Header Ads



மேற்கத்திய கலாசாரா போதனைகளை, இலங்கை முஸ்லிம்கள் ஏற்பார்களா..?

- Farzan Basir -

நாட்டில் நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதலை பயன்படுத்தி, இஸ்லாத்திலும் இலங்கை இஸ்லாமியர்களின் வாழக்கை முறையிழும் மாற்றங்களை கொண்டுவரவேண்டும் என்று முற்போக்கு சிந்தனையாளர்களாக தங்களை அடையாளப்படுத்துவோரால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை இலங்கை முஸ்லிம்கள் எவ்வாறு பார்குறார்கள் என்று ஒரு கருத்தாடலில் என்னிடம் கேட்டார்கள்.
பெண் விடுதலை என்ற போர்வையில், தெரிவுக்கான சுதந்திரம் என்ற கருத்தியல் முற்றாக மறக்கப்பட்ட நிலையில், பின்நவீனத்துவ லிபரல்வாதிகள் ஹபாயா அணிவோரை குற்றவாளிக்கூண்டில் ஏற்றியிருக்குறார்கள். நவீன நாஸ்திகம் பேசுவோர் இஸ்லாத்தில் பெண் சுதந்திரம் குறித்த தங்கள் கவலைகளை பெரிதும் வெளியிடுகிறார்கள் , வேறு சிலர் ஒரு படி மேலே சென்று முஸ்லிம்கள் இஸ்லாமிய ஒழுக்க கோற்பாடுகளை நிராகரிக்க வேண்டும் என்றும், பெண்களின் சுதந்திரம் என்பது ஒருவகை பாலியல் ரீதியிலான புரட்சியின் மூலமே பூரணம் அடைய முடியும் என்றும் வாதிடுகிறார்கள்.

இத்தகைய வாதங்கள் ஏன் முஸ்லீம்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுவதில்லை?

மேற்குலகம், நவீன இஸ்லாத்தின் பாதுகாவலர்களாக முஸ்லிம்களுக்கு அறிமுகம் செய்த சல்மான் ருஷ்தி,தஸ்லீமா நஸ்ரின், ஹயான் ஹிர்ஸி அலி போன்றோர் போதித்த இஸ்லாம் எப்படி இஸ்லாமிய உலகில் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டு ஒதுக்கப்பட்டதோ அதே கோணத்தில்தான் நடந்து முடிந்த பயங்கரவாத தாக்குதலை முற்படுத்தி இலங்கை முஸ்லிம்களை நவீன மயப்படுத்த போதிக்கும் சிலரது கருத்துக்களும் பார்க்கப்படுகின்றன. உள்நாட்டு லிபரல் வாதிகளுக்கும் வெளிநாட்டு நியோ லிபரல் போதகர்கர்களுக்கும் இடையில் உள்ள ஒரே ஒற்றுமை என்னவெனில் இந்த ரெண்டு தரப்பின் மேலும் முஸ்லிம்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதுதான் . இதனாலேயே இத்தகையவர்களின் கருத்துக்கள் முஸ்லிம்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

மதம் குறித்த நம்பிக்கை இல்லாதோரால் மத சீர்திருத்தம் முன்வைக்கப்படுகிறது, அதனால் அந்த சீர் திருத்தம் அதன் நம்பக தன்மையை உடனேயே இழந்துவிடுகிறது. இலங்கை இஸ்லாமிய சமூகம் குறித்து பின்னவீனத்துவ கருத்துக்களை எழுதும் பலருக்கு இஸ்லாம் பற்றி போதிய புரிதல் இருப்பதாக தெரியவில்லை . ஒரு இஸ்லாமியர் தனது மதத்தையும் கலாசாரத்தையும் முழுதாக புறக்கணிக்கும்போதுதான் (assimilation) தேசப்பற்றும் , பெண் விடுதலையும் முற்போக்கு இஸ்லாமும் தோற்றம்பெறும் என்பது போன்ற ஒரு தொனியில் சகவாழ்வு போதிக்கப்படுகிறது

