May 20, 2019

முஸ்லிம்கள் சம்பாதிப்பதிலேயே குறி, இதனால் பிள்ளைகள் தற்கொலையாளிகளாக தம்மை உருவாக்கிக்கொள்கின்றனர்

சர்வ மதத் தலைவர்களை ஒன்று கூட்டி இனங்கள் மதங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி வருகின்றார். இத்தகைய நிலையில் கத்தோலிக்க திருச்சபைக்கு அடுத்தபடியாக இலங்கையில் உள்ள பெரிய திருச்சபையான இலங்கைத் திருச்சபை, இச் சம்பவங்கள் தொடர்பிலும் நாட்டில் நல்லிணக்கம் தொடர்பில் எத்தகைய கருத்துக்களை முன்வைக்கின்றது என்பதை அறிவதற்காக அந்த திருச்சபையின் பேராயர் 
 கனகசபையை சந்தித்தோம்.

கேள்வி – நாட்டில் யுத்தம் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகள் தற்கொலைக் குண்டுதாரிகளாக உருவாவதற்கு நீண்ட காலம் எடுத்தது. எனினும் முஸ்லிம் அடிப்படைவாதிகள் தம்மை தற்கொலைக் குண்டுதாரிகளாக மாற்றிக் கொள்வதற்கு அந்தளவு காலம் எடுத்துக்கொள்ளவில்லையே?

பதில் – முஸ்லிம் மக்கள் சம்பாதிப்பதிலேயே குறிக்கோளாக செயற்படுபவர்கள். அவர்களின் ஒருவரின் வியாபாரம் வீழ்ச்சியடைந்தாலும் 10 பேர் சேர்ந்து நஷ்டப்பட்டவரை தூக்கி விடுவார்கள். பின்னர் அவர் இலாபம் பெற்றதும் அவரிடம் பணத்தை மீள பெற்றுக்கொள்வார்கள். அவ்வாறு செயற்படுபவர்களே முஸ்லிம்கள்.

எப்போதும் வியாபாரம், வருமானம் என்ற நோக்கோடு செயற்படும் அவர்களுக்கு தமது பிள்ளைகள், மீது கவனம் செலுத்துவதற்கு நேரம் கிடையாது. இதனால் அவர்களது பிள்ளைகள் எங்கு போகிறார்கள்? என்ன செய்கின்றார்கள் என பார்ப்பதில்லை. இதனால் அவர்கள் மோசமான வழிகளில் சென்று தற்கொலைக் குண்டுதாரிகளாக தம்மை உருவாக்கிக்கொள்ளும் அளவுக்குச் செல்கின்றனர்.

பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் தொடர்புகள் இல்லாமை, அவர்கள் தற்கொலைக் குண்டுதாரிகளாக மாறியதைக் கூட பெற்றோர் அறிய மாட்டார்கள். இது தான் அவர்களின் குடும்பங்களின் நிலை. சமூகமாக அவர்கள் சேர்ந்திருந்தாலும் குடும்ப தொடர்புகள் பல வீனமானது என்றே கூற முடியும். தமிழர்கள், சிங்களவர்கள் அவ்வாறல்ல. அவர்கள் ஒன்றாக அமர்ந்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டு உணவு உண்பார்கள். பிள்ளைகள் எங்கே போகிறார்கள்? என்ன செய்கிறார்கள் என தேடிப்பார்க்கின்றார்கள். இந்த நிலைமையை மாற்ற அந்த சமூகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கேள்வி – முஸ்லிம் அடிப்படை பயங்கரவாதிகள் குண்டுத் தாக்குதலுக்கு கிறிஸ்தவ மதஆலயங்களைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன? அது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில் – அண்மையில் நான் ஒரு வீடியோ காட்சியைப் பார்த்தேன். அதில் சஹ்ரான் என்ற பயங்கரவாதி கிறிஸ்தவர்களை அவமானப்படுத்துகின்றார். கிறிஸ்தவர்கள் அவர்களது மதத்திற்கு எதிரானவர்கள். அவர்கள் அவமதிப்புக்குள்ளாக்கப்பட்ட வேண்டியவர்கள் என்பதே அவர்களின் கருத்து. ஈசா நபி என அவர்களால் கூறப்படும் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை. அவரை இறைவன் தம்மிடம் அழைத்துக்கொண்டார் என்பது அவர்களின் மத வாதம். கிறிஸ்தவர்களை அச்சுறுத்துவது தாக்குவது அவமதிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஈஸா நபி என்பவர் இறுதியில் இந்த உலகத்தை அழிக்க வருபவர் என்பது அவர்களின் கருத்து என்பதை இரண்டாவது காரணமாக என்னால் கூற முடியும். நியூசிலாந்தில் இடம்பெற்றுள்ள தாக்குதலுக்கு பழி வாங்க இந்த தாக்குதலை அவர்கள் நடத்தியுள்ளனர் எனக் கூற முடியும். ஏனென்றால் அந்தத் தாக்குதலை நடத்தியவரும் ஒரு கத்தோலிக்கர். இந்த தாக்குதலுக்கு பின்னர் பயங்கரவாதிகள் ஒரு அறிவித்தலை விடுத்திருந்தனர். அதில் உனது சமயத்தவர்கள் உலகத்தில் எங்கிருந்தாலும் அவர்கள் இதற்கு பதில் கொடுத்தே தீர வேண்டும். என்று அவர்கள் கூறியுள்ளனர்.

