May 14, 2019

முஸ்லீம் வீடுகள், வியாபார ஸ்தலங்கள், பள்ளிவாசல்கள் மீதான காடையர்கள் தாக்குதல் ; த.தே.கூ.கவலை

கடந்த இரண்டு நாட்களாக முஸ்லீம் வீடுகள், வியாபாரஸ்தலங்கள், பள்ளிவாசல்கள் காடையர் தாக்குதலுக்குள்ளாகிற செய்திகளினால் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு மிகுந்த கவலையடைவதாக தெரிவித்து ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த இரண்டு நாட்களாக முஸ்லீம் வீடுகள், வியாபாரஸ்தலங்கள், பள்ளிவாசல்கள் காடையர் தாக்குதலுக்குள்ளாகிற செய்திகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலையடைகின்றது.

ஊரடங்குச் சட்ட நேரத்திலும் பாதுகாப்பு படையினர் இந்த வன்செயல்களை தடுப்பதற்கு உகந்த நடவடிக்கை எடுக்காமலிருப்பது கண்டனத்துக்குரியது.

வன்முறையாளருக்கெதிராக உடனடியானதும் கடுமையானதுமான நடவடிக்கைகளை அதிகாரத்த்திலுள்ளோர் எடுக்க வேண்டும் என்று கோருகிறோம். 

அரசாங்கம் தம்மை பாதுகாக்க தவறுகிறது என்று மக்கள் நினைத்தால் அவர்கள் தம்மை தாமே பாதுகாக்க தலைப்படுவார்கள். இப்படியான சூழ்நிலையை அனுமதிக்க வேண்டாம் என்று நாம் அரசாங்கத்தை கேட்டுக் கொள்ளுகிறோம். 

இந்த நாட்டில் தான் சுயமாக வாழ்வதற்கு போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும் என்று இன்னுமொரு சமூகத்தையும் நினைக்கத் தூண்டாதீர்கள். கிறிஸ்தவ ஆலயங்களைத் தாக்குகின்ற பயங்கரவாதம் என்றாலும் சரி, பள்ளிவாசல்களை தாக்குகின்ற பயங்கரவாதம் என்றாலும் சரி - எவ்விதமான பயங்கரவாதத்திற்கு இந்த நாட்டிலே இடமிருக்கக் கூடாதென அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

7 கருத்துரைகள்:

சும்மா ரீல் விடாதீர்கள் 1915 ம் ஆண்டில் உங்களை எனக்குத் தெரியும்.இப்போ பல அரசியல் தரப்புகளுக்கும்,முன்னால் புலிப் பயங்கரவாதிகலும் இப்படியான எமக்கெதிரான கலவர செய்திகள் உங்கள் காதுகளில் தேன் பாயுமே.அதனால்தான் ஒரு தமிழ் அமச்சர் தினமும் புலம்பினார் 1983 ஜுலை இடம் பெறவில்லை என,இனியாவது அவர் நிம்மதியாக தூங்கலாம்

இந்த அழிவுகளின் பின்னால் ஏனும் கசப்புகள் கழைந்து இவ்விரு சமூகங்கள் ஒன்றிணையுமாயின் இலங்கையில் வெற்றி பெற்ற சமூகமாக வாழ முடியும். இரு பக்கத்திலுமுள்ள தீவிர போக்குடைய அரசியல் வாதிகள் விடமாட்டார்கள்.

ungaluku sandhosamda mahanadihangalda neenga

உங்களது கபடத்தனமான கவலைகளும், உள்ளூர கொள்ளும் மகிழ்வும் எங்களுக்கு புரியும்.. நாங்கள் இன்னும் இன்னும் ஏமாறும் கோமாளிகளல்ல..

இவை அனைத்திற்கும் பின்னணி இலங்கையில் இயங்கும் இந்திய சிவசேனா (இந்துவா தீவிரவாதம்) அமைப்பே!

டேய் கூட்டமைப்பே உங்களுக்கு ஏன்டா தேவை இல்லாத வேலை. எவன் அடிபட்டு செத்தா உங்களுக்கு என்ன.

இனவாதி யோகஸ்வரன் 83 ஆம் ஆண்டைப்போல் ஒரு கலவரம் வரவில்லையே என்று எப்படி கத்தினான்? உங்கட படம் எஙகளிடம் ஓடாது. நீங்கள் உதவிக்கு வரப்போறவர்களும் இல்லை

Post a Comment