Header Ads



அபாயா விற்­பனை நிலை­யங்கள் வெறிச்­சோ­டின - புர்கா, நிக்­காப்கள் அகற்­றப்­பட்டன

வழ­மை­யாக வாடிக்­கை­யா­ளர்­க­ளினால் களை­கட்­டி­யி­ருக்கும் அபாயா விற்­பனை நிலை­யங்கள் இன்று வெறிச்­சோ­டிப்­போ­யுள்­ளன. அபாயா விற்­பனை நிலை­யங்­க­ளிலும், ஆடை­ய­கங்­க­ளிலும் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த புர்கா, நிக்­காப்கள் அகற்­றப்­பட்­டு­விட்­டன.

புர்கா மற்றும் நி­காப்­புடன் பயணம் மேற்­கொள்ளும் முஸ்லிம் பெண்­களைக் காண முடி­ய­வில்லை. கறுப்­பு­நிற அபா­யா­வு­ட­னான பெண்­க­ளையும் வெளியில் குறைந்த எண்­ணிக்­கை­யிலே காண­மு­டி­கி­றது.

நாட்டில் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­வர்கள் ஐஎஸ் அமைப்­புடன் தொடர்­பு­பட்ட முஸ்லிம் தீவி­ர­வா­திகள் என்­பது உறுதி செய்­யப்­பட்­டு­விட்­டதால் வந்­த­வினை இது. முஸ்லிம் தீவி­ர­வா­தி­களின் அடை­யாளம் முகத்தை மூடி அணியும் ஆடை என்­பது இப்­போ­தல்ல நீண்­ட­கா­ல­மா­கவே பெரும்­பான்மை இன இன­வாதக் குழுக்­களால் பிர­சாரம் செய்­யப்­பட்டு வந்­தது. தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை அடுத்து முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் புர்கா, நி­கா­புக்கு மாத்­தி­ர­மல்ல அபாயா, ஹிஜா­புக்கும் பலத்த எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டு­வந்­தது.

முகத்தை மூடி அணிவதை இலங்­கையில் தடை செய்­யப்­பட வேண்டும் எனப் பல்­வேறு தரப்­புகள் ஜனா­தி­ப­திக்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­தன. தீவி­ர­வா­திகள் முகத்தை மறைத்து ஆடை­ய­ணிந்து மேலும் தாக்­கு­தல்­களை நடாத்­தலாம் என அதற்குக் காரணம் தெரி­விக்­கப்­பட்­டது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இம்­மாத ஆரம்­பத்தில் அரச வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் முகத்­திரை அணிய தடை­வி­தித்தார். பாது­காப்புக் கார­ணங்­க­ளுக்­காக இலங்­கையில் முகத்தை மூடி ஆடை அணி­வது தொடர்பில் வெளி­யி­டப்­பட்ட அர­சாங்க வர்த்­த­மானி அறி­வித்தல் முஸ்­லிம்கள் மத்­தியில் குழப்­ப­க­ர­மான நிலை­மை­யினை உரு­வாக்­கி­யது.

‘ஒரு­வ­ரது அடை­யா­ளத்தை மறைக்கும் வகையில் முழு முகத்­தையும் மூடக்­கூ­டிய எந்­த­வொரு ஆடை­யையும் பொது இடங்­களில் அணி­ய­மு­டி­யாது. முழு­முகம் என்­பது ஒரு­வ­ரது காதுகள் உள்­ளிட்ட முழு முகத்­தையும் குறிப்­ப­தாக அமையும். பொது இடம் எனக்­கு­றிப்­பி­டு­வது பொது­வீ­திகள், கட்­ட­டங்கள், அடைக்­கப்­பட்ட அல்­லது திறந்த வெளிகள், வாக­னங்கள் அல்­லது ஏனைய போக்­கு­வ­ரத்துச் சாத­னங்­களைக் குறிப்­ப­தாக அமையும். பொது­வீ­திகள் என்­பது வீதி­க­ளுடன் தொடர்­பு­படும் பொதுப்­பா­லத்தின் மேலான ஏதேனும் வீதிகள், நடை­பா­தைகள், வாய்க்கால், ஏரிக்­கரை, சாக்­கடை என்­ப­வற்­றையும் உள்­ள­டக்கும்’ என்று ஜனா­தி­ப­தியின் வர்த்­த­மானி அறி­வித்தல் தெரி­வித்­தது.

‘காதுகள் வெளித்­தெ­ரிய வேண்டும்’ என்ற வர்த்­த­மானி அறி­வித்தல் பெண்­களின் ஹிஜா­புக்கும் தடை­யாக அமைந்­தது. இத­னை­ய­டுத்து அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் அமைச்­சர்கள் ஜனா­தி­ப­தியைச் சந்­தித்து அர­சாங்க வர்த்­த­மா­னியில் திருத்­தங்­களைச் செய்­யு­மாறு கோரிக்கை விடுத்­தனர். முகத்தை மூடி ஆடை அணி­வ­தற்­கான தடை­யினை வர­வேற்ற முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­தி­களும் அர­சியல் தலை­மை­களும் காது­களை மூடி ஹிஜாப் அணியும் வகையில் வர்த்­த­மா­னியில் திருத்­தங்­களைச் செய்­யு­மாறு வேண்­டிக்­கொண்­டனர்.

