Header Ads



மது­பா­ன­சாலையை உடைத்­து வெறி­யேற்­றிய குண்டர்களே, மினுவாங்கொடையை நாசமாக்கினர்

- M.A.M Ahsan -

சரி­யான நேரத்தில் சரி­யான முறையில் பாது­காப்­பினைப் பலப்­ப­டுத்­து­வ­தற்கு கட்­ட­ளை­யி­டப்­பட்­டி­ருந்தால் இடம்­பெற்ற தாக்­கு­தல்­களை முற்­றாகத் தடுத்­தி­ருக்­கலாம் என சம்­பவத்தை நேரில் கண்டோர் தெரி­விக்­கின்­றன.

ஞாயிற்­றுக்­கி­ழமை (மே–12) சிலா­பத்தில் கல­வரம் ஏற்­பட்­டதைத் தொடர்ந்து மினு­வாங்­கொ­டையில் பாது­காப்பைப் பலப்­ப­டுத்­து­மாறு பொலி­ஸா­ரிடம் முஸ்லிம் வர்த்­த­கர்கள் வேண்­டிக்­கொண்ட போதிலும் மினு­வாங்­கொடை மற்றும் குளி­யாப்­பிட்­டிய பிர­தே­சங்­களில் கல­வரம் ஏற்­படும் வரைக்கும் இரா­ணு­வத்தை தளத்­துக்கு அனுப்­பாமல் அதி­கா­ரிகள் குருட்டுத் தன­மாக செயற்­பட்­ட­தாக குறித்த வர்த்­தகர் தெரி­வித்தார்.

சம்­ப­வங்­களை நேரில் கண்­ட­வர்கள் தெரி­வித்­ததன் அடிப்­ப­டையில் பார்க்­கும்­போது, ஒரு சில இடங்­களில் முப்­ப­டை­யினர் இருக்கும் போதே தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றி­ருப்­ப­துதான் இங்கு கேள்­விக்­கு­ரி­யதும் வேத­னைப்­பட வேண்­டி­ய­து­மான விட­ய­மாகும்.

மினு­வாங்­கொடை பள்­ளி­வாசல் கூட இரண்டு முறை தாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. மினு­வாங்­கொடை நகரைத் தாக்­கு­வ­தற்கு முன்­ன­ராக அங்­கி­ருந்த மது­பா­ன­சாலை ஒன்­றையே குண்­டர்கள் உடைத்­தி­ருக்­கி­றார்கள். அதி­லி­ருந்து மது போத்­தல்­களை அருந்தி தம்மை வெறி­யேற்­றிய பின்­னரே முஸ்­லிம்­களின் கடை­களை இலக்கு வைத்­தி­ருக்­கி­றார்கள்.

தாக்­குதல் நடத்­திய குழுவை தடுத்து நிறுத்­து­வது தவ­ற­வி­டப்­பட்­ட­தற்கு பொலி­ஸார்தான் முழுப்­பொ­றுப்­பையும் ஏற்க வேண்டும் என மினு­வாங்­கொ­டையின் பிர­பல உண­வ­க­மான பௌஸ் ஹோட்­டலின் உரி­மை­யாளர் ரி.ஐ. இஷாம் தெரி­வித்தார். “பொலிஸார் பார்த்­துக்­கொண்­டுதான் இருந்­தார்கள். தாக்­குதல் குழுவை கலைக்க அவர்கள் மந்தமாகவே செயற்­பட்­டார்கள்” என அவர் தெரி­வித்தார்.

விமான நிலைய வீதியில் உள்ள பௌஸ் ஹோட்டல் 1970 இல் இருந்து இயங்­கி­வ­ரு­கி­றது. விமான நிலை­யத்­துக்கு செல்­ப­வர்­களில் அதி­க­மா­ன­வர்கள் இந்த உண­வ­கத்தை அறிந்து வைத்­தி­ருப்­பார்கள். மினு­வாங்­கொ­டையில் வெசாக் நிகழ்­வு­க­ளுக்கு உதவி செய்யும் முக்­கி­யஸ்­தர்­களுள் ஒரு­வ­ராக இந்த உண­வ­கத்தின் உரி­மை­யாளர் இருக்­கிறார். இஷாம் தெரி­வித்­த­தன்­படி இந்த உண­வகம் 2 முறைகள் தாக்­கப்­பட்­டி­ருக்­கின்றன.

