Header Ads



எத்தனை சர்வதேச புலனாய்வு அமைப்புக்கள், இலங்கையில் களமிறங்கியுள்ள தெரியுமா..?

இலங்கையில் இருந்தவாறே FBI உள்ளிட்ட 9 சர்வதேச அமைப்புக்களின் குழு இலங்கையில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினை அடுத்து நாட்டின் பாதுகாப்பில் முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

தீவிர விசாரணைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதுடன், படையினர் தொடர்ந்தும் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், வெளிநாட்டு விசாரணை நிறுவனங்களில் எப்.பி.ஐ., ஸ்கொட்லன்ட் யார்ட், அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் மற்றும் நியூஸிலாந்து ஆகிய சிறப்பு விசாரணையாளர்கள் இணைந்து செயற்படுவதாக பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவும் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த விசாரணைகளை FBI உள்ளிட்ட 9 சர்வதேச அமைப்புக்கள் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாருடன் இலங்கை மிக நெருக்கமாக செயற்படுவதாகவும், பயங்கரவாதிகளின் சர்வதேச வலையமைப்பு குறித்த தகவல்களை பறிமாற இன்டர்போலுடன் இணைந்து 24 மணி நேர நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் 15 குழுக்கள் முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளுக்கு இந்த 9 வெளிநாட்டு விசாரணை நிறுவங்களும் தொழில்நுட்ப ரீதியாகவும் ஏனைய உதவிகளையும் வழங்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.