Header Ads



எனது வட்டிலாப் பத்துக்கும், புரியாணிக்கும் பல் இழித்தவன்

என் தேசம்
எறியும் இரவுகளில்
எழுதுகிறேன் !

எனது வட்டிலாப் பத்துக்கும்
புரியாணிக்கும்
பல் இழித்தவன்
பாதையில் மறித்து
சோதனை செய்கிறான் !

தான் கத்துவதை நிறுத்தி
அதானுக்கு
மரியாதை செய்தவன்
பள்ளியில் கத்துவதை
நிறுத்தச் சொல்கிறான் !

அபாயாவை சரி கண்டவன்
இன்று
ஆபத்தென்கிறான் -
அருவெருக்கிறான் !

தாடிகளோடு கூடி 
தம்பட்டம் அடித்தவர்கள்
காத தூரம்
ஓடி நிற்கிறார்கள் !

விட்ட குறை -
தொட்ட குறை
இனி _ தொடரும் !

எங்க விட்டோம் பிழை ?
திருத்திக் கொள்வோம்
தப்பில்லை !

எங்கள்
தப்புத் தன்டாக்களை
சரி செய்யத் தானே
நாம்
வட்டிலாம்பம்.கொடுத்தோம் !

வரம்பு மீறி -
உழ்ஹியாவைக் கூட
காபிருக்கு கொடுத்தோம்
நாம்
மாடறுப்பதை அவன்
தடுத்துவிடக் கூடாதென் பதற்காக !

நாள் முழுக்க
பசித்து , தாகித்து
நோன்பிருந்து
காபிருக்கு முதலில்
கஞ்சி கொடுத்து
இப்தாரை கொன்டாடினோம் !

அல்லாஹ்வின் சட்டம் தவிற
மற்றெல்லாச் சட்டங்களும்
செல்லாதென்று தெறிந்தும் -
அரசியல்வாதிகளை
கூட்டி வந்து
பள்ளிக்குள் மன்றாடினோம் !

வளைந்து கொடுத்த தன்
விளைவு .....
நிமிர்ந்து நிற்க வேண்டிய
நேரத்தில்
நிமிர முடியவில்லை !

இனி .......
குட்டவரும் கைகளுக்கு
மோதிரம் செய்து கொடுக்க
வேண்டி வரும் !

உதைக்கும் கால்களுக்கு
சப்பாத்து வாங்கிக் கொடு !

எனதும் , உனதும்
முரண்பாடுகளை
தீவிரவாதமாய்
திரையிட்டுக் காட்டியது
நீதானே ?!

இலாப நஷ்டக் கணக்கில்
சரிசமமாய்
நஷ்டம்
நம்மிருவருக்கும் !
ஆயின்......
இலாபம் யாருக்கு !??

உனது பெயர் அஹமது -
எனது பெயர் முஹமது -
நானும் நீயும்
கோபம் கொன்டதில லாபம் அடைந்தது சிரிசேனா ?
நான் சரிதானா ???

சும்மா அடித்துக் கொள்ளாமல்
ஒரே -உம்மாவாய் -
சில பல
கருத்து முரண்பாடுகளை
விட்டு விட்டு
காரியத்தில்
கவனம் வைப்போம் !

முன்னுக்கு
வாழ வேண்டும்
நம் பிள்ளைகள் -

நாம் பிறந்து
இறந்து போன
இந்த நாட்டில் தான் !

கம்மல்துறை எம்மெல் .ஷரான்

2 comments:

  1. சூப்பர் ஐயா!

    ReplyDelete
  2. We musllims also partially responsible for the current status of muslims

    ReplyDelete

Powered by Blogger.