இதே­வேளை நாட்டில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்­கப்­பட வில்லை. நிகாப் மற்றும் புர்கா அணி­வ­தற்கே தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது என அமைச்சர் கலா­நிதி ஹர்ஷ டி சில்வா தெரி­வித்தார். ‘முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிய தடை­வி­திக்­கப்­பட்­டுள்ள நிலையில் தற்­போது சந்­தே­கங்கள் எழுந்­துள்­ளன. முழு­மை­யாக முகத்தை மறைத்தல் என்­பது காது­க­ளையும் சேர்த்து மறைப்­ப­தையே குறிப்­பி­டு­கி­றது. எனினும் இது ஹிஜாப் தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக அர்த்­தப்­ப­டாது. பெண்கள் ஹிஜாப் அணி­ய­மு­டியும். புர்கா மற்றும் நிகாப் என்­ப­னவே அணிய தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது எனத் தெரி­வித்தார்.

என்­றாலும் முஸ்லிம் சமூகம் வர்த்­த­மானி அறி­வித்­தலில் திருத்­தத்­தையே வேண்டி நின்­றது. இத­னை­ய­டுத்து ஜனா­தி­ப­தி­யினால் கடந்த ஏப்ரல் மாதம் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் ஆடைக்கு தடை­வி­தித்து வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­தலில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

கடந்த 13 ஆம் திகதி ஜனா­தி­ப­தியின் கையொப்­பத்­துடன் மீண்­டு­மொரு வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டது. அந்த வர்த்­த­மானி அறி­வித்தல் இவ்­வாறு தெரி­விக்­கி­றது.

‘ஏதா­வது ஆடை, உடுப்பு அல்­லது துணி­ம­ணிகள் ஒரு­வரை அடை­யாளம் காண ஏதேனும் வகையில், சிர­ம­மாக்கும் வகையில் முழு முகத்­தையும் மறைக்கும் வண்ணம் பொது இடத்தில் இலங்கைப் பிர­ஜையால் அணி­யப்­ப­ட­லா­காது. இவ்­வாறு அணி­ப­வர்கள் இலங்கை இரா­ணுவம், இலங்கை கடற்­படை, இலங்கை விமா­னப்­படை, பொலிஸ் அதி­கா­ரிகள் அல்­லது சிவில் பாது­காப்­புப்­படை உறுப்­பி­னர்கள் கேட்­டுக்­கொள்ளும் பட்­சத்தில் ஒரு­வரை அடை­யாளம் காண காதுகள் உட்­பட முழு­மு­கத்­தையும் மறைக்கும் எந்த ஒன்­றி­னையும் அகற்­ற­வேண்டி நேரிடும். இங்கு முழு­முகம் எனக் குறிப்­பி­டப்­ப­டு­வது நெற்­றியில் இருந்து வாய்க்குக் கீழுள்ள நாடி வரை என்­ப­தாகும். இங்கு காதுகள் உள்­ள­டங்­காது என வர்த்­த­மா­னியில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

1 comment:

  1. இற்றைக்கு 15 அல்லது 20 வருடங்களுக்கு முன் கொஞ்ஞம் கற்பனை பன்னிப் பாருங்கள்.ஏன் உங்கள் உம்மா,உம்மம்மா அவரின் உம்மா எந்த ஆடகலை அனிந்தார்கல்.அவர்கள் மானம்,மரியாதையோடு வாழவில்லயா? இந்த அபாயா கலாச்சாரம் எங்கிருந்து/எப்போது வந்தது.islam வேறு, ஒவ்வொரு கண்டங்கள் மற்றும் நாடுகளில் வாழும் Muslim கலின் உடை,உனவு வேறு.எனவே Islam என்ர போர்வையில் எங்கோ இருக்கின்ர நாடுகளில் அங்கே இருக்கும் கால நிலைக்கேர்ரவாரு அவர்கள் பயன் படுத்தும் ஆடையை எம்மவர்கலின் மீது திணித்ததுத்தான் இன்ரைய பிரச்சினக்கும்,சிங்கள இனவாத அமைப்புக்களின் அசுர வளர்ச்சிக்கும் மிக பிரதான காரணி.எனவே Islam மார்க்கத்துக்குல் இருப்பதைத்தான் பின்பற்ற வேண்டும் ஒழிய எங்கேங்கேயோ வாழ்கிற Muslim கலின் உடை,உணவு,நடை,பாவனையை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.அல்-குராஆனில் உண்பதற்காக நாம் பாவிக்க வேண்டிய,பாவிக்க கூடாத பிராணிகளை கூட சொல்லப் பட்டிருக்கிரது.ஆனால் ஆடை பற்றி அதுவும் அபாயா அதுவும் பல கலர்கல்,பல டிசைன்கல் பற்றி எங்கும் கூறவில்லை.சில தவ்ஹீத் அமைப்பினரின் பண மோகம் மற்றும் சில குடும்பங்களின் வரட்டுக் கொரவம்,அதிகமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலைக்காக அங்கே பணி செய்த பெண்கள் இப்படியானவர்கலினால்தான் நம் நாட்டில் இந்த அபாயா புயல் கடந்த 15 or 20 வருடங்களுக்குள் வீச தொடங்கியது.

    ப்

    ReplyDelete

Powered by Blogger.