Header Ads



முஸ்லிம் சமூகம், நழுவி ஓடக்கூடாது


ஒரு மிகப் பெரிய அழிவு, எமது சமூகத்தின் பெயரால் அரங்கேறி இருக்கிறது, அல்லது  சமூகத்தில் சிலர் அரங்கேற்றி இருக்கிறார்கள்.

ஒன்று ::
இந்த வேலயை செய்தது NTJ. 
நாங்க அவை ஒன்றிலும் இல்லை.
நாம் அவர்களை அப்போதே எதிர்த்தோம்
பேஸ்புக் போஸ்ட் போட்டோம்
ஆர்ப்ப்பாட்டம் செய்தோம் என்று 
தப்பித்துக்கொள்வது.

இரண்டு::
முஸ்லிம் ஊர்களில் நடக்கும் தேடல்கள், 
பாதுகாப்பு நடவடிக்கைகள், கைதுகள்
அனைத்தையும் கிண்டல் செய்வது
மீம்ஸ் தயாரிப்பது.

மூன்று ::
எப்போதும் இனவாதம் பேசும் ஊடகங்கள்தான்
இவை எல்லாவற்றுக்கும் காரணம் என்று 
அவர்களை பேஸ்புக்கில் ஓட்டிக் கொண்டு 
இருப்பது.
நான்கு::

"நிகாப் என்றால் என்ன"
"இஸ்லாம் கூறும் பெண்களின் ஆடை"
இப்படி பழைய புராணங்களையே 
இந்த நேரத்திலும் பாடிக் கொண்டு இருப்பது.

மூன்று தேவலயங்களை  முன்நூறுக்கும் அதிகமான  உயிர்களை பரிகொடுத்த ஒரு சமூகம் அமைதியாய் அழகாய் ஒரு தலைமைத்துவத்தின்கீழ் நெறிப்படுத்தப்படுகின்றது.

ஆனால் இந்த அழிவிற்கு காரணம்,  என்று சொல்லப்படுகின்ற ஒரு சமூகம்  இன்னுமும் இயக்க சண்டையும் உரிமைப் போராட்டமும் நடத்திக் கொண்டு இருக்கின்றது.

"தீவிரவாதிகளுக்கு மார்க்கம் இல்லை" என்று முஸ்லிம் சமூகத்துக்கு இந்தப் பிரச்சினையில்  இருந்து இலகுவாக விலகிக்கொள்ள முடியாது.

தீவிரவாதிகள் எமது மார்க்கத்தில்இருந்துதான்  உருவாகி இருக்கிறார்கள். அதற்கு  எமது மார்க்கம் காரணமில்லை என்பது  உண்மையாக இருக்கலாம். 

ஆனால் இப்படியானவர்கள் உருவாக நம் சமூகமும் ஒரு காரணம்,   என்பதை மறுக்க முடியாது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது,
இனியேனும் இயக்க வேறுபாடுகளுடன் பயணிக்காமல் ஒற்றுமையாக பயணிப்பது,
மூளை சலவை செய்யப்பட்டவர்களை இணங்கண்டு அவர்களுக்கு வழிகாட்டுவது,
ஒரு தேசத்தின் நம்பிக்கைக்கு உரியவர்களாக
வாழ்வது எப்படி என்ற வியூகங்களை வகுப்பது,

இவைதான் எமது முன்னால் இருக்கும் பெரும்பணிகள்,  மாறாக நாம் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறோம்  என்ற நினைப்பில் எல்லாவற்றையும்  கேலிக்கு உட்படுத்துவதல்ல.

Safwan Basheer

3 comments:

  1. மிகவும் சரியாகச் சொன்னீர்கள் Mr. Safwan தேசத்துடன் ஒத்துப் போக வேண்டும். முகம் மூடுவதால் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றால் அதில் உண்மை இருந்தால் இஸ்லாத்தில்விட்டுக் கொடுக்க இடம் இருந்தால் நாங்களாகவே முன்னின்று அதனைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அடக்க சட்டங்கள் வரும். தடுக்க முடியாது. தேசத்தின் கொள்கைகள் ஒன்றிருக்க நாங்கள் ஒரு திசையில் செல்ல முடியாது. இதே போன்று பல விஷயங்கள் வெள்ளிகிழமைகளில் அரசாங்கம் எங்களுக்கு ஒரு வேலையும் தரக்கூடாது ஏனென்றால் நாங்கள் பள்ளிக்கு போகவேண்டும். வட்டியுடன் சம்பந்தப்பட்ட எந்தத் தேசிய திட்டமும் எங்களுக்கு ஒத்துப்போகாது அதில் எங்களுக்கு மாற்று திட்டங்கள் கிடையாது, நோன்பு வந்தால் ஒரு வேலையும் எங்களுக்குத்தரக்கூடாது ஏனென்றால் நாங்கள் நோன்பாளிகள். நாம் எங்கே இருக்கிறோம்.

    ReplyDelete
  2. இயக்கவாதிகள் அதாவது இயக்க வெறியர்கள் அனைவரும் மூலை சலவைசெய்யப்பட்டவர்கள் தான்.
    இவர்கள் இஸ்லாத்தை வளர்ப்பதை விட்டு இயக்கங்களை வளர்த்து நம் சமூகத்தை கூறு போட்டதுதான் மிச்சம்.

    ReplyDelete
  3. Timely advice... hope every one will agree with this advices and act upon ...

    ReplyDelete

Powered by Blogger.