May 09, 2019

பாராளுமன்றத்தில முஸ்லிம்களுக்கு எதிராக, விசம் கக்கினான் விமல் வீரவன்ச

நாட்டின் பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் குறித்து எதிர்க்­கட்சி உறுப்­பினர் விமல் வீர­வன்­ச­விற்கும் ஆளும்­கட்சி  முஸ்லிம் அமைச்­சர்கள் மற்றும் எம்.பிக­ளுக்கும் இடையில் கடும் வாக்­கு­வாதம் நில­வி­யது.  உங்­களால் ஒருதாய் மக்­களாய் இந்த நாட்டில் இருக்­க­மு­டியும் என்றால் வாழுங்கள் இல்­லையேல்  நீங்கள் அனை­வரும் எங்­கி­ருந்து வந்­தீர்­களோ அந்த இடத்­துக்கே போய்­வி­டுங்கள். இந்த நாட்­டினை நாச­மாக்க வேண்டாம் என ஆவே­ச­மாக சபையில் தெரி­வித்தார் விமல் வீர­வன்ச எம்.பி. 

பாரா­ளு­ம­ன்றத்தில் நேற்று  புதன்­கி­ழமை நடை­பெற்ற நாட்டின் பாது­காப்பு நிலை­வரம் தொடர்­பான சபை ஒத்தி வைப்பு வேளை விவா­தத்தின் இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போது அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

ஜெனிவா யோச­னை­க­ளுக்கு அமைய 30/1 பிரே­ர­ணையில் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­பட  வேண்டும் என்ற கோரிக்கை உள்­ளது. அதனை பயன்­ப­டுத்தி இங்கு வாய்ப்­பு­களை உரு­வாக்கி புதிய பயங்­க­ர­வாத சட்­டத்தை கொண்­டு­வ­ரு­கின்­றது. பயங்­க­ர­வாத சட்­டத்தில் திருத்­தங்கள் கொண்­டு­வந்து இருக்கும் சட்­டத்தை பலப்­ப­டுத்த முடியும். அதை விடுத்து சர்­வ­தேச தேவை­க­ளுக்­கான நகர்­வு­களை இங்கு எடுக்க வேண்டாம். நாம் எதிர்க்­கட்­சி­யாக எமது கட­மையை செய்து வரு­கின்றோம். நாம் ஐக்­கிய தேசிய கட்சி எதிர்க்­கட்­சி­யாக இருந்த காலத்தில் இருந்த தவ­று­களை நாம் செய்ய மாட்டோம். இப்­போதும் நாட்டில் ஒரு அச்­சு­றுத்தல் சூழலில் நாம் எதிர்க்­கட்­சி­யாக அர­சாங்­கத்தை நெருக்­க­டிக்குள் தள்­ளாது ஒத்­து­ழைப்பு வழங்கி வரு­கின்றோம். அத­னைக்­கூட விளங்­கிக்­கொள்­ளாது நீங்கள் இவ்­வாறு செயற்­படக் கூடாது.

எமது ஜனா­தி­பதி காலத்தில் குண்டு வெடிப்­பதை நிறுத்தி இனி குண்டு வெடிக்­காத நாட்­டி­னையே நீங்கள் பொறுப்­பெற்­றீர்கள். ஆனால் இன்று உங்­களின் நல்­லாட்­சி­யிலும் குண்டு வெடிக்­கின்­றது. ஆகவே இந்த சம்­ப­வங்­க­ளுக்கு ஜனா­தி­பதி, பிர­தமர் அனை­வ­ருமே பொறுப்­புக்­கூற வேண்டும். 2014 ஆம் ஆண்டு தொடக்கம் ஐ.எஸ். பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் இருந்தும் அதனை தடுக்க முடி­யா­தது ஏன். கிறிஸ்­தவ பாட­சா­லைகள் மூடப்­ப­டு­கின்­றன, இஸ்­லா­மிய பாட­சா­லைகள் மூடப்­ப­டு­கின்­றன. ஆனால் சிங்­கள தமிழ் பாட­சா­லைகள் ஏன் திறக்­கப்­ப­டு­கின்­றன. அனைத்து மாண­வர்­க­ளையும் பாது­காக்க வேண்டும். பாட­சா­லைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டாலும் கூட பிள்­ளை­களை பெற்றோர் பாட­சா­லை­க­ளுக்கு அனுப்ப மாட்­டார்கள்.  குண்டு வெடிக்கும்  என்ற அச்­சத்தில் அல்ல இந்த அர­சாங்கம் மீதான அவ­நம்­பிக்கை கார­ண­மா­கவே  எவரும் வெளியில் வரு­வ­தில்லை.  அமை­தி­யாக வாழ விரும்பும் சிங்கள், தமிழ் முஸ்லிம் மக்­களின் வாழ்க்­கையை நாச­மாக்க வேண்டாம்.

