May 16, 2019

பழைய பகைமையை வைத்துக்கொண்டு பழி தீர்க்காதீர்கள்

- ஹஸ்பர் ஏ ஹலீம் -
                                                         
 கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்நாட்டில் முறையற்ற பிரதம தெரிவிற்கு ஆதரவு வழங்காமையினால்  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்  றிசாட் பதியுத்தீன் அவர்களை பழைய பகைமையை வைத்துக் கொண்டு பழி தீர்க்க முன்னெடுக்கப்படும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இவ்வாறு குச்சவெளி பிரதேச தவிசாளர் ஏ.முபாரக் தெரிவித்துள்ளார்.

 இன்று (16) வியாழக்கிழமை மாலை குச்சவெளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளரகளுக்கான விசேட சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்..

 அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்:-


ஒரு சில தீவிரவாதிகளின் செயற்பாட்டினால் தற்போது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக இப்புனிதமிகு றமழான் மாதத்தில் எத்தனையோ பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட நிலையிலும், எத்தனையோ முஸ்லிம்களின் உயிர்கள் பறிக்கப்பட்ட நிலையிலும் எமது நாட்டிலே வாழும் முஸ்லிம்கள் கடும் அவலநிலையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இத்தருவாயிலே முஸ்லிம்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பும் கௌரவ அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அவர்களுக்கு எதிராக இன்றைய தினம் கௌரவ சபாநாயகர் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

 நாட்டின் ஜனாதிபதியினையும், பிரதமரையும், அரசாங்கத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மையினர் இருந்து வருகின்றனர்.

 எமது ஆதரவினூடாகவே, எதிர்பாராதவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனை மறந்து செயற்படுவது எதிர்காலத்தின் சிறுபான்மை மக்களாகிய எங்களிடம் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்க கோரும்போது இதனை ஞாபகப்படுத்த நேரிடும் என்பதை சுட்டிகாட்டுவதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

5 கருத்துரைகள்:

Very True. We will Stay with Mr. Rishad Minster.

அமைச்சரும், இவ்வாறு நாங்கள் இல்லாட்டி.... என்று பேசிப்பேசியே கடுப்பேற்றி வைத்திருக்கிறார். இராஜதந்திரமற்ற அணுகு முறையே இவற்றுக்கெல்லாம் காரணம். விரும்பினால் இராஜதந்திரத்தை ஹக்கீம் அவர்களிடம் கற்றுக்கொள்ளலாம்.

அமச்சர் ரிசாத் (முன்னால் பயங்கரவாதி அல்ல) ஆயுதம் தூக்கி சிங்கள,தமிழ் போராட்டங்களில் மக்களை கொண்டு சொத்துக்களை அழித்து விட்டு இப்போது அரசியலுக்கு வந்து வெள்ளை ஆடை அனியவில்லை.ஒரு பொறியியலாராக ஆர்ம்பித்து அரசியலுக்கு வந்த ஒரு புத்தி ஜீவி (முன்னால் பயங்கரவாதி அல்ல).ஆனால் தான் சார்ந்த சமூகத்துக்கு குரல் கொடுப்பதனால்,Muslim மக்களுக்காக அஹிம்சை ரீதியில் போராடுவதனால்,எமக்கான உரிமைகளை பேசுவதனால் சிங்கள,தமிழ் இனவாத,முன்னால் ஆயுதம் ஏந்தி மக்கலை கொண்ட கயவர்கலுக்கு அமச்சர் ரிசாத்தை பிடிக்காது.அன்மையி ஏற்பட்ட அரசியல் பிரச்சினையில் கூட அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை.இப்படியான முன் கோபங்கலுக்காக இந்த போலி குற்ற சாட்டும்,நம்பிக்கையில்லாப் பிரேரனயும்.இவை அனைத்தும் அல்லஹ்வின் துனயுடன் அமைச்சர் துனிச்சலுடன் எதிர் கொள்வார்.நாட்டு மக்களே சிரிக்கின்ரார்கல் அமைச்சர் ரிசாத்துக்கு எதிராக பிரேரனை கொண்டு செல்பவர்கலை பார்த்து. ஏனெனில் அவர்களின் கடந்த கால தீவிரவாத வரலாறு முழு நாடே அறியும்.இந்த பிரேரனையின் முதல் தோல்வியே மஹிந்தவும்,பசிலும் அதை ஆதரிக்கவிலை என்பது.

அருமை ப்ரோ

பயத்தினால் பேசும் இராஜதந்திரம் என்பது கோழைக்கு சமம்.(நானல் போல் வழைந்து கொடுக்காமல் இரும்பாய் இருந்து உடைந்து போவது மேல்) இனவாதிகலுக்கு பயந்து இராஜதந்திரம் பேசி பிரயோசனமில்லை

Post a Comment