Header Ads



பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக, உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்

குருநாகல், புத்தளம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இனவாத வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்தபோது, அவர்களில் பெரும்பாலானோர் அன்றாடம் தொழில்செய்து வாழ்க்கை நடாத்துபவர்களாகவே இருந்தனர். உதாரணமாக பெட்டிக்கடை, வண்டில் கடை, குடிசைக் கைத்தொழில் என சிறு சிறு வியாபாரங்களை செய்து வந்துள்ளனர்.

வன்செயலின் பின்னர் பலரின் ஜீவனோபாய திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு நிவாரணப் பொருட்களை மாத்திரம் வழங்குவதை விடுத்து, அவர்களின் தொழில்களை மீள ஆரம்பிப்பதற்கு அல்லது புதிய தொழில் தொடங்குவதற்கு மற்றும்ற வீடுகளில் அவசரமாக குடியேற்றுவதற்கு இந்த புனித ரமழான் மாதத்தில் உதவ முன்வாருங்கள்

பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கு சில தனவந்தர்கள் உதவிசெய்து வருகின்றனர். இதுதவிர, பள்ளிவாசல்களை புனரமைக்கும் பணிகளை வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் மக்கள் விரைவாக தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு நம்மால் முடியுமான உதவிகளைச் செய்வோம். 

நிவாரணம் தவிர்ந்த, ஜீவனோபாயம் மற்றும் மீள்குடியேற்றத்துக்கு தனிப்பட்ட ரீதியில் உதவிசெய்ய விரும்புவோர் firows@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொள்ளுங்கள். உங்களை பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக தொடர்புபடுத்துகிறோம். அதன்பின் நீங்கள் அவர்களுக்கு வேண்டுமான உதவிகளை செய்யமுடியும்.

No comments

Powered by Blogger.