Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள், சீண்டுவதை உடன் நிறுத்த வேண்டும்

ஐ.எஸ். பயங்கரவாதத்தால் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமையிலிருந்து மீண்டு எழுவதற்காகவும்,தங்களை சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதற்காகவும்  தமிழர்களுடன் ஒப்பிட்டுப் பேசி சீண்டுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் உடன் நிறுத்த வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பு செயலாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பு செயலாளர் ஜனகன் விநாயகமூர்த்தி மேலும் தெரிவிக்கையில், 

தமிழர்கள் இன்றும்  மாவீரர் தினம் நடத்துகிறார்கள்.ஆனால், நாம் அப்படி செய்யவில்லை. ஐ.எஸ். பயங்கரவாதிகளை நாம் இன்று பாதுகாப்புத் தரப்பினரிடம் காட்டிக்கொடுக்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின்  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தனியார் சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.  

தமிழரின் போராட்டத்துடன் ஒப்பிட்டு இதுபோன்ற கருத்துகளை பல்வேறு மேடைகளிலும், ஊடகங்களிலும் பல முஸ்லிம் அரசியல்வாதிகளும், இஸ்லாமிய மத தலைவர்களும் அவசர அவசரமாக தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். 

சிங்கள மொழியில் இத்தகைய கருத்துகளை இவர்கள் கூறுவதை தமிழர்கள் அறியார் என இவர்கள் நினைக்க கூடாது. ஐ.எஸ். பயங்கரவாதத்தால் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமையிலிருந்து மீண்டு எழுவதற்காகவும், தங்களை சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதற்காகவும்  தமிழர்களை இவ்விதம் ஒப்பிட்டுப் பேசி சீண்டுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் உடன் நிறுத்த வேண்டும்.

இன்றைய தினங்களில் தமிழர்கள் அனுஷ்டிப்பது மாவீரர் தினமல்ல. இது பத்து வருடங்களுக்கு முன் கொத்து கொத்தாக கொள்ளப்பட்ட தமது உறவுகளை நினைவு கூறும் நிகழ்வுகளே நடக்கின்றன.  

இத்தகைய நினைவு கூரல்களை இந்நாட்டின் ஜனாதிபதியும், இராணுவ தளபதியும் கூட புரிந்துக்கொண்டு இருக்கும்போது எம்.பி. முஜிபுர் ரகுமான் உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது வாதங்களை முன்வைக்க, தாம்  ஐ.எஸ். பயங்கரவாதிகளை காட்டிக்கொடுக்கிறோம் என்று பெருமை பேசி நல்ல பெயர் வாங்குவதற்காக தமக்கு புரியாத தமிழர் அரசியல் பற்றி கதைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். 

இதுபற்றி கவனத்தில் எடுக்கும்படி  அமைச்சர் மனோ கணேசனிடமும் கோரியுள்ளேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பு செயலாளர் ஜனகன் விநாயகமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. It is wrong to compare both. The Easter Bombing is 100% inhumane Nobody will support these kind of action including Muslim while the fight for Tamil's right is reasonable despite there are some atrocities from Tamil movements (and Muslim side too). They have the right to mourn and remember what happened to their fellows peacefully. It will be wonderful if We Muslims too join in their grief.
    Our politicians should stop blaming others and be more mature when speaking.

    ReplyDelete
  2. 30 வருடங்களாக நாட்டை அழித்து,தலதா மாளிகை.காத்தான் குடி பள்ளி கொலைகள்.ஏராவூர் படுகொலைகள்,அரந்தலாவ இளம் பிக்குகள் படுகொலை,வட பகுதி Muslim மக்கள் இனச் சுத்திகரிப்பு அவர்களின் அசயும் அசையா சொத்துக்கள் கொள்ளையடிப்பு.எத்தனையோ பயங்கரவாத வெரியாட்டங்கலை செய்துவிட்டு இப்போது தாங்கள் சுத்தம் என பேச கொஞ்ஞம் கூட நா கூசவில்லையா

    ReplyDelete
  3. Hello ஜனகன் brother, ஒங்கட கூலிங் கிளாசை (Sunglassess) ரெண்டு நாளைக்கு எனக்கு இரவலா தர ஏலுமா? எங்கட பக்கம் சரியான வெய்யில். திருப்பித் தந்துடுவேன்.

    ReplyDelete
  4. @sahul cader,
    He ordered to demolish all monuments, With Muhammad bin Saud persecuted and killed whoever not complying with their ideology. If you have different interpretation then that is your personal you can follow whatever you want and let other people follow their belief. for now Extreme Salafi movements are only preaching peacefully but once they gain upper hand, they will start to use violance as a means to convert people and fellow Muslims.

    ReplyDelete
  5. முஸ்லிம்களை பற்றி உனக்கு என்னடா தெரியும் பீ நாயே மூத்துரம் கலுவாதெ மூதேவி

    ReplyDelete

Powered by Blogger.