Header Ads



தலையில் அணிந்திருப்பதை கழற்றிவிட்டு வாருங்கள் - முஸ்லிம்களை நோக்கி சத்தமிட்ட வைத்தியர்


29.05.2019 புதன்கிழமை,  காலை மு.ப. 9.45 மணியளவில், கம்பஹா வைத்தியசாலைக்கு மனைவியின் அம்மாவின் சிகிச்சைக்காக, மனைவியும் கூட சென்றிருந்த வேளை, 8வது வாட்டுக்கு பொறுப்பான விஷேட வைத்தியர்  அவரது வாட்டினுல் வைத்து அனைவர் முன்னிலையிலும்   (தலையில் அணிந்திருப்பதை கழற்றி விட்டு வாருங்கள். இது இவ்வாட்டினுல் என்னுடைய சட்டம்) என சத்தமிட்டு ஏசியுள்ளார். மனைவி வெளியே வந்துள்ளார்.

கம்பஹா வைத்தியசாலைக்கு  பல இடங்களிலும் இருந்து முஸ்லிம்கள் செல்கின்றமையால் அவர்களுக்கு தலை மறைத்து ஆடை அணிவதில் ஏற்படும் அசெளகரியங்களை தவிர்பதற்கும்  இதுபோன்ற விடயங்கள் மேலும் ஏற்படாமல் இருப்பதற்கும் சமூகத்தில் பொறுப்பானவர்கள் உரிய நடவடிக்கைகளை  மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்,
மினுவாங்கொடை

3 comments:

  1. எல்லோரும் பொதுவாக சட்டத்தைக் கையிலெடுத்துவிட்டாகள் ஏறிமிதப்பதற்காக முஸ்லீமகளை - ஏனென்று கேட்க அநாதியற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளதால்.

    நியாயம் கேட்டால் நீதான் குற்றவாழி என்று கூட்டில் அடைக்கப்படும் பரிதாப நிலை இன்று முஸ்லீம்களுக்கு.

    கூனிக்குறுகி நிற்பதைவிட வீட்டுக்குள் கூண்டுக்கிழியாக வாழ்வதுமேல் என்ற நிலை நம் சமூகத்துக்கு இன்று.

    ReplyDelete
  2. டாக்டர்களும் நீதவான்களும் இப்படி இருந்தால் நாட்டின் கல்வி முறையில் என்ன பிரயோசனம் உண்டு. பௌதீக அபிவிருத்தி மட்டும் கருத்தில் கொள்ளாது மனநல அபிவிருத்தியிலும் சம அளவில் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.