May 21, 2019

இந்தப் படத்தின், உண்மை நிலை இதுதான்


- Idroos Mohamed -

இது புத்தளத்தில் இடம்பெற்ற சம்பவம்தான் ...

மதரஸா பிள்ளைகளும் ..சில போலீசில் வேலை செய்யும் சகோதரிகளும் கலந்து கொண்டது உண்மைதான் ..

அது ஒரு நிர்பந்தத்தின் காரணமாய் இடம்பெற்ற சம்பவம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் ..

பாதுகாப்பு படை சபரியிடமும் என்னிடமும் சொன்னார்கள் 

நாங்கள் புத்தள எல்லையில் குழப்பக்காரர்கள் வந்தார்கள் 

அவர்களை துரத்தி உங்களை அனர்த்தங்கள் நடைபெறாமல் பாது காத்தோம் ..புத்தளத்தின் மேல் ஒரு கண் அவர்கள் வைத்துள்ளார்கள் 

எதர்க்கும் இந்த வெசாக் தினத்தை இணைந்து கொண்டாடுவோம் 

இரு சமூகங்களும் முன்பு போல கந்தூரி தன்சல கொடும்போம் காயங்களை ஆற்றுவதட்க்கு இது வே மருந்து என்றார்கள்..

நானும் ஆமாம் சாமி என்று ஒத்துக்கொண்டேன் ..

இப்படி வூர்வலமாக மத்ரஸா பிள்ளைகளும் அரச நிறுவங்களின் உள்ள முஸ்லீம் யுவதிகளும் FARDAA அணிந்து புத்தள பன்சலை அண்மித்தபோது வழமையாக மற்றவர்களுக்கு கொடுப்பதுபோல் மலர் தட்டும் வழங்கப்பட்டது ..

இதை மற்றவர்கள் புத்த பகவானின் சமாதிகளில் வைத்த போதும் முஸ்லிம்கள் அதை யாரும் செய்ய விடாமல் அவர்களாவே உள்ளே கொண்டுசெல்லாமல் வாசலில் வாங்கிக் கொண்டார்கள் ..

இது ஒரு MUSSLIM பாதுகாப்பு சம்பந்தமாக எடுத்த நல்லிணக்க முயட்சி ..... வெளி நாட்டில் உள்ள கார் போர்ட் வீரர்கள் யாரும் உங்கள் கொம்மெண்ட் களை போடவேண்டாம் வாப்பா ..

9 கருத்துரைகள்:

ஆமாம் இது ஒரு நாடகம் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். சூழ்நிலைகளுக்கேற்ப நடந்து கொள்வதில் ஒன்றும் தவறில்லை. மலர்தட்டுக்களை ஏந்திச் செல்வதன் மூலம் இஸ்லாத்தின் கோட்பாடுகளை விட்டு வெளியேறியதாக அர்த்தம் கொள்ள முடியாது.பாம்புக்கு பால்வார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் என்றே இதைக்கொள்ள வேண்டும். இது மாத்திரமல்ல இன்னும் பல விடயங்களில் அவர்களுடன் கலந்து கொண்ட விடயங்களும் கலந்து கொள்ள வேண்டிய விடங்களும் ஏற்படலாம் அதனால் இஸ்லாத்தின் கடமைகளில் இருந்து வெளியேறி புத்த பகவானை கும்பிடுகிறார்கள் என்று அர்த்தம் கொள்ள முடியாது.மறைந்த தலைவர் அஷ்ரப் அர்வர்கள் கூட ஒரு வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு போகமுடியால் ஒரு பன்சலயில் மலர் தட்டை ஏந்தி சென்ற சம்பவமும் உண்டு. இஸ்லாமிய அடிப்படைவாதம் பேசுபவர்கள் அதையும் பிரச்சினையாக்கினார்கள். அஷ்ரப் அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ் என்ற வார்த்தையுடன் மனதை திடப்படுத்திக்கொண்டு அந்த சூழ்நிலைக்கு முகங்கொடுத்தேன் என்றார்கள். எனவே ஈமானை பறிகொடுக்காமலும் ஈமானை பாதுகாத்துக்கொண்டும் இவ்வாறான சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுப்பது ஒன்றும் தவறில்லை என்பதை புரிந்து கொள்வோம்.அக்கீதாவுக்கு உட்பட்டு செய்யும் செயல்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வான் என்பதுதான் உண்மை.மலேசியாவிலிருந்து தீன் முஹம்மத்

