Header Ads



எமது கண்களை நாமே குத்தி, குரலற்ற ஒரு சமூகமாக அல்லல்பட்டிருக்கிறோம் - றமீஸ் அப்துல்லா

கடந்த ஒரு மாதகாலம் குரலற்ற ஒரு சமூகமாக அல்லல்பட்டிருக்கிறோம். எமது கண்களை நாமே குத்தியிருக்கிறோம்.பல்வகைமையுள்ள ஒரு நாட்டில் வாழ்வதற்கான தகைமைகள் இழக்கச் செய்யப்படிருக்கின்றன .எம்மை நாம் மீள்வாசிப்பு ச் செய்யத் தவறியிருக்கிறோம். ஒரு தீவிரவாதக் குழுவால் உயிரற்ற சட சமுகமாக மாற்றப்பட்டுள்ளோம். பல தவறுகள் விடப்பட்டிருக்கின்றன. அவற்றை நாம் ஒத்துக்கொண்டேயாக வேண்டும்.

இவ்வாறு #சம்மாந்துறையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றில் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா மேலும் பேசுகையில்:

வாழ்க்கையை செப்பனிட சமயம் உதவும். இலக்கியம் எம்மைச் சரியாக வழிநடாத்தியிருந்தது. அது வாழ்வின் ஓரங்கம். சமயம் சடங்குகள் இலக்கியங்கள் எமது வாழ்வியலை உயிரோட்டமுள்ளதாக மாற்றுகின்றன. 72 கன்னியர்களுடன் சொர்க்கத்தில் வாழும் கேலிக்கிடமான சமய தீவிரவாதம் பற்றி இன்று பேசப்படுகின்றது. எமது மனைவிமார் பற்றி கவலைப்படவேண்டும்.

எமது கலை கலாசாரம் பண்பாடுகளை மறந்துள்ளோம். மததீவிர சிந்தனையில் மாற்றப்பட்டுள்ளோம். எந்தவொரு சமயமும் சமய தீவிரவாதத்தை அனுமதிக்கவில்லை. அப்படிப்பட்டவர்களை உலகம் புறந்தள்ளும். நல்ல வழிமுறைகளை மறுமை நெறிகளை காட்டும் புனித சமயத்தில் வாழ்ந்த நாம் தீவீரவாத சமயத்தின் பின்னால் ஈர்க்கபட்டுள்ளோமா? என்ற சிந்தனை எழுகின்றது.

சில இளைஞர்களின் தீவீரவாதத்தால் முழு சமுகமும் அடித்து நொறுக்கப்பட்டு மண்ணோடு மண்ணாய்ப் போன நிலை எழுந்துள்ளது. பல்வகைமை நாட்டில் வாழும் தகுதியை இழந்துள்ளோம்? ஓரு குழுவால் உயிரற்ற சடசமுகமாக மாற்றப்பட்டுள்ளோம்.

எமது சுயநிர்ணய உரிமையை மனித உரிமைகளை மதஅடையாளத்தை நாமே தொலைத்துள்ளோம்.

கத்னா வைபவத்தில் பின்னர் களிகம்பாட்டம் ஆடியதை எந்த இஸ்லாம் தடைசெய்தது? வழமையான பண்பாட்டு அமிசங்களை நாம் ஏன் புறக்கணித்தோம்? புகாரி கிரந்தம் படித்தோமா? நெய்ச்சோறு வரலாற்றைப் படித்தோமா? சமயநூல்களை இலக்கிய நூல்களை வாசிக்கத் தவறியிருக்கிறோம்.

சில பள்ளிவாசல் குத்பாக்களில் தீவிரசிந்தனை மதவாதிகளை பேசவைத்ததும் தவறுதான். சடங்குகளிலிருந்து தேவையில்லாமல் வெளியேறியிருக்கிறோம்.

எமது பாரம்பரிய கலாசாரங்களை திரும்பிப் பார்க்கவேண்டும். அவற்றை எதிர்கால சந்ததிக்கு எத்திவைக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்.

எமது இனம் ஏனைய இனங்களோடு சகவாழ்வுடன் வாழ்வதற்கு கற்றுக் கொள்ளவேண்டும். அவர்களது கலாசாரங்களை மதிக்க வேண்டும். ஏனைய இனத்தவர்க்கு மதத்தவர்க்கு மதிப்பளிக்க வேண்டும்.

காரைதீவு நிருபர் சகா.

1 comment:

  1. இஸ்லாம் தோன்றிய 1400 ஆண்டுகளுக்குமேல் கடந்தும் தற்போது
    எமது நாட்டில் 30-40 வருடங்களாகத்தான் இஸ்லாத்துக்குள் பிரிவினைகளும்
    பிரச்சினைகளும் கருத்து முரண்பாடுகளும் தோன்றக்கூடிய அமைப்புக்களும் அதன் தலைமைகளும் உருவாகி எம்மை சீரளித்துக்கொண்டுள்ளதை இனியும்
    நாம் உணராமல் இருந்தால் எம்மை இறைவனாலும் காப்பாற்ற முடியாது.
    பேராசியர் போான்று சிந்திக்கின்றவர்கள் இதில் கவனம் செலுத்துதல் அவசியமும் அவசரமுமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.