அதற்கிணங்கவே அவர்கள் இலங்கை போன்ற சிறிய பாதுகாப்பற்ற நாட்டை தேர்ந்தெடுத்துள்ளனர். ஏனென்றால் எமது நாட்டில் பாதுகாப்பு கிடையாது. எந்த வழியாகவும் எவரும் நாட்டிற்குள் பிரவேசிக்கலாம். நாட்டில் எந்தப் பகுதிக்கும் எவரும் தடையின்றி சென்று வர முடியும். எங்கிருந்து வந்தீர்கள் எதற்காக வந்தீர்கள் என்று எவரும் எவரையும் கேட்கப்போவதில்லை. அதனை தெரிந்து கொண்டே அவர்கள் இலங்கையை தேர்ந்தெடுத்துள்ளனர்.

துருக்கி சென்று பயிற்சி எடுத்தவர்களை வைத்து இங்கு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

கேள்வி: மேற்கத்திய நாடுகளில் தமது ஆதிக்கத்தை வைத்துக் கொண்டுள்ள ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலின் மூலம் ஆசியாவில் தமது ஏகாதிபத்தியத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று எண்ணி இந்த தாக்குதலை மேற்கொண்டு இருக்கலாம் அல்லவா?

 பதில்: ஆம் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். அவர்கள் உலகத்தில் சகல பகுதிகளிலும் தனது அடித்தளத்தை இட்டுள்ளனர் பிரான்ஸ் நாட்டில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் தாக்குதல் நடத்தினர். தற்போது அவர்கள் ஆசியாவின் பக்கம் தனது பார்வையைத் திருப்பி உள்ளனர். இதனை நாம் சாதாரணமாகப் பார்க்க முடியாது எமது நாட்டில் பாதுகாப்புத்துறை பலப்படுத்தப்பட வேண்டும்.

கேள்வி: இந்த நிலையில் சமூகம் என்ற ரீதியில் இதிலிருந்து நாம் வெளியே வருவது எப்படி? அது தொடர்பில் உங்கள் கருத்துக்களை முன்வைப்பீர்களா?

பதில்: இந்த நாட்டு மக்கள் பற்றி சிந்திக்க வேண்டும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ள சிலரை வைத்து நாட்டின் எல்லா முஸ்லிம் மக்களையும் பார்க்க முடியாது. அவ்வாறு பார்ப்பது தவறு. அவ்வாறு நாம் பார்த்தால் அவர்களையும் அத்தகைய செயலுக்கு நாம் தூண்டுவது போல் ஆகிவிடும். தற்போது நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட சிலர் முனையலாம். எனினும் பொறுமை காப்பது மிகவும் முக்கியம்.

தமிழிழ விடுதலைப்புலிகளின் காலத்தில் நாம் இத்தகைய பல அனுபவங்களை பெற்றிருக்கின்றோம். தமிழர்கள் என்பதால் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டோம். அது எமது அன்றாட செயற்பாடுகளில் பெரும் வதையாக அமைந்தது. என்றாலும் நாம் பொறுமை காத்தோம். அன்று படையினர் எம் மீது இருந்த கோபத்தினால் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை எமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே அப்படி நடந்து கொண்டனர். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமானால் நாம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதுபோன்ற நிலை இன்று முஸ்லிம் மக்களுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் இதைவிட பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலகட்டம் இது.

எனினும் தற்போது எமது நாட்டில் அரசியல் நோக்கங்களுக்காக ஒவ்வொருவரும் பிரிந்து செயல்படுவதையே காணமுடிகின்றது.

ஒவ்வொருவரும், தங்கள் சுயநலத்திற்காக ஒவ்வொரு விதமாக செயற்பட்டால் நாட்டு மக்களின் நிலை இதைவிட மோசமாக அமைந்துவிடும். இந்த நிலையில் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு முன்னிலை வழங்கப்பட வேண்டும்.அதற்கிணங்க நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவது முக்கியம்.

நேர்கண்டவர்  லோரன்ஸ் செல்வநாயகம்

5 கருத்துரைகள்:

It is so sad hearing a comment like this from a religious leader. Comparing with other communities, Muslim youth are not into drugs, alcohol and prostitution. Definitely, some evil elements are behind the past attacks- on which Muslims are so sad. Duty of a religious leader is bringing the communities together.

