Header Ads



டாக்டர் ஷாபி மீது மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை வழங்க வேண்டும்

வைத்தியர்  சேகு  சிஹாப்தீன் மொஹமட்   ஷாபி மீது  சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்  100 சதவீதம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் அவருக்கு  மரண  தண்டனை வழங்கி,தண்டணையினை   காலம் தாழ்த்தாது நிறைவேற்ற வேண்டும். 

வைத்திய துறை இன்று  பல கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும்,பொதுஜன பெரமுனவின்  மகளிர்  சங்க தலையியுமான கோகிலா ஹர்ஷனி  குணவர்தன தெரிவித்தார்.

பொதுஜன  பெரமுனவின் தலைமை காரியாலயத்தில்  இன்று -30- இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குருநாகல் வைத்தியசாலை விவகாரம் இன்று  பல குடும்பங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.வைத்தியர்கள் மீது  உள்ள நம்பிக்கை   வீழ்ச்சியடைந்துள்ளது. 

 இதுரையில் வைத்தியர் ஷாபிக்கு எதிராக 238 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

இந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை  அதிகரிக்கும் அளவிற்கு  தற்போதைய நிலைமை காணப்படுகின்றது. ஒரு தாய் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா, அல்லது   கூடாதா என்பதை தீர்மானிக்கும் உரிமை வைத்தியர்களுக்கு கிடையாது.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய  சுகாதர அமைச்சர் ஒரு குழுவினை நியமித்துள்ளார்.இந்த குழுவின்  அறிக்கை   எந்தளவிற்கு  சுயாதீனமாக அமையும் என்று எதிர்பார்க்க முடியாது. 

2015ம் ஆண்டுக்கு பிறகு அரசாங்கம் ஒரு பிரச்சினைகளுக்கு  தீர்வு  காண குழுவை நியமிக்கும்,  விசாரணைகளும்  இடம் பெறும்.  ஆனால் எவ்வித தீர்வும் கிடைக்கப் பெறாது.  உதாரணமாக  மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியினை குறிப்பிடலாம். அரசியல்வாதிகளின் மோசடிகளை  மூடிமறைத்து குற்றவாளிகளை  பாதுகாக்கும் நோக்கில்  அமைக்கப்பட்ட குழு போல  இந்த  குழுவின் செயற்பாடுகள் காணப்பட இடமளிக்க முடியாது. 

அனைத்து வைத்தியர்களின் மீதும்  இன்று  காணப்படுகின்ற சந்தேக பார்வை தீர்த்து வைக்கப்பட வேண்டுமாயின் உண்மைகள் மக்களுக்கு  ஆதார பூர்வமாக பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.