Header Ads



முஸ்லிம் மாதர்களுக்கு, பாரிய நெருக்கடி - உடனடியாக நீதிமன்றம் செல்லுங்கள்...!

அரச அலுலகங்களில் பணிபுரிவோருக்கான சீருடை தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிருப அமுலாக்கம் நீதிமன்ற இடைக்கால தடையுத்தரவு மூலம் இடை நிறுத்தப்பட வேண்டும்.

கடந்த 29/04/2019 மற்றும் 13/05/2019 ல் முறையே வெளியிடப்பட்ட 2121/1 மற்றும் 2123/4 வர்த்தமாணி அறிவித்தல்கள் தொடர்பான விளக்க சுற்றுநிருபம் அமுலாக்கல் அவகாச காலம் குறிக்கப் படாமல் வெளியிடப்பட்டிருக்கின்றமை முஸ்லிம் மாதரை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
25/05/3019 அன்று ஜனாதிபதியை சந்தித்த முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்படி வர்த்தமாணி அறிவித்தல்களுக்கு உயர்கல்வி அமைச்சு வழங்கியுள்ள விளக்க சுற்றுநிருபத்தையே பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுகளும் கவனத்திற் கொள்ள வேண்டுமென ஜனாதிபதி உத்தரவிட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டன, ஏற்கனவே அதே விடயம் அமைச்சரவையிலும் பேசப்பட்டிருந்து.

மேற்படி விடயம் குறித்து அரசாங்கத்தில் உள்ள சக அமைச்சர்களை கிஞ்சித்தும் கணக்கில் எடுக்காது அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தனது அமைச்சின் அதிகாரிகளைப் பணித்திருப்பது முஸ்லிம் சமூகத்தினை நோவினை செய்யும் காழ்பணர்வுப் பரப்புரைகளை அரச யந்திரத்தினூடாக மேற்கொள்ள எடுக்கும் மற்றுமொரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

முஸ்லிம் மாதரின் சீருடை விவகாரத்தை முஸ்லிம் சமய கலாச்சார, அமைச்சு முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற ஊறுப்பினர்களை கலந்தாலோசித்து கையாள்வதே முறையான நடவடிக்கையாகும்.

இடைக்கால தடையுத்தரவு பெறப்பட்டு மேற்படி வர்த்தமாணி அறிவிப்புக்களுக்கான ஒரே மாதிரியான சுற்றுநிருபம் வெளிவரும் வரை முஸ்லிம் மாதர் தற்போதைய சீருடையை அணிவதே இயற்கை நீதி பெருமானங்களின் படி சரியாகும்.

அரசை தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ள முஸ்லிம் அமைசாசர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக இது தொடர்பாக மக்களை அறிவுறுத்துவதோடு அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
✍✍✍✍✍✍✍✍✍✍
Share...If you really care


2 comments:

  1. they ruling with support of our muslims parties and doing all against us. without our mislims parties support how this Ranchid Madumabandara could be minister?

    ReplyDelete
  2. இஸ்லாம் ஒரு போதும் துஆ மட்டும் கேளு நான் தருகிறேன் என்று சொல்லவில்லை, குதிரையை கட்டிவிட்டு பாதுகாப்பிற்காக துஆ செய்ய சொல்லி இருக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.