யசீர் அர­பாத்தின் வாகன சார­தியை தன்­வ­சப்­ப­டுத்தி மொஸாட் புல­னாய்­வுத்­துறை பணம் கொடுத்­தது. ஏன் கொடுத்­தது என்றால் யாசீர் பற்றி தகவல் பெற்­றுக்­கொள்­ளவே. அதேபோல் தான் இங்கும் தவ்ஹீத் ஜமா­அத்தின் எவ­ரையும் விலைக்கு வாங்கி அவர்­களின் மூல­மாக தக­வலை பெற்­றுக்­கொள்ள அவர்­களின் சில­ருக்கு பணம் வழங்­கப்­பட்­டி­ருக்­கலாம். அதேபோல் அமைச்சர் கிரி­யெல்ல வெளி­யிட்ட துண்­டுப்­பி­ர­சு­ரங்களில் ஜனா­தி­ப­தியை குற்றம் சுமத்­தி­யதை போலவே அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் மீதும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. இந்தப் பயங்­க­ர­வாத அமைப்­புடன் ரிஷாத் தொடர்பில் உள்ளார் என்ற கார­ணி­களை கூறி­யுள்­ளனர். அதேபோல் தேரர் ஒருவர் ரிஷாத் தான் பயங்­க­ர­வா­தத்தை வளர்ப்­ப­தாக கூறினார். இந்த ஆட்­சியை உரு­வாக்­கிய அனை­வரும்  இந்த பயங்­க­ர­வா­தத்­திற்கு பொறுப்­புக்­கூற வேண்டும் என்றார். ‘

இதன்­போது ஆளும் தரப்பில் இருந்த அமைச்சர்  ரிஷாத் கடும் சினம்­கொண்டு விமல் வீர­வன்ச எம்.பியுடன் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்டார். தய­வு­செய்து நீங்கள் கூறிய விட­யங்­களை வாபஸ் பெற்­றுக்­கொள்ள வேண்டும். ஹன்சார்ட் அறிக்­கையில் இருந்து நீக்க வேண்டும். பொய்­யாக கார­ணி­களை கூறி இன­வா­தத்தை தூண்ட வேண்டாம் என்றார். இதற்கு பதில் தெரி­வித்த விமல் எம்.பி, இந்த கருத்­துக்­களை நான் கூற­வில்லை, உங்­களின் தலை­வர்கள் தான் கூறு­கின்­றனர். நான் இன­வாதம் பரப்­ப­வில்லை நீங்கள் இந்த நாட்டில் அமை­தி­யாக வாழ விரும்பும் மக்­களை அழிக்க முயற்­சித்து வரு­கின்­றீர்கள்.  இன்னும் அடிப்­ப­டை­வாதம் குறித்து பேச இட­ம­ளிக்க முடி­யாது. கிழக்கில் உள்ள சகல அடிப்­ப­டை­வாத பாட­சா­லை­க­ளையும் மூட வேண்டும். இங்­குள்ள முஸ்­லிம்கள் அரா­பி­யர்கள் இல்லை என்­பதை நினைவில் வைத்­து­கொள்ள வேண்டும். இந்த சமூ­கத்தில் வாழ பழ­கிக்­கொள்ள வேண்டும். தற்­கொலை குண்­டு­தா­ரிகள் உரு­வாக்கும் வஹாப்­வாத பாட­சா­லை­களை மூடுங்கள். சாதா­ரண  குடி­ம­கனை  தற்­கொலை குண்­டு­தா­ரி­யாக மாற்றும் அரபுக் கல்­வியை நிறுத்­துங்கள்.  சிங்­கள, தமிழ் மக்­க­ளுடன் வாழப் பழ­கிக்­கொள்­ளுங்கள். இப்­போ­தா­வது உங்­களின் சமூ­கத்தில் உள்ள குறைகள் குறித்து சுய பரி­சீ­லனை செய்­து­கொள்ள பழ­குங்கள். இப்­போது கவ­னிக்­கா­விட்டால் இன்னும் இன்னும் இந்த நாட்டில் தற்­கொ­லை­தா­ரி­களே உரு­வா­வார்கள். தற்­கொ­லை­தா­ரி­களை உரு­வாக்கும் நிலை­யங்­களே இந்த நாட்டில் உரு­வாகும் என்றார்.

