Header Ads



விகாரைகள் மீது கைவைத்தால் நடப்பது வேறு, பள்ளிவாசல்களில் சோதனை வேண்டாமென சிலருக்கு உத்தரவு

கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது போல் பௌத்த விகாரைகள் கை வைத்தால் கடும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் பொதுபலசேனா எச்சரித்துள்ளது.

விகாரைகள் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் எதிர்வினைகளை எவராலும் தடுக்க முடியாது எனவும் பொதுபல சேனா அமைப்பை சேர்ந்த மாகல்கந்தே சுதத்த தேரர் எச்சரித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேரர் கருத்து வெளியிட்டார்.

தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. தற்கொலைதாரிகள் அனைவரும் தேசிய தௌவீத் ஜமாத் மற்றும் ஜமியத்துல் இப்ராஹீம் அமைப்புக்களின் உறுப்பினர்கள் என உறுதியாகியுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யும் அரசியல்வாதிகளுக்கும் நினைவில் வைத்துக் கொள்ளும்படி ஒன்றைக் கூற விரும்புகிறோம்.

விகாரைகள் மீது கைவைத்தால் நடப்பது வேறு. நாங்கள் மிகவும் பொறுமை காத்து வருகின்றோம். அதேபோல மதத் தலைவர்களுக்கும் ஒன்றைக் கூறுகிறோம். சிங்கள பௌத்த மக்களுக்கும், சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையே உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம்.

நாங்கள் அன்பு செலுத்தும் போது அவர்கள் குண்டுகளால் பதிலளித்தால் எமது அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? இந்த முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் பொதுமக்களாகிய நாங்களே சம்பளம் வழங்குகின்றோம். எனவே அவர்களுக்கும் பொறுப்பிருக்கிறது.

அரசியல்வாதிகள் எந்த தீர்மானம் எடுத்தாலும் மக்களைக் காப்பாற்றுவதற்கான கடமை அவர்களுக்குரியது. சில இடங்களில் சோதனை செய்ய வேண்டாம் என்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களில் சோதனை செய்ய வேண்டாம் என்றும் சிலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறியக்கிடைத்தது.

இந்த நிலைமை தொடர்ந்தால் சிங்கள பௌத்த மற்றும் கத்தோலிக்க மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமையே ஏற்படும்

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவிநீக்கம் செய்து கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும்படி ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கையையும் முன்வைத்திருந்தோம். எனினும் இதுவரை எந்தவித நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

தமது அதிகாரத்தையும், பலத்தையும் அதிகரித்துக் கொள்வதற்காக ஜனாதிபதியும், பிரதமரும் அதேபோல எதிர்கட்சித் தலைவரும் முஸ்லிம் அமைச்சர்களையும் அரசியல்வாதிகளையும் கைது செய்யமாட்டார்கள்.

தீவிரவாதிகள் 300 பேரையல்ல, 3000 பேரைப் படுகொலை செய்தாலும் அந்த அமைச்சர்களை அரசாங்கம் கைது செய்யாது. ஏனென்றால் அதிகாரத்தை தக்க வைப்பதற்காக அவர்களுடைய வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக இதனை செய்யமாட்டார்கள் என தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. பயங்கரவாதம் அது எந்த வடிவில் வந்தாலும் அது பயங்கரவாதமே. மதத்தின் அடிப்படையில் வந்தாலும் சரியே அல்லது உரிமை அடிப்படையில் வந்தாலும் அவை பயங்கரவாதமே.

    மதப் பயங்கரவாதத்தில் ஒரு மதப்பிரிவினர் மாத்திரம் அழிக்கப்பட்டு இன்னொரு மதப்பயங்கரவாதம் மீதப்படுத்தப்படுவதும் பயங்கரவாதமே.

    அளுத்கம திகன போன்ற இடங்களில் மதத்தின் பெயரால் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இன்றுவரை கைது செய்யப்படாதது எந்தவகை மனதாபிமானத்திற்கு உட்பட்டது?

    சட்டத்தை கையிலெடுக்கும் இவர்கள்தான் நாட்டின் காவலர்களா ?

    ReplyDelete
  2. OK Thera...
    What about if anyone attack Mosques and Muslims....What is your reaction....????

    ReplyDelete
  3. கொஞ்ச நாள் அமைதியாக கிடந்த தேரேக்கள் இருதியாக பெய்த மழையில் வெளியே வந்து கத்த தொடங்கியுள்ளது. இலங்கை யில் உள்ள முதல் பயங்கரவாதம் இந்த பெளத்த பயங்கரவாமே. இதை அடக்க தோல்வி லண்டதாலே மிஸ்டர் மகிந்த இருதி தேர்தலில் தோற்றார். இதுவே மாரிப்போட்டு மிஸ்டர் ரனிலுக்கும் மைத்திரிக்கும் வரும்.

    ReplyDelete
  4. Arrest This Terror Monk. They are responsible for all these created troubles. These racist Group created the battle field for current and future terrorist. send all these Terror monk behind bar to protect our country..

    ReplyDelete

Powered by Blogger.