Header Ads



மைத்திரியை ஜனாதிபதியாக்கி, ரணிலை பிரதமராக்கிய எங்கள் மீது சாபம் விழட்டும்

“ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க பங்களிப்பை வழங்கிய தவறுக்காகவும் ,நல்லாட்சியை எதிர்பார்த்த மக்களின் எதிர்பார்ப்பை பிரதமர் ரணில் சிதைத்த தவறுக்காகவும் எங்கள் மீது சாபம் விழட்டும்”

இவ்வாறு நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் இணைத்தலைவர் பேராசிரியர் சரத் விஜேசூரிய இன்று தெரிவித்தார்.

நல்லாட்சியை உருவாக்க பாடுபட்ட மறைந்த மாதுளுவாவே சோபித தேரரின் 77 வவது பிறந்ததின நிகழ்வு இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்தது. நல்லாட்சியை கொண்டுவர படுபட்டவர்களில் ஒருவரான பேராசிரியர் மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது ,

மைத்ரிபால சிறிசேன ஊழல் மோசடியற்றவர் , அனுபவமுள்ளவர் , இனவாதம் இல்லாதவர் என்று சந்திரிகா சொன்னதால் நாங்கள் அவரை பொது வேட்பாளராக்கினோம். இன்று அவை அனைத்தும் பொய்யானவை என முழு நாட்டிற்கும் தெரியும்.

விமானங்களை நிரப்பி பரிவாரங்களுடன் வெளிநாட்டு சுற்றுலா சென்றாரென நாம் மஹிந்தவை கேலி செய்தோம். இன்று அதில் மைத்ரி மஹிந்தவை தோற்கடித்துவிட்டார்.

மஹிந்த நீதிமன்றத்தை அதன் சுதந்திரத்தன்மையை கேள்விக்குறி ஆக்கியதால் அரசியலமைப்பு சபையின் தேவை ஏற்பட்டது .ஆனால் தனக்கு தேவையான நீதிபதிகளை நியமிக்க முடியாமற் போனதால் அதனை அநாதரவான பிள்ளையாக்கிவிட்டார் சிறிசேன.

நிறைவேற்று அதிகாரத்தால் தனி மனிதனுக்கு வரும் திமிர் தானே இது?ஒருவரை நம்பி பதவியை கொடுத்தால் அவர் பரம்பரைக்கு உழைப்பது, பிள்ளைகளுக்கு வி ஐ பி பாதுகாப்பு கொடுப்பது எல்லாம் கேலிக்கூத்தல்லவா? தந்தை ஜனாதிபதியினால் பிள்ளைகள் திடீர் பணக்காரர் ஆகலாமா? இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

சிறிசேன மற்றும் ரணிலுக்காக நாங்கள் எங்கள் மீதே சாபம் இட்டுக் கொள்கிறோம். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க பங்களிப்பை வழங்கிய தவறுக்காகவும் ,நல்லாட்சியை எதிர்பார்த்த மக்களின் எதிர்பார்ப்பை பிரதமர் ரணில் சிதைத்த தவறுக்காகவும் எங்கள் மீது சாபம் விழட்டும். – என்றார் பேராசிரியர் sivarajah

4 comments:

  1. இது முற்றிலும் உண்மை. உங்கள் துணிச்சலைப் பாராட்ட வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.