May 11, 2019

பயங்கரவாதிகள் இஸ்லாமியர்கள் அல்ல, என்று எப்படிச் சொல்வது...? இப்படிக் கேட்கிறான் ஜெயசிறில்

இந்த அரசாங்கம் தமிழ் மக்களைத் தண்டிப்பதில் மாத்திரமே எப்போதும் குறியாகவுள்ளது, மாறாக இஸ்லாமிய பயங்கரவாதத்தை உரம் போட்டு வளர்க்கிறதா என்ற சந்தேகம் எழுகின்றது.

நடந்து முடிந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை இன்னும் கைது செய்யாதது ஏன் என காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கே.ஜெயசிறில் கேள்வி எழுப்பியுள்ளார்.

காரைதீவு பிரதேச சபையின் நூலக கேட்போர் மாநாடு கூடத்தில் நேற்று ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலால் மக்கள் பய பீதியுடன் உள்ளனர். குறிப்பாக சுற்றிவர 3 முஸ்லிம் ஊர்களுக்கு மத்தியிலுள்ள காரைதீவுக் கிராம மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கடற்கரை வீதியால் ஏராளமான மக்கள் செல்கிறார்கள். கஞ்சா செல்கிறது. அபின் செல்கிறது. அதே வீதியில் தான் பொலிஸ் உபநிலையமும் உள்ளது. கடற்படை முகாமும் உள்ளது. ஆனால் இவற்றைச் சோதனை செய்வதே கிடையாது.

இக்கிராமத்திற்கு உரிய பாதுகாப்பை இவர்கள் செய்யவில்லையென்றால் எதற்காக இங்கு குடிகொள்ள வேண்டும்?

ஆலயங்களுக்கும் கிராமத்திற்கும் பாதுகாப்பு வழங்குமாறு என்னிடம் தர்மகர்த்தாக்கள், அதிபர்கள், பொது பிரமுகர்கள் கேட்கிறார்கள். நான் பல தடவைகள் பொலிஸாரிடம் கேட்டும் இன்னும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. தேவாலயம் முன்னால் நிறுத்தப்படும் கல் மண் ரிப்பர்களால் ஆபத்து என மக்கள் முறையிடுகின்றனர்.

இதனை சம்மாந்துறைப் பொலிஸாரிடம் தெரிவித்தால் அவர்கள் ஏறெடுத்தும் பார்க்கிறார்களில்லை.

காரைதீவு தென் வட எல்லையில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும். காரைதீவின் பாதுகாப்பு தொடர்ந்து உதாசீனம் செய்யப்பட்டால் நாம் அஹிம்சை வழியில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டி நேரிடும்.

ஆளுக்கொரு சட்டமா?

விடுதலைப் புலிகள் பற்றி உச்சரித்ததற்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் பதவி பறிக்கப்பட்டது.

ஆனால் இரத்த ஆறு ஓடும். காளிகோவில் இடித்து மீன்சந்தை கட்டினேன். நீதிபதியை இடம் மாற்றினேன் என்று தனது வாயால் வாக்குமூலம் கொடுத்த ஆளுநரை இன்னும் கைதுசெய்யாதது ஏன்?

மக்களால் நிராகரிக்கப்பட்ட அவரை ஆளுநராக்கிய ஜனாதிபதி இன்று அவரைப் பாதுகாக்க முற்படுகிறாரா? புலிகளின் போராட்டம் நியாயமானதென அவரே கூறுகின்றார். மக்களென்றால் சமநீதி வழங்கப்பட வேண்டும். விஜயகலாவிற்கு ஒரு சட்டம்? ஹிஸ்புல்லாவிற்கு இன்னொரு சட்டமா? இதுதானா நீதி?

கிழக்கில் அரசவிரோத இஸ்லாமிய பல்கலைக்கழகமொன்று அவரால் பலவருடகாலமாக அனுமதியின்றிக் கட்டப்பட்டு வருகிறது. இதனை அரசாங்கம் கண்டுகொள்ளாதது ஏன்? பலகோடி ரூபாய் பரிமாறப்பட்டிருக்கிறது.

இந்த விடயத்தை ஒரு ஊடகம் மாத்திரமே அம்பலமாக்கிக் கொண்டிருக்கிறது. ஏனைய ஊடகங்கள் இதனைக் காணாதது ஏன்? ஊடகதர்மம் பேணப்பட வேண்டும்.

இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் தளமாக இன்று கிழக்கு மாறியுள்ளது. ஆயுதங்கள் பிடிபடுவதும் கைது செய்யப்படுவதும் முஸ்லிம்களே.

