Header Ads



பயங்கரவாதத்திற்கு எதிராக வேலை செய்யும் என்னை, பிக்குமார் பயங்கரவாதிகளாக சித்தரிக்கின்றனர்

புலனாய்வு பிரிவினரே நாட்டிற்குள் பயங்கரவாதத்தை பாதுகாத்ததாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

பல காலமாக பயங்கரவாதிகள் சம்பந்தமான தகவல்களை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கிய போதிலும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக வேலைகளை செய்யும் தம்மை பிக்குமார் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகவும், ஒலி வாங்கி கிடைத்தது என்பதற்காக வாயில் வரும் வார்த்தைகளை பேச வேண்டாம் எனவும் இதற்காக இழப்பீடு செலுத்த நேரிடும் எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கு எதிராக கடந்த 1994ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருவதாகவும் அந்த அமைப்பின் தலைவர் இலங்கை வருவதை தானே தடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தவ்ஹித் ஜமாத் அமைப்பை சேர்ந்த அப்துல் ரசாக்கை கைது செய்ய பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மேல் மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. நுணலும் தன் வாயால் கெடும்.

    ReplyDelete
  2. நீ தான் இங்கு நடக்கும் அத்தனைக்கும் சூத்திரதாரி. Bbs உடன் உனக்கும் சேர்த்து தான் ஆரம்பத்தில் இந்த நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த தமிழ் பயங்கரவாத டயஸ்போராவால் அனைத்தும் வழங்கப்பட்டது

    ReplyDelete

Powered by Blogger.