மேற்கத்திய கலாசாரத்தில் "சரியென" கூறப்படும் ஒரு பகுதி சமூக விழுமியங்களை முஸ்லிம்கள் அப்படியே ஏற்பதன் மூலம் மட்டுமே ஒரு நல்ல மனிதனாக " வளர்ச்சி அடைந்த மக்கள் பிரதிநிதியாக" வாழமுடியும் என்ற அளவு கோல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது இன்னொருவகை கலாசார காலனித்துவம் என்பதை அதை போதிப்பவர்களே சிலநேரம் மறந்து போய்விடுகிறார்கள். இத்தகைய திணிப்புக்கள் தனக்கே உரித்தான சடங்குகளை மட்டுமே சரி என்று ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் வேரூன்றி வளர்ந்துள்ளது. அந்த சடங்குகளுக்கு மாறான எதுவும் அடிப்படைவாதம் அல்லது அறிவீனம் என்று கூறும் தன்மையை கொண்டது. ஆடையில் இருந்து ஆன் பெண் உறவு வரை அனைத்தையும் அது தன் அளவு கோலால மட்டுமே பார்க்கிறது..

உதாரணமாக, திருமணத்துக்கு புறம்பான பாலியல் தொடர்புகளுக்கு இஸ்லாத்தின் எல்லா பிரிவுகளும் பெரும்பாலும் ஏதோ ஒருவகையில் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதிக்கின்றன. இந்த நெறிமுறைகளை அடிப்படைவாதம் என்று வர்ணிக்கும் ஒரு தரப்பின் இஸ்லாமிய சீர்திருத்தங்கள் நம்பக தன்மை அற்றவையாக முஸ்லிம்களால் பார்க்கப்படுகிறது. மேற்கத்தைய கலாசாரம் முஸ்லிம்களின் மீது ஒருவகை கலாசார காலனித்துவத்தை பிரயோகிப்பதாக முஸ்லிம்கள் பார்குறார்கள். இந்த நிலைமை இலங்கை முஸ்லிம்கள் தங்கள் வாழக்கை முறைமீது ஒரு மெய்யான சுய விமரிசனத்தை மேற்கொள்ள ஒருவகையில் தடையாகவும் இருக்குறது.

4 comments:

  1. மேற்கத்திய கலாச்சாரத்தை விட்டுத் தள்ளுங்கள், sahih al-bukhari ஸகி அல் புகாரி 4788ல், ஆயிஷா கேட்கும் நியாயத்தை, அவர் கடிந்து கொள்ளும் எள்ளல் முறையை சிந்தித்துப்பாருங்கள்.
    சுய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள, எந்த அளவு சமயத்தைப் பயன்படுத்தி உள்ளார்கள், என்பதை திறந்த மனத்துடன் குர்ஆனையும், ஹதீசுகளையும் வாசித்தால் உங்களுக்கே தெரிய போகிறது.

    ReplyDelete
  2. don't comment stupidly without even basic knowledge???

    ReplyDelete
  3. வீதியில் அரைந்து செல்லும் ஹபாயவை விட நீளக்காற்சட்டை சிறந்தது போல் தெரிகிறது. மாற்றங்களை முஸ்லிம்கள் விரும்பவில்லை என்பது பலர் பிற்போக்குவாதத்தில் இருப்பதும், முற்போக்குவாதிகளை காபிர்கள் என்று பத்வா வழங்குவதுடன் கொலை அச்சுறுத்தலுக்குட்பட வேண்டிவரும் என்ற அச்சமுமாகும்.

    ReplyDelete
  4. invvvvvvalavu pirachinaikkum habaya anivathai maarkam aaki kondathum oru kaaranam enbathai marukka mudiyaathu.. maraikka vendiya uruppukalai maraithu islam kooriya vagaiyil entha oru aadaiyaiyum aniyalam enbathai engalathu muslimgal eano marandu vittaargal..

    ReplyDelete

Powered by Blogger.