எண்ணங்களுக்குத் தான் கூலி நீங்கள் சுத்தமான முஸ்லிம்கள் தான். பேச்சிலும் உடையிலும் சிலர் முஸ்லிம்களாக இருக்கிறார்கள் உள்ளமெல்லாம் வஞ்ஞகமும் காழ்புணர்ச்சியும், தற்பெருமையும் தான். அச்சம்பவத்துடன் அதனை நீங்கள் மறந்திருப்பீர்கள்.இன்னும் தூக்கிக்கொண்டு திரிபவர்களுக்குத்தான் அதன் பாரம் தலைக்கடிக்கும்.

இதில் எந்த தவறும் இல்லை,பல நூறு வருடங்களாக நடந்த நிகழ்வுகள்தான்.நியூசிலாந்து பிரதமரும் பள்ளிவாசலுக்கு அபாயாவுடன் வந்தார் அதற்க்காக அவர் Islam மதத்தை ஏற்றார் என அர்த்தமில்லை.ஆனால் கடந்த 20 வருடங்களாக புதிதாய் எமது சமூகத்துக்குல் நுழைந்த சில மாகான்கல் அல்லது தாங்கள் கலீபாக்கள் என நினைத்துகொண்ட பணத்துக்காக சமூகத்தை பிற சமூகங்கலிடம் இருந்து தூரமாக்கியவர்கலினால்தான் இவ்வளவு பிரச்சினைகளும் எமது சமூகத்துக்கு வரக் காரணம்.அடுத்த வீட்டுக்காரன் அந்திய மதம் என்ராலும் அவன் வீட்டு திருமனம் அல்லது சாவுக்கு நாம் செல்லத்தானே வேண்டும்.அப்படியிருக்க இதில் ஒன்னும் தவறில்லை.

I too feel like this. Do not make fuss about this issue. Do not confuse people because of this. Allah knows what is in our hearts and minds. Allah knows best what is in these sisters hearts, They may have strong Iman than me and you. Only Allah knows that. Why do we pass judgement on these sisters..May Allah make them more closer to him.. All what we do is to discredit them in public. that is not good. Why did you publish this picture.. Jaffna Muslim should avoid it..

இனியும் இவ்வாறான நாடகங்கள் அடிப்பதை நிறுத்தி விடுங்கள்.அவர்கள் எங்களை நாடகம் நடிக்கும் நரிக்கூட்டம் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். பொய், மோசடி, நாடகம், பாசாங்கு செய்வதில் எதுவும் கிடைக்கப் போவதில்லை. அவசியமானதை மட்டும் செய்வோம்.

ம்ம்ம்ம் ஒரு காலத்தில் எல்லா மதமும் சம்மதமாகி விடுமோ???

பல வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் அதிபர் ஸியாஉல் ஹக் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்த போது இலங்கைப் பிரமுகர்களுடன் தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார் . அந்த நேரத்தில் அங்கு புத்தபகவான் முன்னிலையில் அவரிடம் மலர்த்தட்டு வழங்கப்பட்டது. அவர் அதனை மறுக்காது அப்படியே எடுத்து புத்தி சாதுரியமாக அருகிலுள்ளவரிடம் கொடுத்து விட்டார்.

Face book veerarhalukkum , adippadai vaathihalukkumaana enathu anpaana veanduhoal ennavenraal unmai nillayai arinthuholvathatku avahaasamum santharppamum valankappada veandum. Athai vittuvittu ungal kankalukku therivathu mattum thaan unmai entrum matravarhal saivathu fithna enrum nam samuhaththai paal paduththuvathilae kuriyaaha irukkaveandaam. Illa appadi eatrukolla mudiyavillai enraal nearadiyaaha paathikkappatta idankalukku sendru pirachanaiyai samaalithuppaarunkal. Eppadi samaalippeerhal endru naamum paarpoam.

Post a Comment