May 02, 2019

ஏதன்டவல பள்ளிவாசல் தாக்குதல் - மௌனிக்கும் ஊடகங்களும், மறைக்கப்படும் உண்மையும்

முஸ்லிம் எனும் பெயரில் யாரோ ஒருவரின் முட்டாள் தனத்தால் அரங்கேறிய கோடுரத்தை அரை மணிக்கு அறுபது முறை மீண்டும் மீண்டும் போட்டுக்காட்டிய ஊடகங்களே!.

உங்களின் ஊடக நீதி  எங்கே?

மக்கள் தங்களை சார்ந்து ஒரு கூட்டம் செய்த தவறுக்காகவும் நாட்டு மக்களின் நிம்மதியையும் , சுதந்திரத்தையும் அழித்து விட்டார்கள் என்ற கவளையுடன் நடமாடிக் கொண்டிருக்கும் நிலையில்  பள்ளிகளை உடைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இது இனந்தெரியாதோரால் நடாத்தப் பட்டுள்ளது என்றால் அவர்களை இனங்காட்ட வேண்டியது ஊடகத்தின் கட்டாய கடமையல்லவா?

இதை ஊடகம் செய்யுமா?

அல்லது மக்களுக்குத் தான் தெரிவிக்குமா?

ஒவ்வொரு மனிதனும் தனது நிலைக்கு ஏற்ப ஒரு மதத்தையும் கொள்கையையும் கடைப்பிடித்து வருகின்றான்.

அதை யாராவது அநீதிக்கு உற்படுத்தும் போது மன அழுத்தம் அதிகரித்து அவனது நடவடிக்கைகள் நாட்டையும் நாட்டு மக்களையும் பெரிய பாதிப்புக்குள் செலுத்திவிடுகிறது.

ஊடகங்கள் தங்களது நீதியை யார் பக்கமும் சார்ந்து நிற்காமல் நடுநிலையாக செயற்படுத்துவதே மக்களுக்கும் ஊடகத்தின் நம்பிக்கைக்கும் சிறந்தது.

இலங்கையில் அரங்கேறிய கோடூரத்தை அழிக்க அனைத்து முஸ்லிம்களும் உதவிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை குற்றவாழிகளுடன் இனைத்து பேடுவதையும்  அதனூடாக அவர்களின் மனதை காயப்படித்தியும் உள்ளது இந்த பள்ளி உடைப்புச் சம்பவம்.

கடந்த சில தினங்களாக மாற்று மத சகோதரர்களின் பாதுகாப்பிற்காக தங்களது உறவாக இருந்தாலும் ஊராராக இருந்தாலும் நாட்டு சட்டங்களையும், நாட்டு மக்களையும் அநியாயமாக இரத்த வெறி கொண்ட தாக்கதலை போல வேறு எங்கும் எவரும் உயிர் பலியாகி விடக்கூடாது.

என்று முஸ்லிம்கள் பாதுகாப்பு துறையினருக்கு தீவிரவாதிகள் பற்றீய அனைத்து தகவலையும் தெரிவித்து வருகிறார்கள் என்பதை வைத்து புறிந்து கொள்ள முடியாத அளவுக்கு முட்டாள்களாக இருக்க மாட்டார்கள் என நினைக்கிறோம்.

அழிக்க நினைப்பவர்கள் எப்போதும் அழிப்பவர்களை காட்டிக் கொடுக்க மாட்டார்கள்.

அழிப்பவர்களுக்கு அழிக்க வேண்டிய இடத்தையே காட்டிக் கொடுப்பார்கள்.

நாடினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு பிரிவிற்கு  பக்கத்து வீடில் நடக்கும் சூழ்ச்சிகாலை உடனுக்குடன் வழங்கி உயிர் இழப்புகலை பாதுகாக்கும் முஸ்லிம்களின் உயிருக்கு மேலாக நேசிக்கும் இறையில்லங்களை உடைக்காதீர்கள்.

நீங்கள் செய்ததைப் பாலவே இந்த தீவிரவாதிகளும் வணக்கஸ்தளங்களை வெடி குண்டுகள் மூலம் சிதரடித்ததன் காரனமாக அவர்களை நாட்டின் துரோகிகள் என்று பேசுகிறோம்.

அதே தவறை நீங்களும் செய்தால் உங்களை நாம் எவ்வாறு சொல்வது #தீவிரவாதிகள் என்றா? அல்லது #போராலிகள் என்றா?

இந்த இழிவு செயலுக்கு ஒரு போதும் போராலியாக முடியாது.

ஆனால் தீவிரவாதி என்ற பெயரே உங்களையும் சார்ந்து நிற்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

சமூகப் பார்வையில் முஸ்லிம்களில் யாராவது ஒருவர் ஒரு தவறான செயலை செய்து விட்டால் அனைத்து முஸ்லிம்களையும் பழி சுமத்துகிறீர்கள்.

ஆனால்

அதே முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்களோ அல்லது வியாபார நிலையங்களோ தாக்கப்பட்டால் அதை கடுகளவும் கண்டு கொள்ளவோ கண்டிக்கவோ யாருக்கும் எவருக்கும் நிதியை நிலைனாட்ட வேண்டும் என்ற சிந்தனை வருவதே #இல்லை ஏன்?

யார் எவர் செய்தாலும் தவறு தவறு தான் தண்டனை ஒன்று தான்

தவறு செய்தவர் தான் குற்றவாளியே ஆவார்.

அவர் சார்ந்து இருக்கும் மதத்தினரோ கொள்கையினரோ அக்குற்றத்திற்கு பொறுப்பாகவோ அல்லது   குற்றவாளிகலாகவோ  ஆகமாட்டார்கள்.

குற்றம் புரிந்தோர் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்ட வேண்டும்.

அது கிரிஸ்தவ தேவாலயமானாலும் சரி, முஸ்லிம் பள்ளிகளானாலும் சரி, பௌத்த பன்சலைகலானாலும் சரி, இந்து கோயில்கலானாலும் சரி

மனிதனை நல்வழிபடுத்துவதற்கே அவன் மதத்தையும் கொள்கையையும் ஏற்றுக் கொள்கிறான்.

அதனால் நல்லவர்களும் இருப்பார்கள் கெட்டவர்கள் இருப்பார்கள்

#வேண்டுகோள்_ஒன்றாக_இது

முஸ்லிம்கள் தீவிரவாதிகள் இல்லை.
இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் இல்லை.
இஸ்லாம் தீவிர வாதத்தை தூண்டும் மதம் இல்லை.

#இஸ்லாம்_தீவிரவாதத்தை_எதிர்க்கும்_மார்க்கம்.

அல்குர்ஆன் வேத வார்த்தைகள்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

 مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا  وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ‌ وَلَـقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنٰتِ ثُمَّ اِنَّ كَثِيْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰ لِكَ فِى الْاَرْضِ لَمُسْرِفُوْنَ‏ 
 📖 #நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி,

 📖 #மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போலாவான்.

 📖  #எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” 

 📖  #நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.

(அல்குர்ஆன் : 5:32)

✒E.முபாரிஸ் (றஷீதி)

1 கருத்துரைகள்:

எல்லா மதசார்பான இடங்களுக்கு கட்டாயம் CCTV அவசியம் அதில் ஒரு Camera வீதியின் முனையில் வைக்க வேண்டும். மற்றும் Sever online connect இருக்க வேண்டும்.பள்ளிக்கு AC போடுவதைவிட இதுவே அவசியம்.

Post a Comment