Header Ads



இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் பலம்பெற, நாம் வழிகளை ஏற்படுத்தக் கூடாது.

இனகலவரங்கள் ஒரு கறுப்பு ஜுலை கலவரமாக  மாற்றமடைந்து எவ்வாறு விடுதலை புலிகள் அமைப்பு உருவாக்கம் அடைந்ததோ அதேபோன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அமைப்பும் பலம்பெறுமா என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்த பொதுபலசேனா, இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தி அதில் அரசியல்  இலாபம் தேடிக் கொள்வோம் என்ற குறுகிய  நோக்கங்களை கொண்டுள்ள அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு பொது மக்கள் அடிபணிய கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

பொதுபல சேனா அமைபபின் தலைமை காரியாலயத்தில் இன்று -14- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர்  விதாரந்தெனிய  நந்த தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் தெரிவித்த  அவர்,

இஸ்லாமிய அடிப்படைவா அமைப்புக்கள் இலங்கையில் பலம் வாய்ந்த அமைப்பாக உருவாகுவதற்கு நாம் வழிகளை ஏற்படுத்திக்  கொடுக்க  கூடாது. இன வன்முறைகளின் ஊடாக தமது  நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவே அடிப்படைவாதிகள் முயற்சிக்கின்றனர். 

ஆகவே பௌத்த மதத்தை சர்வதேசத்தில் கேள்விகளுக்குட்படுத்தும் செயற்பாடுகளை இலங்கை மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.   .

அடிப்படைவாதிகளின் மிலேட்சத்தனமான  தாக்குதலை தொடர்ந்து  கடந்த  மூன்று வாரகாலமாக நாடு  பாரிய  சவால்களை எதிர்கொண்டுள்ளது. தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள   என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

தாக்குதல் சம்பவத்தை ஆளும் தரப்பினரும், எதிர்தரப்பினரும் முழுமையாகவே தமது அரசியல் தேவைகளுக்காகபயன்படுத்திக் கொள்கின்றார்கள். தேசிய பாதுகாப்பும், தேசிய  நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப புதிய எவ்வித வழிமுறைகளும் பின்பற்றவில்லை எனவும் குறிப்பிட்டார்.

(இராஜதுரை ஹஷான்)

2 comments:

  1. Ohh Neengala....? eppa irunthu ippudi?
    Pillayayim killi thottilum aattreenga...nadattunga..ungal naadagam padu jor..!

    ReplyDelete
  2. We never involve in any terrorism. Some politicians especially in opposition make usto have their victory next elections. Our youth please don't go into any actions of terror.

    ReplyDelete

Powered by Blogger.