Header Ads



அப்பாவி முஸ்லிம்களின் கைதுகள் பற்றி, வாய்திறக்க மறுப்பது ஏன்...?

- எம்.எல்.எஸ்.முஹம்மத் - 

கடந்த இரு வாரங்களாக நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்புக் கருதி அரசாங்கம் அவசரகால சட்டத்தை அமுல் படுத்தியுள்ளதுடன் திடீர் சோதனைகளையும் தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்றுவரும் ஒத்து தகவலுகளுக்கு இணங்க முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் உட்பட அப்பாவி பொது மக்கள் பலரும் பாரிய சிக்கல்களுக்கும் அசௌகரியங்களுக்கும் முகங் கொடுக்க நேர்ந்துள்ளனர்.

இந்த விடயத்தில் பெரும்பாலான ஊடகங்கள் உட்பட  அனைத்து சமூக ஊடகங்களும் தனிமனித உரிமைகளையும் சமூக கௌரவத்தையும் பாதிக்கும் வகையில் சிறிய செய்திகளையும் பெரிய அனர்த்தங்களாகவும், ஆபத்துக்களாகவும் மற்றும்  எச்சரிக்கைகளாகவும்  மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர்.

இந்நிலை தொடர்வதால் பொலிசாரின் திடீர் சோதனைகளுக்கு உள்ளாகும் முஸ்லிம் மக்களும் முஸ்லிம் கைதிகளின் குடும்ப அங்கத்தினர்களும் உளவியல் ரீதியாக பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மற்றும் சில முஸ்லிம் சமூக நிறுவனங்களும் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதில் பாதுகாப்புத் தரப்புக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லீம்களின் கைதுகள் பற்றியோ, மனிதாபிமானமற்ற முறையில் இடம்பெற்று வரும் திடீர் சோதனைகள் பற்றியோ கதைக்க பின்வாங்குகின்றனர்.

மாறாக தமது பக்க ஆதரவாளர்களை மாத்திரம் சட்டத்திற்கும் அப்பால் சென்று பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.

எது எப்படியாக இருப்பினும் இதுவரை பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் முஸ்லீங்கள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு உத்தியோகபூர்வ முடிவுகளை இன்னும் அறிவிக்கவில்லை.

திடீர் சோதனைகளின் போது கைபற்றப்படும் தனிமனித உரிமைகளுடனும், சமூக உரிமைகளுடனும் தொடர்பான பொருட்கள் பரிசோதனைகளின் நிறைவின் பின்னர் அதன் முழுமையான வடிவில் மீள ஒப்படைக்கப்பட்டு வருகிறதா என்பதும் இன்னும் சந்தேகத்திற்கு இடமாகவே உள்ளது.

மறுபுறத்தில் அவ்வாறு கைதாகி விடுதலை செய்யப்பட்டவர்களையும் அவர்களது குடும்பத்தையும் சமூகம் நோக்கும் விதமும் பாதிக்கப்பட்ட உள்ளங்களுக்கு இன்னும் வேதனையை அளித்துக் கொண்டிருக்கிறது.

மொத்தத்தில் அவர் உட்பட அவரின் குடும்பமும் சமூக விரோதிகளாகவும் தேசத் துரோகிகளாகவும் மக்கள் முன் காட்சிப்படுத்தப் படுகின்றனர்.

இந்த விடயங்கள்பற்றி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஒரு சிறிய அளவிளான ஊடக அறிக்கையொன்றை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்த போதிலும் அதன் ஆலோசனைகள் அனைத்து தரப்பினராலும் பின்பற்றப் பட்டு வருகிறதா என்பது மற்றொரு கேள்விக் குறியாகும்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது மனித நேயத்தை மதிக்கும் அனைத்து உள்ளங்களினதும் மிக நியாயமான ஒரு எதிர்பார்ப்பு.

அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

ஆனால்  அதனை பாசிஸ வழியில் அடக்க முயற்சிப்பதும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட  மனித உரிமைகளை மீறும் வகையில் கட்டுப்படுத்த முயற்சிப்பதும் மற்றொரு பயங்கரவாத்திற்கான திட்டமிடப்படும் ஓர் அடித்தளமாகவும் கருதவும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே இந்த மனிதநேய விடயங்கள் தொடர்பில் அனைத்து சமூகத்தினரும் கதைக்க முன்வர வேண்டும்.அத்துடன் பாரிய மன உளைச்சல்களுக்கு உள்ளாகி வரும் முஸ்லிம் மக்களின் மனநிலை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் முஸ்லிம் சமூகத் தலைமைகள் அறிக்கைகள் விடுவதற்கு அப்பால் இருந்து யதார்த்தமாக செயற்படுவதும் காலத்தின் மிக முக்கிய தேவையாகவும் உள்ளது.

4 comments:

  1. குரல்கொடுக்கற்ற நாதியற்ற சமூகமாக இலங்கை முஸ்லீம்கள்.......

    பாவம் அப்பாவியாக்கி விடப்பட்டுள்ள முஸ்லீம்கள். மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் ஆறாத்தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்கள் - தமது பாதுகாப்பு மாத்திரம் முக்கியமென்ற ரீதியில். சீ இவர்களெல்லாம் சமூகத்தின் தலைவர்களா ???? வெட்கித் தலை குனிகிறோம் அநாதியற்ற நிலையில்.

    புலிப்பாசிச வாதம் 30 வருடங்களாக வதைத்த போதெல்லாம் காட்டிக்கொடுத்தேமா நாட்டை ? வெட்டிக் கொல்லப்பட்டோம் பள்ளிகளில். வேரோடு அறுத்தெறியப்பட்டோம் வடக்கில். ஏந்தினோமா துவக்கு நாட்டுக்கெதிராக ? இல்லயே.

    எரித்தார்கள் பள்ளியோடு சேர்த்து ஞானத்தின் தலைமையில் பல இடங்களில் பலபோது- ஏன் எதற்கு தெரியாது. ஏந்தினோமா துவக்கு எவனுக்கெதிராகவாவது? ஆயினும் சதிசெய்தோமா நாட்டுக்கெதிராக இல்லையே........... ஆயினும் பொறுத்தோம் பொறுத்தோம் நாட்டுக்காக.

    செய்தோமா சதி நாம் எங்காவது இன்றுவரை நாட்டின் சரித்திரத்தில் ???

    இருநதும் சில வடிகட்டிய முட்டாழ்கள் செய்த பிழையால் - இன்றுவரை செய்த அத்தனை எமது தியாகங்களும் மறக்கடிக்கப்பட்டு ஒரு வினாடியில் - நாம அத்தனை பேருமே பயங்கரவாதிகளாகப் பாரக்கப்படுகிறோம் இந்த இலங்கைத்திரு நாட்டில். எத்தனை கொடுமை இது ???

    புரிந்துகொள்வார்கள் யார் எம்மை ???


    ReplyDelete
  2. காலத்திற்கு பொருத்தமான பதிவு ஒத்தழைப்பதாக நினைத்து காலில் விழுந்து வணங்குகிறொம்

    ReplyDelete
  3. @AMRaffi,...இவ்வளவு காலமாக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தீர்கள், பலிவாங்குகறீர்கள் போல

    ReplyDelete

Powered by Blogger.