Header Ads



துருக்கி தூதரகம், ஞானசாரருக்கு தக்க பதிலடி

தொலைக்காட்சி பேட்டியொன்றின் போது பொதுபலசேனாவின் ஞானசார தேரர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை  இலங்கைக்கான துருக்கி தூதரகம் நிராகரித்துள்ளது

இலங்கையில் பிழையான கருத்துக்களை ஊக்குவிக்கவும்,பதட்டத்தை தூண்டுவதற்கும்,ஊடகங்களை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காகவும் துருக்கியில் விசேட நிதியமொன்று உருவாக்கப்பட்டுள்ளதுடன் அந்த நாட்டிலிருந்து 40 மில்லியன் இலங்கைக்கு வந்துள்ளது என ஞானசார தேரர் தெரிவித்த கருத்தினையே துருக்கி தூதரகம் நிராகரித்துள்ளது.

ஞானசார தேரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை பொய்யானவை என துருக்கி தூதரகம் தெரிவித்துள்ளது.

2004 முதல்  இலங்கைக்கு பல தருணங்களில் மனிதாபிமான உதவிகளையும் வழங்கியுள்ளதுடன் இலங்கையுடன் துருக்கி  நெருக்கமான நட்பை பேணி வந்துள்ளது என தெரிவித்துள்ள துருக்கி தூதரகம் உதவிகளை வழங்குபவர்கள் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நேரடியாக உதவிகளை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை எனவும் தெரிவித்துள்ளது.

  இலங்கையின் நீண்ட கால நட்புநாடான துருக்கி இலங்கை மக்களுடன்  எந்த வகை தீவிரவாதத்திற்கு எதிராகவும் தோளோடு தோள் நிற்கும் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது

No comments

Powered by Blogger.