாயா குறித்து உயர் கல்வியமைச்சு வெளியிட்ட சுற்றுநிருபத்திற்கு மைத்திரிபால சிறிசேனவும் பச்சைக்கொடி காட்டியிருந்தார். இந்நிலையில் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள புதிய சுற்றுநிருபத்தினால் முஸ்லிம்களிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆசாத் சாலி பிரதமர் ரணிலுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையடுத்து பொது நிறுவனங்களுக்கு அபாயா அணிந்து செல்லலாம் என்ற புதிய சுற்றுநிருபத்தை வெளியிட தான் உடனடி நடவடிக்கை எடுப்பதாக ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

3 comments:

  1. வெளியிடப்படுள்ள சுற்று நிருபத்தில் 3வது விடயம் சாரி அணிந்து கொண்டு சமய உடைகளையும் அணிந்து கொள்ளலாம் அது ஆளடையாளம் தெரியக்கூடியதாக இருக்க வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

    ReplyDelete
  2. இந்த அரசாங்கத்தின் போக்கை பார்க்கும் போது குடல் கழுவ நரியிடம் கொடுத்த கதையாகவே இருக்கிறது.

    முஸ்லிம்களின் நிலை இரு தலைக்கொள்ளி எறும்பின் நிலையை போன்று இன்று முஸ்லிம்கள் உரிமைகளையும் சலுகைகளையும் இழந்து அனாதைகளாகி ஒடுக்கப்பட்ட சமூகமாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.