Header Ads



மனோ கணேசன் அவர்களே, கேட்டுக் கொண்டிருப்பவனெல்லாம் கேணயன் என எண்ண வேண்டாம்...!

- Aqil Ahmad Sharifuddeen -

அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் புவக்பிட்டிய முஸ்லிம் ஆசிரியைகள் விடயத்தில் மகராஜா ஊடகங்களுக்கு ஒப்பாக நடந்து கொள்கின்றார்.

ஆசிரியைகளை பாடசாலைக்குள் நுழைய விடாமல் தடுத்த சம்பவத்தின் போது 'கைப்பைச் சோதனை' பற்றிய எவ்வித வாதப் பிரதிவாதங்களும் இடம் பெற்றிருக்கவில்லை என்பதற்கு சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட காணொளியே சாட்சியாகும்.

அதில் ஆசிரியைகளின் உடை தொடர்பான உரையாடல் மாத்திரமே இடம் பெறுகின்றது. சேலை அணிந்து வரும் ஆசிரியைகளையே பாடசாலைக்குள் அனுமதிப்பது என பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் தீர்மானிக்கப் பட்டிருப்பதாகவும், அவ்வாறு சேலை அணிந்து வர முடியாவிட்டால் வேறு பாடசாலைகளுக்குச் செல்லுமாறும் அதட்டலுடன் சொல்லப் படுகின்றது.

விடயம் தமக்கே விபரீதமாவதை உணர்ந்து கொண்டு மறுநாள் ஊடகங்ளுக்கு 'கைப் பைச் சோதனை' என்றொரு கதை சோடித்துச் சொல்லப்படுகின்றது.

'கைப் பைச் சோதனை' தான் விவகாரம் என்றால் அதனை அவ்விடத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அல்லவா கையாண்டிருக்க வேண்டும்?

அரச கடமை செய்யும் ஒருவரை கடமை தொடர்பாக அறிவுறுத்தும் அதிகாரம் நிலைய பிரதானிக்கல்லவா வழங்கப் பட்டிருக்கின்றது?

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பாடசாலை ஆசிரியர் தொடர்பான தீர்மானம் ஒன்று பாடசாலை அதிபர் அல்லது முகாமைத்துவ சபையின் மூலமாக அல்லவா அமுல் படுத்தப்பட வேண்டும்?

கிழக்கு மாகாணத்தில் சில தமிழ் பாடசாலைகளில் பணி புரிந்த முஸ்லிம் ஆசிரியைகள் சிலருக்கும் குறித்த விவகாரமாக முஸ்லிம் பாடசாலைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப் பட்டுள்ளது. அங்கும் 'கைப்பைச் சோதனை'தான் காரணமா?

ஐயா மனோ கணேசன் அவர்களே, நிதானமாகப் பேசுங்கள், நீதியைப் பேசுங்கள்.

கேட்டுக் கொண்டிருப்பவனெல்லாம் கேணயன் என எண்ண வேண்டாம்.

உண்மையை மறைத்து, பொய்யை வலிந்துரைத்து இனவாதப் பேய்களுக்கு சாமரம் வீசும் உங்கள் நிலை கேவலமானது.

30 வருட இனப் போரின் ரணங்கள் உங்களுக்கு கற்றுத்தரவில்லை என்றே தோன்றுகின்றது.

5 comments:

  1. இப்படியே நீங்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருக்காமல்,உங்கள் ஊர்களில் உள்ள Muslim பாடசாலைகளுக்கு வரும் தமிழ் ஆசிரியர்களுக்கு நீங்களும் ஆடை விடயத்தில் அபாயா போடுமாரு இல்லாவிட்டால் பாடசாலையின் உள்ளே வரவேண்டாம் என சொல்லுங்கள் ( வர வர அமைச்சர் இனவாதத்தை கக்குகிரார்) அமைச்சரே கிழக்கில் தேர்தலில் கலமிரங்கும் எண்ணம் இருந்தால் வரவேற்கிறோம் ஆனால் அரசியலுக்காக இனவாதம் கக்கவேண்டாம்

    ReplyDelete
  2. இந்த இனவாத பிச்சைக்கார கணேசனுக்கு இந்த குண்டு வெடிப்பிற்கு பின்னால் சிங்கள இனவாதிகளால் முஸ்லிம்களுக்கு எதுவுமே பெரிதாக நடக்கவில்லையெண்டு கவலை. இந்த இனவாத சம்பவத்திற்கு பின்னால் இவன் தான் இருப்பான்.

    ReplyDelete
  3. Mano is a good communal minded person

    ReplyDelete
  4. Ungalidam nerayya nambikkay waitthawan..ennaiponru palar..ippo wetkappattu kawalay adaihiren...

    ReplyDelete

Powered by Blogger.