இவரின் கருத்துக்கள்,மிகவும் இனவாதமாக உள்ளது.அப்படி சஹ்ரான் எனும் பயங்கரவாதியை பேச முடியும்,ஆனால் எமது சமூகத்தை கொச்சைப் படுத்த இவருக்கு அனுமதியில்லை.அவரிடம் ஒரு கேள்வி,ஜயா,30 வருடங்களாக புலிகள் நடத்திய தீவிரவாத யுத்தம்,100 க்கும் அதிகமான தற்கொலை தாக்குதல்கள் மற்றும் ரோஹன விஜவீரவின் கிளர்ச்சி அதனால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோர்.இவையல்லாம் அந்த இரு சமூகத்திலும் தாய்,தந்தையர் பிள்ளைகளினை மிகவும் அவதானமாகவும்,கவனமாகவும்,வளர்த்ததுக்கான மிகப் பெரும் அத்தாட்சிகல்.இவரின் பேச்சை கேட்கும் போது சிரிப்பாக உள்ளது.இப்படியான குறி வைத்து பேசும் இனவாதிகலின் கருத்துக்களை பதிவிடதீர்கல்.இதை விட மல்கம் ரஞ்ஞித் போன்ர நடு நிலையானவர்கலின் கருத்துக்கள் பதிவிடுவது சிறப்பானது

Absolutely wrong statement

பேராயர் அவர்களின் கருத்துச்சுதந்திரத்துக்கு மதிப்பளித்தவனாக முஸ்லிம்கள் தொடர்பாகத் தங்களிடம் உள்ள சில தவறான பார்வைக்கு விளக்கம் தர விழைகிறேன்.
1. வியாபாரத்தில் முழுநேரம் ஈடுபடும் முஸ்லிம்களில் சிலர் பிள்ளைகள் தொடர்பில் கவனம் செலுத்துவது குறைவாக இருக்கலாம். ஒன்றாக இருந்து ஒரு பாத்திரத்தில் குடும்பமாகச் சாப்பிடும் பழக்கம் முஸ்லிம்களிடம் ஓரளவு குறைவடைந்தாலும் கணிசமான அளவு காணப்படுகின்றது. மேலும் கட்டியணைத்து முஸாபாஹ் செய்யும் பழக்கமும் குடும்ப உறவுகளில் காணப்படுகிறது. இது மது பாவனை போன்ற விடயங்களிலில் இருந்து இளையோர்களைப் பாதுகாக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. ஆனால் இவை அருகி வருகிறது. அடுத்தது விரைவாக தற்கொலைக்குத்த தயாராகிய விடயம், முஸ்லீம்கள் எல்லாவிடயத்தையும் விட முக்கியத்துவம் கொடுப்பது மதத்துக்கே ஆகும். ஒரு முஸ்லீமைப்பிடித்து உனது சமயத்துக்கு ஆபத்துள்ளது என மூளைச்சலவை செய்து தற்கொலைக்குத் தயாராகத் சொன்னால் தயாராகி விடுவான். இப்படியானவர்களைத் தெரிவு செய்வது இலகுவில் உணர்ச்சிவசப்படுபவர்களிலிருந்தே. பேச்சில், நடத்தையில், இது போன்ற தொடர்பு சாதனங்களில் தீவிரமான கருத்துப்பதிபவர்களிலிருந்து இது தென்படும். சமூகமாக வாழமுடியாத மனநிலையில் இருப்பார்கள்.
2. தாக்குதலுக்கு கிறிஸ்தவ ஆலயங்கள் தெரிவு செய்யப்பட்டதற்கான காரணம் என்ற விடயம், இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் உலகப்போக்கினை வைத்துப் பார்த்தால் இத் தீவிரவாதிகளின் இலக்கை அடைய முடியாமல் தடுத்தது கிறிஸ்தவ உலகம் என்பதனால் இத்தெரிவு இடம்பெற்றிருக்கும். மற்றயது, ஈஸா நபி கொலைசெய்யப்பட்டாரா? அல்லது உயர்த்தப்பட்டார்? என்பது முஸ்லிம்கள் மத்தியில் இது ஒரு பேசுபொருளே கிடையாது. உயர்த்தப்பட்டார் என்பது கொள்கை அத்துடன் அது முடிந்து விடுகிறது. மேலும் ஈஸா நபி இறுதியில் உலக மக்களைக் காப்பாற்ற வருவார் என்பதே இஸ்லாமிய கோட்பாடு எதிர்மறையான விளக்கம் பெற்றுள்ளீர்கள்.
நன்றி மதிப்பிற்குரிய பேராயர் அவர்களே.

Post a Comment