Header Ads



யாழ்ப்பாணத்தித்திற்கு வந்த முஸ்லிம், குடும்பத்திற்கு ஏற்பட்ட சோதனை

- பாறுக் ஷிஹான் - 

ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரியின் தங்கு விடுதி நேற்று முன்தினம் இரவு 2 மணித்தியாலங்களிற்கும் அதிக நேரம் இலாணுவத்தினரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு உட்பட்டது.

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குரிய தங்கு விடுதி ஒன்று உள்ளது. இவ்வாறு கானப்படும் விடுதியில் 4 முஸ்லீம்கள் இரு தினங்களாக மிகவும் விலை உயர்ந்த வாகனம் ஒன்றில் வந்து தங்கி நிற்பதாக இராணுவத்தினருக்கு ஓர் இரகசிய தகவல் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட தகவலை இராணுவத்தினரும் இரகசியமான முறையில் உறுதி செய்துள்ளனர்.

இதன் பிரகாரம் வியாழக் கிழமை சுமார் 9 மணியளவில் பவள் கவச வாகனம் சகிதம் அப்பகுதியில் திடீரென ஒன்றுகூடிய இராணுவத்தினர் குறித்த விடுதியை சுற்றி வளைத்தனர். அவ்வாறு சுற்றி வளைத்த இராணுவத்தினர் விடுதியின் யன்னல்கள் வாயில் கதவுகள் வழியாக வீட்டின் உள்ளே துப்பாக்கிகளை நீட்டியவாறு அதிரடியாக உள் நுழைந்த வேளையில் அங்கே குறித்த நால்வரும் கானப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கானப்பட்ட முஸ்லீம்கள் அனைவரும் சம்மாந்துறையை சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்ட நிலையில் விடுதி தேடுதலிற்கு உட்பட்டபோது அதிக பயணப்பைகள் கானப்பட்டுள்ளன. அவை அனைத்தும் சல்லடையிட்டு தேடுதல் இடம்பெற்றது. இதனையடுத்து குறித்த குடும்பம் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தும் நோக்கில் உரியவர்களின் குடும்பங்களிற்கும் தகவல் வழங்கப்பட்டு பினையாளிகள் சகிதம் நீதிமன்றிற்கு வருமாறும் தகவல் வழங்கப்பட்ட நிலையில் ஊர்காவற்றுறை பொலிசாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஊர்காவற்றுறை பொலிசார் குறித்த முஸ்லீம் குடும்பம் சம்பாந்துறை பொலிஸ் மற்றும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்து தங்கியிருப்பதனை உறுதி செய்த நிலையில் குறித்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் யாழில் பணியாற்றும் நிலையில் அவருக்கான இடமாற்ற ஏற்பாட்டை மேற்கொள்ளும் நோக்கில் தங்கியிருந்தமையும் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இராணுவத்தினர் அங்கிருந்து சென்ற நிலையில் பணியும் வேண்டாம் , இடமாற்றமும் வேண்டாம் என குறித்த முஸ்லீம் வைத்திய அதிகாரியும் குடும்பமும் நேற்றுக் காலையில் ஊர்திரும்பியுள்ளனர்.

2 comments:

  1. பணியும் வேண்டாம், இடமாற்றமும் வேண்டாம். இது ஒரு மனிதனின் இருதி முடிவு. பயங்கரவாதம் உருவாக்கப்பட்ட வரலாரே உலகில் அதிகம்.

    ReplyDelete
  2. As a Srilankan i am ashamed for treating a genuine health officer as a terrorist.
    We should understand atleast less than 1% of muslims are good thinking and good ppl.

    ReplyDelete

Powered by Blogger.