நிலைமை இப்படியிருக்க பயங்கரவாதிகள் இஸ்லாமியர்கள் அல்ல என்று எப்படிச் சொல்வது? நான் இனவாதம் பேசவில்லை. நியாயம் ஒன்றிருக்கிறது. கொள்கையுடன் இயங்கிய புலிகள் பயங்கரவாதிகள்? கொள்கையின்றி மிலேச்சத்தனமான தாக்குதலைச்செய்த இஸ்லாமியப் பயங்கரவாதிகள் வெறும் குழுவினர்.

நீண்ட போராட்டத்தை இந்த நாட்டில் நடத்தி பல துன்பங்களை இழப்புகளை அனுபவித்தவர்கள் தமிழர்கள். அன்று தமிழர்கள் அனைவரும் நடத்தப்பட்ட விதம் வேறு. மழையிலும் வெயிலிலும் சித்திரவதை சுற்றிவளைப்பென்றால் சாவா? வாழ்வா? என்ற நிலை.

உயிரைக் கையிலெடுத்து அலைந்தனர் தமிழர்கள். இதனை அன்றும் செய்திருக்க வேண்டும். தமிழர்கள் அடிமாடுகள் போல் நடத்தப்பட்டார்கள்.

ஆனால் இன்று மிககண்ணியமாக சுற்றிவளைப்பு கெடுபிடியின்றி நடக்கிறது. அதனையே மனித சமுதாயம் விரும்புகிறது. வெறும் கத்தியையும் கோடரியையும் எடுத்து உலக நாடுகளுக்கு படம் காட்டுகிறார்களா?

இந்த நாட்டில் மூவின மக்களும் உண்மையான சுதந்திரத்துடன் இனநல்லிணக்கத்துடன் வாழ வேண்டுமாக இருந்தால் அரசியலை மையப்படுத்தாமல் வாக்குகளை மையப்படுத்தாமல் நீதியாக நேர்மையாக இதயசுத்தியுடன் இப்பிரச்சினையை அணுகி தீர்வுகாணுங்கள்.

உண்மையான குற்றவாளிகள் இனங்காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

6 கருத்துரைகள்:

பயங்கரவாதிகளை ஆதரிக்காத முஸ்லிம்களை எப்படி பயங்கரவாதி என்பது. Ltte பன்றிகளை ஆதரிக்கும் தமிழ் பயங்கரவாத நாய்களை எப்படி தீவிரவாதிகள் என்று சொல்வது? இராணுவத்திற்கு தெரியும். நாட்டை சுடுகாடாக்கிய பயங்கரவாத தமிழ் பேய்கள் மூடிக்கொண்டிருந்தால் போதும்

உங்களது அற்ப புத்தியும் மிதமிஞ்சிய பெறியாள்பத்தும் பேச்சுமே உங்களை தொடெர்ந்தும் இந்த நிலையில் வைத்துள்ளது.
புலிகளின் பிரதேச கோட்டையாக காரைதீவை வைத்திருந்த நீங்கள் இப்போ பயங்கரவாதத்தை பற்றி எப்படி பேசலாம்?
முஸ்லிம் பெயர் இருந்தால் அணைவரும் முஸ்லிமாகிவிட முடியாது. ISIS ஒரு இஸ்லாமிய இயக்கமும் அல்ல.எப்படி புலிகளை வைத்து இந்து மக்கள் வேறு என்று பிறித்தீர்கள்? இந்துக்கள் எல்லாம் புலிகளாகுமா? ஆம் என்றால் ISIS எல்லாம் முஸ்லிம்கள்தான்.

What kind of precious statements! Superb

டேய் துவேச நாயே,அப்படியென்ரால் நீயும் புலிப் பயங்கரவாதி உன்னையும் கைது செய்யவேண்டும்,உனது பதவியையும் பறிக்க வேண்டும்

அப்பனே, தாங்கள் இனவாதம் பேசவில்லை என்று கூறுகின்றீர்கள். உண்மைதான். நீங்கள் இனவாதமே பேசவில்லை. நல்ல காலம் இந்த நாட்டில் ஐனநாயக ஆட்சி நடக்கின்றது. பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் வாழும் சுதந்திரம் என்று பல்வேறு வகையான சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் நன்முறையில் எழுதிவிட்டு தப்பினேன் பொழச்சேன் கடவுளே என்று சாந்தி அடைந்து கொள்வோம். காரைதீவினை தனிநாடாக்கி அதற்குத் தங்களை ஐனாதிபதியாக்குவதற்கு எங்கள் ஆசிகள்.

we Muslim protected them during the wartime.He forgot all.

Post a Comment