Header Ads



புத்தளம் பிரதேச செயலகத்தில், ஹிஜாப்புக்கு எதிரான பதாதை அகற்றப்பட்டது


"உங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் 13 பெண்களினதும் உடை விவகாரம் அவர்களது கலாச்சாரம் சம்பந்தப்பட்டது...சட்டத்துக்கு மாற்றமானதும் அல்ல...உங்களது பக்கத்தில் கோரிக்கைகள், நியாயங்கள் ஏதும் இருப்பின் அவர்களோடு நேரடியாக பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்...அதல்லாமல் வேலை நிறுத்த போராட்டம் போன்றவற்றை செய்து பொது மக்களை கஷ்டத்துக்குள் வீழ்த்த வேண்டாம்...இன்னுமொரு முக்கிய விடயம் என்னவென்றால் பாதுகாப்பு கெடுபிடிகள்...போலீஸ் நிலையம் உட்பட எந்தவொரு அலுவலகத்திலும் உங்களது அலுவலகம் போல சோதனைகள் மேற்கொள்வதில்லை...எனவே இந்த நடவடிக்கையையும் தயவு செய்து நிறுத்தவும்"...

 புத்தளம் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் புத்தளம் பிரதேச செயலாளரை சந்தித்து மேற்கண்டவாறு தெரிவித்தார்...உடன் டொக்டர் இல்லியாஸ் அவர்களும் பிரசன்னமாகி இருந்தார்...

இதற்கிடையே ஹிஜாப், நிகப்புக்கு எதிராக அந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட் இன்று காலை நீக்கப்பட்டிருந்தது...அத்தோடு மாவட்ட செயலாளரும் அங்கு விஜயம் செய்து ஹிஜாப் மற்றும் அபாயா போன்றவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிடும்படியும், அவை சட்டத்துக்கு முரணானவை அல்ல என்றும் அறிவுறுத்திள்ளனர்.




3 comments:

  1. நாட்டின் சட்டத்திற்கு கட்டப்பட தெரியாத பிரதேச செயலாளர் ஒருவேலை பணம் கொடுத்து பிரதேச செயலாளராக வந்து இருப்பாரரே அட மொக்கு கூட்டம் நீங்க படித்தவர்கள்தானே ஹிஜாப் தடையில்லை என்று அழகாக சொல்லி இருக்க சட்டத்திற்கு முரணாக நடக்கின்றீர்கள். தற்கொலைத் தரிகள் யாரவாது அபாயாவுடன் தாற்கொலை செய்தார்களாக. ஆனால் சாரியுடன் தாற்கொலை செய்தவர்கள் விடுதலைப்பு புலிப் பெண்கள். எப்போ திருத்தப் போரிங்களே.

    ReplyDelete
  2. சாரியுடன் பெண்கள் தற்கொலை செய்த போது சாரியினை ஏன் தடை செய்யவில்லை

    ReplyDelete

Powered by Blogger.