Header Ads



ஒசாமாவின் உருவப்படத்துடன் கூடிய, புத்தகத்தை வைத்திருந்தவர் கைது

கல்முனை- மருதமுனைப் பிரதேசத்தில் தீவிரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகத்தின் பெயரில்  நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து, அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர், ஒசாமா பின்லேடனின் உருவப் படத்துடன் கூடிய போதனைப் புத்தகமொன்று மீட்கப்பட்டுள்ளது.

 அத்துடன் சந்​தேகத்துக்கிடமான இறுவட்டுகள், MI  ரக சிம் அட்டைகள் இரண்டுடனான ​அலைபேசி என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நேற்று இரவு 8.45 மணியளவில் கல்முனை பொலிஸ் விசேட படையணியால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.