Header Ads



தாக்குதலுக்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதி ஏற்று, உடனடியாக பதவி விலக வேண்டும் - பொன்சேக்கா

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை தடுக்க தவறியமைக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடன் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “இந்த தாக்குதல் குறித்து முன்தாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அயல் நாடுகளும் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு விடயத்தினை யாரும் நிராகரிக்கவோ, கவனக்குறைவாக எடுத்துக்கொள்ளவோ கூடாது. உண்மையில் அவர்களின் பணியை செய்யவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பாதுகாப்பு சபை கூட்டத்தில் தாக்குதல் குறித்து 15 தடவைகளுக்கு மேல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் கூறும் போது அது குறித்து ஜனாதிபதி கண்டுகொள்ளவில்லை.

அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பாதுகாப்பிற்கு உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை. அரசியலுக்காக பாதுகாப்பு விவகாரங்களை விட்டுக்கொடுக்க கூடாது.

இந்த விடயத்தை மிக தீவிரமாக கவனத்தில்கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், இந்த தாக்குதலுக்கு அரசியல் காரணம் இல்லை. கவனக்குறைவே இந்த தாக்குதலுக்கு காரணம்.

இந்த தாக்குதல் குறித்து பொலிஸ்மா அதிபர் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார். எனினும், ஜனாதிபதி இதனை முற்றிலும் நிராகரித்து விட்டார். அதனை அவர் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் தாக்குதலுக்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களுக்கு பொறுப்பேற்று தாம் பதவிவிலகப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. It is high time the UNP must and invariably think and act to file no confident motion in Parliament against the President in view of his negligence to protect the country and its people including the guests of various countries, paving the way to nominate a sensible and efficient president who would give preference and priority to defense and requirements of the country over his/her own agenda.

    ReplyDelete

Powered by Blogger.