May 28, 2019

டொக்டர், ஷாபித் தம்பியின் கவனத்திற்கு

நீ மதத்தில் தீவிரமானவன் என நான் அறிவேன், 
ஆனால், மதத் தீவிரவாதியாக உன்னை நான் அறிந்ததில்லை.

நீ சுறுசுறுப்பானவன், ஓய்ந்திருந்து உனக்குப் பழக்கமில்லை.
20 நிமிடங்களில் சிசேரியன் ஒன்றை கச்சிதமாக முடிக்கும் உன்னாற்றல், மாடறுத்த மடுவம்போல அறுத்து அளைவபருக்கு ஒவ்வாமைதான்.

ஓயாமல் தினம் நீ கத்தி பிடித்திருந்தாலும், கிட்டத்தட்ட ஏழரை வருடங்கள் எடுத்திருக்கும் எண்ணாயிரம் வயிறு கிழிக்க.

ஏழரை வருடங்களும் சுற்றி நின்ற ஆறு சோடிக் கண்களிலும் மண்ணைத் தூவி நான்காயிரம் சோடி பலோப்பியன்களை நீ சிதைத்துவிட்டதாக எங்களை நம்பச் சொல்கின்றார்கள்.

உழைப்பதையெல்லாம் ஊதாரித்தனமாய் குடித்துக் கும்மாளமடித்து வங்கிக்கு வட்டி கட்டி விளங்காமல் போனவர்கள் உன் செழிப்புக் கண்டு கண்ணுறுத்தல் கொண்டார்கள்.

யாரோ விசாரிக்க வேண்டிய உனை, யார்யாரோ கைது செய்கின்றார்கள்.

சொத்து என்ன நீ மட்டும்தான் சேர்த்தாயா, 
ஊரூராய் முளைத்திருக்கும் கருக்கொலை கிளினிக்குகள்தான் எத்தனை?

ஆண்டாண்டாய் பொத்திக்கிருந்தவர்கள் திடுதிப்பென உன் மீது பொத்துக்கொண்டு பாய்ந்ததென்ன?

உன் திறமையை
உன் வளர்ச்சியை
உன் செல்வாக்கை
கண்டு அஞ்சுகின்ற ஒரு பிசாசுகளின் வலைக்குள் நீ சிக்க வைக்கப் பட்டிருக்கின்றாய்.

உன்னை விசாரிக்க குழுக்கள் அமைக்கப் பட்டிருக்கின்றனவாம். சந்தோஷப்படாதே.
அவை உன்னில் குற்றம் பிடிக்க மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்கலாம்.

இந்த உலகம் வினோதமானது.

உன்னால் ஆனவர் எவரும் உனக்காக வாய் திறக்க மாட்டார்கள். ஆனால் உன்னை ஆகாதவர்கள் அத்தனை பேரும் முரசறைவர்.

பலோப்பியனை விரலிடுக்கில் நசுக்குவதால் சிதைக்கலாம் என்று சில மகப்பேற்றாளர்களே உனக்கெதிராக வாக்குமூலம் கொடுப்பது உன் காதுகளில் விழுகின்றதா? ஏதேனும் ஒரு மருத்துவ ஏட்டிலேனும் நீ இதை வாசித்ததுண்டா?

நீ வைத்திருக்கும் பணமல்ல, ஐம்பத்தேழாயிரம் வாக்குகள் தான் உன்னை இலக்கு வைக்கச் செய்திருக்கின்றது.

ஊரட‌ங்கு நேரத்தில் படையினர் காவலில் கோரத் தாண்டவமாடியவர்களுக்க சாதாரண சட்டத்தில் வழக்கெழுதி பிணை கொடுத்து, விபரமறியாப் பெண்ணை பயங்கரவாதியான வழக்கெழுதி பிணை மறுக்கும் ஆசியாவின் ஆச்சரியத்தில் உன் விடயம் இலகுவானதாக இருக்கப் போவதில்லை.

குகைக்குள் மூவர் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?

உன் நெற்றித் தழும்புகளையும் 
உன் நோன்புகளையும்
உன் தர்மங்களையும் முன் வைத்து 
வல்லமை கொண்டவன், 
இரக்கமுள்ளவன், 
சதிகாரர்களைச் சூழ்ந்து கொள்பவன் அல்லாஹ்விடம் நீ மன்றாடு. 
அவனை அழைப்பவருக்கு அவன் பதிலளிக்காமல் விடுவதில்லை.

அவர்களை அவன் பார்த்துக் கொள்ளட்டும்.

- Dr Aqil Ahmad Sharifuddeen -

12 கருத்துரைகள்:

மெய் மறந்து போய் விட்டேன் டாக்டர் ஆகில் அஹமத் ஷரிஃயூதீன் !! வாழ்த்துக்கள்

YA ALLAH PROTECT US FROM OUR ENIMEI.

Dr. AQEEL OHH IT IS VERY EXITING ARTICLE. MANY MANY THANKS FOR YOUR WRITING IN A DIFFERENT WAY.

நீங்கள் யாரென்று தெரியாது .ஆனால் இப்பொழுது எல்லாம் தினமும் எனது துஆ வில் docter safi எனும் பெயர் சேர்க்கப்படுகிறது

This land has became a great test field for all TRUE MUSLIMS.

Dear Muslims... Satisfy Allah the creator of All human and universe every moment. He is testing your EEMAN, stay firm with your SHAHADA.

Sayateens and his allies are trying their best to shake your belief in Allah. you may compromise matters of world due to the fear as happened in Minuwangoda. But do not compromise your DEEN with Kuffar.

Allah will protect all the GOOD People surely.

We Love Peace and We Fear Allah alone.

Justice will prevail,

Nice and clear face of ignorants

ஸியோனிஸ்ட்டுகள் சிங்கள மோடயன்களை வைத்து உங்களை ஆயுதம் ஏந்த வைக்கும் வரை இது முடிவுக்கு வராது, ஹராமான பொருளீட்டலில் வெளியே வாருங்கள், அஹ்லாக்குகளை அன்னியவருடன் காட்டுங்கள், பொறுமையை கொண்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்து வெற்றி பெறுவோம்

ஸியோனிஸ்ட்டுகள் சிங்கள மோடயன்களை வைத்து உங்களை ஆயுதம் ஏந்த வைக்கும் வரை இது முடிவுக்கு வராது, ஹராமான பொருளீட்டலில் வெளியே வாருங்கள், அஹ்லாக்குகளை அன்னியவருடன் காட்டுங்கள், பொறுமையை கொண்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்து வெற்றி பெறுவோம்

Post a comment