Header Ads



நீ, என்ன இயக்கம்...?


பெண்கள் முன்னேற்றத்திக்கு நான் எதிரானவன் அல்ல! மறுபுறம் பெண் ஆளுமைகள் இயக்கரீதியாக வளர விரும்புபவனும் அல்ல! எனினும் ஏதோவொரு வகையில் பெண்ணுரிமை அல்லது இஸ்லாமியம் எனும் போர்வையில்  நாம்.....

வீட்டுக்குள்ளிருந்த பெண்களை ஆர்ப்பாட்டம் எனும் பெயரில் வீதிக்கு இழுத்துவிட்டோம் ....

ஆணொருவன் முன்னாலே பேச வெட்கப்பட்ட பெண்ணை மேடைபோட்டு பேசவைத்தோம்...

இக்கட்டான நிலைமையிலும் வீட்டைவிட்டு வெளியில்வர பயந்தபெண்ணை கண்டதெற்கெல்லாம் வீதிவழியே இழுத்துவிட்டோம்...

இஸ்லாத்ததை கேட்டுக்கடைப்பிடித்து வாழ்ந்த பெண்ணையெல்லாம் இஸ்லாமிய சட்டங்களுக்காக டீவீ வழியே விவாதிக்கவிட்டோம்.

திரைபோட்டு நடந்த நிகழ்வெல்லாம் இஸ்லாமென்னும் பெயர்கொண்டு திரைநீக்கி சகஜமாய் உலவவிட்டோம்....

பக்குவத்தின் உச்சகட்டம் புர்கா என்றோம். ஆனால் உரிமைகளை விட்டுகொடுக்கமாட்டோமேன்று ஆடம்பர உணவகங்களிலும் புசிக்கவிட்டோம்..

இவைகள் சரியா பிழையா என்று உடனே நாம் விவாதிக்க முற்படாதிருப்போம். எது எப்படியோ இயக்கம் எனும் பெயரில் நீ ...;

மாற்றுமக்கள் மத்தியிலே நம்பெண்கள் பற்றியிருந்த நல்லெண்ணத்தை தகர்த்துவிட்டாய்.. தவிடுபொடியாய் உடைத்துவிட்டாய்.

எமக்குள்ளே எம் பெண்களும் இப்படியா என்ற தவிப்பை ஏற்படுத்திவிட்டாய். ஆறாத வடுவை வரலாற்றிலே உண்டுபண்ணிவிட்டாய்...

தலைநிமிர்ந்து வாழ்ந்த பெண்ணை IS வைரஸ் ஊட்டி அழிவை காட்டிவிட்டாய்...முழுப் பெண்களும் பயத்துடன் நடந்திடச் செய்துவிட்டாய்

காலடியில் சுவர்க்கம் கொண்ட பெண்ணை காலக்கெடுவுக்குள் நெறிபிரளச்செய்து மறுமைவரை தடம்புரண்டு மாண்டுபோக வைத்துவிட்டாய்...

காய்க்கும் மரத்திற்கே கல்லும் பொல்லும் என்று எதிர்கொண்ட சமூகத்தை அடியோடு சாய்க்க தந்திரமாய் செயற்பட்டுவிட்டாய்...

சுவர்க்கம் செல்ல மிக இலகு வழி இதுவென்று ஈமான் இல்லாது ஷுஹதா அந்தஸ்தை அடைய நீ கண்ட மடத்தனமான பாதையில் பயணித்துவிட்டாய்!

யாரேவேனின் காய் நகர்த்தலோ, எந்நாட்டின் தந்திரமோ ஒன்றும் எதுவென்று புரியவில்லை.. முஸ்லிம் பெயர்தாங்கி - மந்திரத்துக்கு கட்டுப்பட்டாற்போல் நீ செய்த வேலையை மட்டும் மன்னிக்க முடியவில்லை. ஏன் முயலவுமில்லை.!

புரிந்துகொள்...! நிச்சயமாக கப்ரில் உங்களுக்கும் அவர்களுக்கும் ஏன் எங்களுக்குமில்லை; நீ என்ன இயக்கம் என்றொரு கேள்வி...

தெஹியங்க - ரிஸ்வான் எம் உஸ்மான் 

No comments

Powered by Blogger.