“முதல் குழு தாக்கி விட்டுச் சென்­றதன் பின்னர் சுமார் மாலை 6.15 மணி­ய­ளவில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எட்வர்ட் குண­சே­கர பொலி­ஸா­ருடன் எமது உண­வ­கத்­துக்கு வந்து பாதிப்­புக்­களை பார்­வை­யிட்டுச் சென்றார். நாங்கள் அவ­ருடன் பேசும்­போது வேடிக்கை பார்த்துக் கொண்­டி­ருந்த மக்கள் அவர் சென்று சில நிமி­டங்­களின் பின்னர் திடீ­ரென உண­வ­கத்தைத் தாக்­கி­னார்கள். எமது உயி­ரை­யா­வாது காப்­பாற்­றிக்­கொள்ள அங்­கி­ருந்து ஓடு­வதைத் தவிர எங்­க­ளுக்கு வேறு வழி­யி­ருக்­க­வில்லை” என நடந்த சம்­ப­வத்தை இஷாம் விவ­ரித்தார்.

மினு­வாங்­கொடை நக­ரி­லுள்ள கடை­களில் உள்ள பெயர்ப் பல­கை­களைப் பார்க்­கும்­போது “மொஹிதீன்” “பௌஸ்” போன்ற முஸ்லிம் கடைகள் சாம்­ப­ரா­கியும் “நிமாலி” “ஜயந்தி” போன்ற கடைகள் சேத­மின்­றியும் காணப்­பட்­டன.

இலங்­கையின் சமூக ஒரு­மைப்­பாடு தொடர்­பாக எதிர்­ம­றை­யான கதை­களே தெரி­விக்­கப்­படும் இந்தத் தரு­ணத்தில் இந்தச் சம்­ப­வத்தில் பாதிக்­கப்­பட்ட இஷாம் மற்றும் பௌஸ் ஹோட்­டலின் ஏனைய ஊழி­யர்­க­ளுக்கு சிங்­கள குடும்­பங்கள் தமது வீடு­களில் தஞ்சம் வழங்­கி­யுள்­ள­மை­யா­னது இன்னும் இலங்­கையில் சமா­தா­னத்­தையும் அன்­பையும் விரும்பும் மக்கள் இருந்­து­கொண்டு தான் இருக்­கி­றார்கள் என்­பதைக் காட்­டு­கி­றது.

“தாக்­குதல் தாரிகள் அகன்ற பிறகு சிங்­கள குடும்­பங்கள் தான் எங்­க­ளுக்கு ஒதுங்க இடம் தந்­தார்கள். எங்­க­ளது கடந்த காலங்­களில் எல்லா சமூ­கங்­க­ளு­டனும் எவ்­வ­ளவு ஆழ­மான உறவைப் பேணி­யி­ருக்­கிறோம் என்­பதை இது காட்­டு­கி­றது” என இஷான் குறிப்­பிட்டார்.

சிங்­கள கடை­களும் தாக்­கப்­பட்­டுள்­ளன

சந்­திம என்­பவர் மினு­வாங்­கொ­டையில் உள்ள பெரிய ஆடை­ய­க­மான “எக்­கோ”வின் உரி­மை­யாளர் ஆவார். இந்த ஆடை­ய­கத்­துக்கு சிங்­கள பௌத்த பெண்­ணொ­ரு­வரே உரி­மை­யா­ள­ராக உள்ள போதும் இதில் பணி­பு­ரி­ப­வர்­களுள் பெரும்­பா­லானோர் முஸ்­லிம்கள் ஆவர். தாக்­கு­தல்­தா­ரிகள் எக்­கோவின் முன் கதவை தாக்­கி­ய­போதும் அதற்கு தீ வைக்­க­வில்லை. முஸ்லிம் கடை­க­ளுக்கு வைக்­கப்­பட்ட தீ இந்தக் ஆடை­ய­கத்­துக்குப் பர­வி­யுள்­ளது. இதனால் ஆகஸ்ட் வரை விற்­ப­னைக்­கி­ருந்த கையி­ருப்பு அனைத்தும் தீயில் கரு­கி­யுள்­ளன.

“ நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை பாதிக்கும் வகையில் வர்த்­தக நிலை­யங்­களைத் தாக்கும் இந்தக் காடை­யர்­களின் செயல் முட்­டாள்­த­ன­மா­னது.  எனது கடையில் 20 மில்­லி­ய­னுக்கு மேல் நஷ்டம் ஏற்­பட்­டுள்­ளது. தீய­ணைப்புப் பிரிவின் உரிய நேரத்­திற்கு வந்­தி­ருந்தால் சேதத்தை குறைத்­தி­ருக்­கலாம்”  என சந்­திம தெரி­வித்தார்.

எம்.எச்.ஜே.பி.(பெரேரா (57) என்­பவர் கடந்த 10 வரு­டங்­க­ளாக புரு­ல­பி­டி­யவில் கண்­ணா­டி­யா­லான ஒரு கடையை நடத்தி வரு­கிறார். இவ­ரது மகள் முஸ்லிம் நபர் ஒரு­வரை திரு­மணம் செய்­தி­ருக்­கிறார். அது தான் இவ­ரு­டைய கடை தாக்­கப்­பட்­ட­தற்குக் காரணம் என நம்­பப்­ப­டு­கி­றது.

“எனது கடைக்கு வெளியே கிட்­டத்­தட்ட 20 மோட்டார் சைக்­கிள்கள் வந்­தன. அவர்கள் தாக்க முற்­ப­டும்­போது “நான் சிங்­க­ளவன், தயவு செய்து தாக்­கா­தீர்கள்” எனக் கத்­தினேன். எனது கெஞ்­சல்­களை அவர்கள் சிறிதும் பொருட்­ப­டுத்­தாமல் தொடர்ந்தும் எனது சொத்­துக்­களை அழித்­தார்கள்” என அவர் தெரி­வித்தார்.

உள்­ளூர்­வா­சி­களின் ஆத­ர­வுடன் வெளி­யாட்கள் தாக்­கி­யுள்­ளார்கள்

பெரும்­பா­லான தாக்­கு­தல்­தா­ரிகள் உள்­ளூர்­வா­சிகள் ஒரு சிலரின் பங்­க­ளிப்­புடன் அரு­கி­லுள்ள ஊர்­களில் இருந்து வந்­த­வர்கள் என பாதிக்­கப்­பட்ட குடும்­பங்கள் ஆழ­மாக நம்­பு­கின்­றன. பௌஸ் ஹோட்­டலில் தாக்­குதல் நடத்­தி­ய­வர்கள் ஏற்­க­னவே பல­முறை கண்ட முகங்கள் என இஷாம் தெரி­வித்­தி­ருந்தார்.

“தாக்­கு­தல்­தா­ரிகள் வெளி­யூரில் இருந்து வந்­த­வர்கள் என அனை­வரும் சொல்­கி­றார்கள். நான் ஒரு ஆண்கள் குழுவை அடை­யாளம் கண்டேன். அவர்கள் எங்­க­ளது கடையில் சாப்­பிட்­ட­வர்­கள்தான்” என இஷாம் தெரி­வித்தார்.

தனது உண­வ­கத்தின் கல்லாப் பெட்­டி­யி­லி­ருந்தும் தனது ஜீப்பில் இருந்தும் குறிப்­பிட்­ட­ளவு தொகைப் பணம் காணாமல் போனது பற்றி இஷாம் பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

“சி.சி.ரி.வி. கம­ராவில் தாக்­கு­தல்­தா­ரிகள் கடைக்குள் வந்து கம­ரா­வுடன் இணைக்­கப்­பட்­டுள்ள டி.வி. ஆர். வய­ரினை துண்­டிப்­பது வரைதான் பதி­வா­கி­யுள்­ளது. கல்லாப் பெட்­டியில் இருந்து கிட்­ட­தட்ட 85,000 ரூபா பணமும் லொக்­கர்­களில் இருந்து 200,000 ரூபா பணமும் திரு­டப்­பட்­டுள்­ளது. எனது ஜீப்­புக்குள் இருந்த சுமார் 300,000 பெறு­ம­தி­யான வெளி­நாட்டு நாண­யங்­களும் காணாமல் போயுள்­ளன” என இஷாம் தெரி­வித்தார்.

