Header Ads



நோன்­புப்­பெ­ருநாள் தொழு­கையை நடாத்­த முடி­யாத, நிலையிருந்தால் அரச செலவில் மாற்றிடங்கள் - ஹலீம்

அண்­மையில் குரு­நாகல், புத்­தளம் மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் இடம்­பெற்ற வன்­மு­றை­க­ளினால் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்­களில் நோன்­புப்­பெ­ருநாள் தொழு­கையை நடாத்­து­வ­தற்கு முடி­யாத நிலைமை காணப்­பட்டால் தொழு­கைக்­கான மாற்று இடங்­களை அரச செலவில் ஏற்­பாடு செய்­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

பெருநாள் தொழு­கைக்­கான மாற்று இடங்­களை வாடகை அடிப்­ப­டையில் பெற்றுக் கொள்­ளு­மாறும் இன்றேல் அரச செலவில் தற்­கா­லிக கூடா­ரங்­களை அமைத்துக் கொள்­ளு­மாறும் அமைச்­ச­ரவை அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமை வேண்­டி­யுள்­ளது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அண்­மையில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் 27 பள்­ளி­வா­சல்கள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், முஸ்­லிம்­களின் புனித மாத­மான ரம­ழானில் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ளதால் அவர்கள் சமய கிரி­யை­களை நடத்­து­வதில் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொண்­டுள்­ள­தா­கவும் பள்­ளி­வா­சல்கள் தாம­த­மின்றி புன­ர­மைக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து எதிர்­வரும் நோன்புப் பெரு­நா­ளுக்கு முன்பு பள்­ளி­வா­சல்கள் புன­ர­மைக்­கப்­ப­டா­விட்டால் பெருநாள் தொழு­கைக்கு மாற்று இடங்­களை அரச செலவில் வாட­கைக்கு பெற்­றுக்­கொள்­ளு­மாறும் தற்­கா­லிக கூடா­ரங்­களை அமைத்துக் கொள்­ளு­மாறும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இதற்­க­மைய முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பணித்­துள்ளார்.

இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக்­கிடம் வின­வி­ய­போது அவர் விடி­வெள்­ளிக்கு பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.

வன்­மு­றை­களால் பாதிக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கத்­தி­னரைத் தொடர்பு கொண்டு நோன்புப்பெருநாள் தொழுகை ஏற்பாடுகள் தொடர்பில் விபரங்களைத் திரட்டி வருகிறோம். கிடைக்கப்பெறும் விபரங்களை அடிப்படையாகக்கொண்டே அரச செலவில் நோன்புப் பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்யப்படும் என்றார்.-Vidivelli

No comments

Powered by Blogger.