May 26, 2019

"இது இலங்கை இஸ்லாமியர்களுக்கு மட்டுமான பதிவு...."

- Sharthaar Mjm -

சகோதரர்களே, நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதலை காரணமாக வைத்து, வகை தொகையற்ற கைதுகள் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன‌. நம்மை வேட்டையாட தருணம் பார்த்திருந்தவர்களுக்கு நம் சமூகத்தில் இருந்த சில கோடாரிக்கம்புகளே பாதையினை திறந்து கொடுத்திருக்கின்றன...

இதை காரணமாக வைத்துக் கொண்டு, நம்மில் சில நயவஞ்சகர்களும் பழைய இயக்க குரோதங்களையும், உங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்களையும், பகையையும் மனதில் வைத்துக்கொண்டு உங்கள் இயக்க விரோதிகளை, அபாண்டமாக பயங்கரவாதிகள் என்று காட்டிக்கொடுத்து இன்பம் காண்கின்றீர்கள். வல்ல அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். சூழ்ச்சிக்காரர்களுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன் அவன்... அவன் உங்கள் குடுமியை பிடிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை நினைவில் வைத்திருங்கள். அநீதமிழைக்கப்பட்டனின் பிரார்த்தனையை எந்தவித திரைகளுமின்றி ஏற்றுக்கொள்வேன் என்று இறைவன் வாக்குறுதி அளித்திருப்பதை உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகின்றேன்....

பயங்கரவாதிகளை காட்டிக்கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, காட்டிக்கொடுங்கள் அது உங்கள் கடமை, ஆனால் அதில் சொந்த விருப்பு வெறுப்பை தள்ளி வைத்துவிட்டு இறை அச்சத்துடன் நீதியாக நடந்து கொள்ளுங்கள். யாருக்கும் அநீதம் செய்யாதீர்கள்.

இந்த ஒரு துன்பகரமான சந்தர்ப்பத்திலும் உங்கள் சுயலாபத்திற்காக நாடகம் ஆடும் உங்களுக்கு உங்கள் மனச்சாட்சியே தண்டனை தந்து விடும். தவிரவும் கிடைக்கும் சில நிவாரண உதவிகளையும் உங்கள் இயக்க வேறுபாடுகளை காரணம் காட்டி சில குடும்பங்களுக்கு கிடைக்காமல் செய்து விடுகின்றீகளாம்... அதில் சிலர் குரூர திருப்தியும் அடைகின்றார்களாம், வெட்கமாக இல்லையா உங்களுக்கு??

நீங்கள் எல்லாம் கலிமா சொன்ன முஸ்லிம்கள் தானா??

வல்ல இறைவனுக்கு அஞ்ச மாட்டீர்களா??

குண்டு வைத்த சஹரானின் குழந்தையையே சிங்கள சிப்பாய்கள் அன்பாய் அரவணைக்கும் போது உங்கள் சக சகோதரர்களின் குடும்பத்தை பற்றி கவலைப்பட மாட்டீர்களா??

இது தான் உங்கள் இஸ்லாமா??

இதை எழுதுவதால் நான் ஒரு இயக்கத்தை சார்ந்தவன் என்று என்னை நீங்கள் முத்திரை குத்தலாம்.. அதற்காக ஒரு சாதாரண மனிதனாக நான் கவலைப்பட போவதில்லை. தனிப்பட்ட முறையில் சகல மத இயக்கங்களுக்கும் ஆதரவற்றவன் நான். என்னை எந்த ஒரு இயக்கமும் சேர்த்தும் கொள்ளப்போவதில்லை, நான் சேரவும் போவதில்லை...

இஸ்லாம் ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல, இயக்கம் நடத்தி தண்ணீர் ஊற்றி வளர்ப்பதற்கு மரமல்ல, அது வல்லவனில் மார்க்கம். அதை வளர்ப்பதை அவன் பார்த்துக்கொள்வான் நீங்கள் ஒரு சாதாரண மனிதத்தன்மை உள்ள இஸ்லாமியனாக நடக்க முயற்சியுங்கள். இஸ்லாம் தானாக வளரும்.

இயக்கவாதிகளே.. நாங்கள் நல்லவர்கள், அவர்கள்தான் தீவிரவாதிகள் என்று உங்கள் தலைகளை தப்பவைத்துக்கொள்ள பொய் வேஷம் கட்டாதீர்கள். நாட்டில் நடந்த பயங்கரவாதத்துக்கு நீங்கள் நான் என்று எல்லோருமே பொறுப்புதாரிகள். நமக்குள் முளைத்த விஷக்காளான்களை அடையாளம் காண முடியாமல் போனமைக்கும் உங்கள் இயக்க குழப்பங்கள் தானே முழு முதற் காரணமாக அமைந்தன???

சஹ்ரான் பற்றி அவ்வளவு முறைப்பாடுகள் செய்யப்பட்டும் பாதுகாப்பு துறை அலட்சியமாக இருந்ததற்கு காரணம் என்ன?? நீங்கள் இயக்க பகையை தீர்த்து கொள்ள பொய் குற்றச்சாடு வைக்கின்றீர்கள் என்றல்லவா அவர்கள் அசமந்த போக்கில் இருந்திருப்பார்கள்??? அதற்காக பாதுகாப்பு தரப்பை நான் நியாயப்படுத்த வரவில்லை. ஆனால் அவர்கள் அசமந்த போக்குக்கு உங்கள் இயக்க வெறியும் தானே காரணமாக இருந்தது?? என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.

உங்கள் இயக்க வெறியை தள்ளி வைத்துவிட்டு உண்மை இஸ்லாமிய சகோதரனாக நடக்க முயற்சி செய்யுங்கள். அப்பாவிகளை காட்டிக்கொடுத்து நயவஞ்சக "முனாபிக்கீன்கள்" ஆகாதீர்கள்.

4 கருத்துரைகள்:

அருமையான ஒரு கட்டுரை.

உண்மையைச் சொல்வதென்றால் அடிப்படைவாதிகள் என்று அந்நியர்கள் எங்களை எல்லோரையும் குறிப்பிடுகிறார்கள். எவர் தாடி வைத்து ஜிப்பா போட்டு தனது மனைவியை முகம் மறைத்து பாதையில் கொண்டு செல்லகிறார்களோ அவர்களை அடிப்படைவாதிகள் என்றுதான் நினைக்கிறார்கள். இதில் எந்த இயக்கத்தையும் சேர்ந்தவர் என்று அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்கு நாங்கள் எல்லோரும் அடிப்படைவாதிகள் தான். பாரம்பரிய முஸ்லிம்கள் என்று அவர்கள் சொல்பவர்கள் பள்ளியுடன் தொடர்பு இல்லாமல் இருப்பவர்களைதான்.

தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் அமைப்பினரை தவிர அடுத்த தவ்ஹீத் அமைப்புகளில் உள்ளவர்களில் ஏதும் அறியாத அப்பாவிகலை யாரும் உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக போலிக் குர்ரசாட்டுகல்,திட்டமிட்ட சதி செய்து காட்டிக் கொடுக்க வேண்டாம். இந்த ரமழானில் நீங்கள் செய்யும் இப்படியான பாவச் செயல்கள் உங்களுக்கும் பெரும் துயரை எதிர்காலத்தில் உருவாக்கி விடும்.அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

Beware of Allah's Punishment..

Post a comment