Header Ads



நாங்கள் சட்டத்தினை கையில் எடுத்தால், எச்சரிக்கும் பௌத்த தேரர்


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் சம்பவங்களின் பின்னணியில் அடிப்படைவாத அரசியல் சூழ்ச்சிகள்  காணப்படுவதாக மாவரல்லே பத்திய தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு - இராஜகிரியவில் இன்றைய தினம் -14- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல் சம்பவத்தினை தொடர்ந்து கத்தோலிக்க மற்றும் கிறிஸ்த்தவ சமூகத்தினர் இணைந்து முஸ்லிம் கமூகத்தினருக்கு எந்தவித அசம்பாவிதங்களையும் மேற்கொள்ளவில்லை.

ஆனால் இரண்டு வாரங்களின் பின்னர் தற்பொழுது ஏன் அவர்கள், மீது தாக்குதல் தொடுக்க வேண்டும். இதனை அடிப்படைவாத அரசியல்வாதிகளே செய்திருக்கவேண்டும். அவர்கள் சட்டத்தினை கையிலெடுத்துகொண்டு செயற்படநினைக்கின்றார்கள், 

இந்த நிலையில் கருப்பு வெசக் நிகழ்வுகளையும் முன்னெடுக்க போகின்றனர். மத்திய கிழக்கை சேர்ந்தவர்கள் அல்லது அராபியர்களுக்கு கறுப்பு வெசக் ஒன்றினை நடத்துவதே நோக்கமாக இருக்கலாம். தற்போதைய சூழ்நிலையில் அமைச்சர் ஒருவரும் தெரிவித்திருக்கின்றார் இந்த நாடு பௌத்த நாடு இல்லை என்று. நாட்டின் அமைச்சர்களுக்கு தெரியாதிருக்லாம் ஆனால் உலக மக்களுக்கு நன்கு தெரியும். நாங்கள் சட்டத்தினை கையில் எடுத்தால்.... நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்... வெசக் தினத்தன்று ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்துவார்கள். நாங்கள் வெசக் வாரத்தினை முன்னெடுத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில்.... பள்ளிவாசலுக்கும் கடைகளுக்கும் ஏன் கல் வீச்சு மேற்கொள்கின்றீர்கள்.... இதனை நிவர்த்தி செய்ய முடியாத அரசியல்வாதிகளினாலேயே நாட்டில் தற்போது பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

1 comment:

  1. ஒவ்வொருவரும் சூழ்ச்சி பற்றி பேசுகிரீர்கல் ஆனால் யார் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதை யாரும் கூறுவதில்லை முடியுமானால் அந்த சூழ்ச்சியாலரை கூறுங்கள்,நடவடிக்கை எடுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.