கல்­லொ­ழு­வையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட மொஹமட் நிஜாப்தீன் கோழிக்­கடை ஒன்றை திறப்­ப­தற்­காக வங்­கியில் இருந்து கடன் பெற்று குளி­ரூட்டி ஒன்றை வாங்கி ஒரு மாதம் கூட ஆக­வில்லை. தனக்கு ஒரே­யொரு வாழ்­வா­தா­ர­மாக இருந்த ஒன்றும் இல்­லாமல் போய் விட்­டதை எண்ணி அவர் விரக்­தியில் உள்ளார். “நான் அப்­போ­துதான் நோன்பு துறப்­ப­தற்­காக வேண்டி கடையை மூடினேன். ஒரு சிலர் கத்தும் சத்­தங்கள் கேட்­ட­போது எனது மனைவி எங்­க­ளுக்கு உணவு பரி­மாறிக் கொண்­டி­ருந்தார். வீட்டின் வெளிக் கதவு கூர்­மை­யான கத்­தியால் வெட்­டப்­பட்­டி­ருந்­தது. நாங்கள் வெளியே செல்­ல­வில்லை. எனது பேரன் அவ­னது தாயு­டைய பாது­காப்­புக்­காக கூடவே இருந்தான்” என நிஜாப்தீன் தெரி­வித்தார்.

எப்­போது இது முடியும் எவ்­வாறு இதற்கு நாம் முடிவு கட்­டலாம்?

புரு­லு­பி­டி­யவைச் சேர்ந்த பாதி­ரியார் டட்லி ஸப­ர­மது, அப்­பாவி முஸ்­லிம்கள் மீதான இந்தத் தாக்­குதல் எந்­த­வித அடிப்­ப­டையும் அற்­றது என்றார். “அர­சியல் கார­ணங்­க­ளுக்­கா­கவும் ஏனைய தேவை­க­ளுக்­கா­கவும் மக்­க­ளு­டைய உயிர்­களைப் பயன்­ப­டுத்தும் அனை­வரும் இந்தத் தாக்­கு­த­லுக்கு பொறுப்புக் கூற வேண்டும். இன­வா­தத்­துக்கு முன்னால் மக்­க­ளு­டைய உயிர் பொருட்­ப­டுத்­தப்­ப­டாத ஒன்­றாக மாறி­யுள்­ளது என அவர் தெரி­வித்தார். தமது சமூ­கத்தின் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­போதும் இலங்கை முஸ்­லிம்கள் தீவி­ர­வா­தி­களில் இருந்து தூர­மாகி இருக்கும் அதே­வேளை பிற சமூகங்களின் உதவியின்றி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார்கள். இப்போதுகூட நாட்டை பிரிப்பதுதான் தீவிரவாதிகளுடைய நோக்கம். இலங்கையில் உண்மையின் பக்கம் இருப்பவர்கள் பொறுமையிழந்து தீவிரவாதத்தைக் கடைப்பிடிக்கும் நிலைமையும் வரலாம்.

30 வருட கால யுத்தத்தில் இருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம்? கிந்தோட்டை, கண்டி மற்றும் அம்பாறை சமூக வன்முறைகளில் இருந்து நாம் எதனைக் கற்றுக் கொண்டோம் மீண்டும் நாட்டைக் கட்டியெழுப்ப எந்தவகையான கொள்கையைப் பயன்படுத்தப் போகிறோம்?

இலங்கை சனத்தொகையில் முஸ்லிம்கள் வெறும் 10 சதவீதமே இருக்கிறார்கள்.  இந்த சமூகம் இது போன்ற கறுப்புப் புள்ளியை எதிர்கொள்வது இது முதல் தடவையல்ல.இந்த வன்முறைகளைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நிலைமை மோசமடையாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.  -Vidivelli

No comments

Powered by Blogger.