Header Ads



உங்களிடம் கேட்பது, ஒன்றே யொன்றுதான்...!


அங்கின நெலம என்ன?"

எல்லாம் முடிஞ்சி வா,"

ஆ? என்ன சொல்றிங்க"

"எங்கட ஊடு, கடே, ஆட்டா எல்லாத்துக்கும் நெருப்பு வெச்சி வா, வைப் புள்ளங்க கூட ரோட்டுல நிக்கிறம் வா😭, "

"யாரு வா செஞ்சாங்க, எங்க இருக்கிறிங்க இப்ப? கேபியூ போட்டுத்தானே ஈக்கி?"

"எங்களுவளுக்குத்தான் கேபியூ போட்டிருக்காங்க வா, அவகளுக்கு இல்ல😭"

"சரி அழாதீங்க வா, எங்க இருக்கிங்க இப்ப?"

"எங்கட ஆட்டாக்கு நெருப்பு வெச்சி, ஊடு கட எல்லாம் எரிஞ்சிட்டுவா, ரெண்டு பள்ளியும் ஒடச்சி, குரான் எல்லாம் நாசம் பன்னிட்டாங்க வா, நடந்து புள்ளயல் வைப் எல்லாம் எங்கவா போவம்"

"சரி இப்ப எங்க போறிங்க"

"..............."
"ஹலோ? ??? ஹலோ? ரியாத்? ஹலோ?"""

"............."

தொலைபேசி உரையாடலை கேட்டவுடன் இதயம் கணத்து கண்கள் பனித்துவிட்டன. பெரும்பாண்மை சமூகத்துக்குள் வாழும் சிறு சிறு எண்ணிக்கையின் முஸ்லீம் மக்களையும் அவர்களின் சொத்துக்களையும் எண்ணி மிகவும் மனம் பதட்டமடைந்துகொண்டே இருக்கிறது.

இந்த ரமழான் காலத்தில் பெண்கள் குழந்தைகளை எடுத்துக்கொண்டு வயல்களையும் காடுகளையும் நோக்கி ஓடியிருக்கிறார்கள். அங்கேயே நோன்பு திறந்திருக்கிறார்கள். சொத்துக்களும் பள்ளிகளும் வாகனங்களும் வீடுகளும் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளன. மினுவாங்கொடையில் சுமார் பதினைந்து கடைகள் எரிந்துகொண்டிருக்கின்றன.

நாம் அரசியல் ரீதியாக மட்டுமன்றி அனைத்து வகையிலும் பலவீனமடைந்துள்ளோம். எம் அரசியல் தலைமைகள் மௌனிகளாகவே இருக்கிறார்கள். இதுவே எமது சாபக்கேடு.

உங்களிடம் கேட்பது ஒன்றேயொன்றுதான், அனைத்தையும் மறந்து இந்த இரவின் தஹஜ்ஜத்துடைய நேரத்தில் இந்த மக்களுக்காக கண்ணீர்வடித்து பிரார்த்திப்பதோடு, இந்த அட்டூழியங்களை செய்யும் காடையர்களும், இதனை பார்த்தும் பாராது இருக்கும் இந்த அரசாங்கமும், அதில் அங்கம் வகிக்கும் நமது அனைத்து அரசியல்வாதிகளும் நாசமடைய பிரார்த்திக்குமாறும் உங்கள் அனைவரையும் தயவாய் கேட்டுக் கொள்கிறேன்.

5 comments:

  1. இன்ஷா அல்லாஹ் கண்டிபாக கேட்பேன்..

    ReplyDelete
  2. அரசியல் வாதிகலே எப்போதோ ரனில் யாரெண்டு தலைவர் Ashraf சொல்லியுள்ளார்.இவ்வளவும் நடந்து விட்ட பின்னும் நீங்கள் நல்லாச்சிக்கு முட்டுக் கொடுக்காமல் இன்னிக்கே விலகுங்கல்.ஜனாதிபதிக்கும் ஆரம்மத்தில் ரனில் இனித்த மிட்டாய்தான் பின்னாளில் ஜனாதிபதிக்கே புரிந்து விட்டது ரனிலின் நரித் தந்திரம்.இன்னுமா உங்களுக்கு புரியவில்லை

    ReplyDelete
  3. ஆமீன் அநியாயம் இழைக்கப்பட்டவர்களின் கோரிக்கையை நிச்சயமாக ஏற்றுக் கொள்ளுவதாக அல்லாஹ் கூரியுள்ளான் நிச்சயமாக அல்லாஹ்வின் சாபமும் தண்டனையும் விரைவில் அழிவார்கள்

    ReplyDelete
  4. நிலமைகளை சீர்செய்யுமாறும், முன்பிருந்ததை விடவும் அமைதியான சந்தோஷமான, நிம்மதியான, பரகத்பொருந்திய வாழ்க்கையை தருமாறு அல்லாஹ்விடம் பிரார்திப்போம், சாபத்தைவிட அதுவே மிகச்சிறந்தது.

    ReplyDelete

Powered by Blogger.