அவர் கருத்­துக்­களை ஆவே­ச­மாக முன்­வைத்து உரை­யாற்­றிக்­கொண்­டி­ருந்த போது ஆளும் தரப்பில் இருந்த முஸ்லிம் எம்.பிக்கள் சபையில் கூச்­ச­லிட்டு முரண்­பட்­டுக்­கொண்­டி­ருந்­தனர். அரேபியக் கல்வி முறை குறித்து தமது கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்தனர். இதற்குப் பதில் தெரிவித்த விமல் எம்.பி, நீங்கள் அனைவரும் இலங்கையர், அராபியர் அல்ல. முதலில் இந்த நாட்டினை நேசிக்கும் கொள்கைக்கு வாருங்கள்.  உங்களால் ஒருதாய் மக்களாய் இந்த நாட்டில் இருக்கமுடியும் என்றால் வாழுங்கள் இல்லையேல்   நீங்கள் அனைவரும் எங்கிருந்து வந்தீர்களோ அந்த இடத்துக்கே போய்விடுங்கள். இந்த நாட்டினை நாசமாக்க வேண்டாம் என்றார்.

7 கருத்துரைகள்:

இதில் விஷம் இருப்பதாக கருத முடியாது. முஸ்லீம்கள் இக்கட்டுரையில் உள்ள சில நல்ல விடயங்களை பின்பற்றுவது காலத்தின் தேவை.

முஸ்லீம்கள் மிக நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். நாங்கள் இலங்கை முஸ்லீம்களா? அல்லது இலங்கையில் முஸ்லீம்களா? என்று முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.

நாம் இலங்கை முஸ்லீம்கள் என்றால் இலங்கை நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து மற்றைய சமூகங்களுடன் இணைந்து வாழ்வதற்கு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியது கட்டாயம்.

அப்படி இல்லாது நாங்கள் இலங்கையில் முஸ்லீம்கள் என்று வேற்றுமையாக வாழ நினைத்தால் விமல்வீரவன்ச சொல்வது நியாயம் ஆகிவிடக்கூடிய அபாயம் உள்ளதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

You guys are trouble makers for all the communities in Sri Lanka. The all Normal people’s always like peace and harmony, but the politicians like you want to destroy our country. By the way we know the deferent between the fox and dog.

He was named as former terrorist last week by Hon.PM . How do talk about mother land & patriot about OUR MOTHER LAND inside the Parliament while he and his fellows kept bomb in side the Parliament in 1989. one mp was killed and hon Lalith seriously injured . the bloddy muslim mps have no scense in this time to reply. We are very patriotic than that idiot.. & musammil

Nothing wrong in his statement

This is Mr. Ranil's mistake that he excuwed Wimal Weera Wansa from arrestment for three, four cases. Now, he is jumping against the government.
Simply Mr.Wimal Weera Wansa could have been replied by the other party that to have circumsised if want to debate about Moslems, a reply in the past from late Mr. Aswar MP to Mr. Mano Gabesen.
What does Wimal or Ravi or Ranjan any other Kuffaar know about Islam to debate about Islam?
Moslems in this country didn't come from any country as per the history of Sri Lanka bit Sinhalese came from India is the history of school syllabus. Has Wimal attended schools?

தமிழ் பயங்கரவாதம் பற்றி மூச்சிவிடாமல் பேசிக்கொண்டிருந்தவன் இன்று அடிக்கடி முஸ்லிம் பயங்கரவாதம் பற்றி பேசுகிறான் என்றால் இதன் பின்னணி எப்படியிருக்கும் என்று யூகித்துகொள்ளுங்கள். 2012 வரை சம்பிக்கவும் தமிழ் பயஙகரவாதத்தை எதிர்த்துக்கொண்டிருந்து திடீரென்று முஸ்லிம் பயங்கரவாதம் பற்றி பேசி மஹிந்த ஆட்சியை கவில்தான். ஏன் அதே வேலையை வீரவங்கிச தன்னை காப்பாற்றிய ரணிலுக்காக செய்யக்கூடாது?

Mr. Wimal doesn't know what Mahawamsa tells about the origin of Sinhalese brothers and how Buddhist doctrine had been propagated in Sri Lanka. Does he know about Sinabahu and Sinhaseevali the ancesters of Wimal Weerawansa? He has to study about himself first and then better pointing his fingers to others.

Post a Comment