Header Ads



கண்டியில் முஸ்லிம் பகுதிகளில், வன்முறையை அரங்­கேற்­ற திட்டமிட்ட அமித் - விசாரணைகளிலிருந்து அம்பலம்

வடமேல் மாகாண முஸ்லிம் கிரா­மங்­களை இலக்­கு­வைத்து அரங்­கேற்­றப்பட்ட வன்­மு­றை­களை அடுத்து மஹ­சொஹொன் பல­காய அமைப்பின் தலைவர் அமித் வீர­சிங்­கவை  சிறப்பு பொலிஸ்­குழு கைது செய்­தி­ருந்­தது. அவர் கைது செய்­யப்­ப­டாது இருந்­தி­ருப்பின்  வடமேல் மாகா­ணத்தில் பதி­வான வன்­மு­றை­களை ஒத்த வன்­மு­றைகள் கண்டி பகு­தி­யிலும் இடம்­பெற்­றி­ருக்­கு­மென முன்­னெ­டுக்­க­ப்படும் விசா­ர­ணை­களில் வெளிப்­படும் சாட்­சி­யங்கள் ஊடாகத் தெளி­வா­வ­தாக விசா­ர­ணை­க­ளுக்குப் பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இவ்­வாறு கண்டி பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்­பு­ணர்­வு­களைத் தூண்டி வன்­மு­றைக்­கான  அடித்­த­ளத்தை அமித் வீர­சிங்க, தெல்­தோட்டை உட்­பட கண்­டியின் பல பகு­தி­க­ளுக்கு சென்று விகா­ரைகள் ஊடாக கூட்­டங்­களைக் கூட்டி முன்­னெ­டுத்­துள்­ளமை தொடர்பில் தக­வல்கள் வெளி­ப்ப­டுத்­தப்பட்­டுள்­ள­தாக அந்த பொலிஸ்  அதி­காரி கூறினார். 

ஏற்­க­னவே திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில்  பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட அமித் வீர­சிங்க, 7 மாதங்­களின் பின்னர் கடும் நிபந்­த­னை­களின் கீழ் பிணையில் விடு­விக்­கப்­பட்டார். அதன் பின்னர் அவ­ரது உயி­ருக்கு முஸ்­லிம்­களால் அச்­சு­றுத்தல் ஏற்­ப­டலாம் என்­பதால் அவ­ரது வீட்­டுக்கு முன்­பாக  பொலிசார் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வா­றான பின்­ன­ணியில் முழு கண்­டி­யிலும் பல இடங்­க­ளுக்கு சென்று, கூட்­டங்­களைக் கூட்டி முஸ்லிம் வெறுப்பு பிர­சா­ரங்­களை அமித் வீர­சிங்க முன்­னெ­டுத்­துள்­ளமை தொடர்பில் சாட்­சி­யங்கள்  பதில் பொலிஸ்மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்­னவின்  ஆலோ­ச­னைக்­க­மைய பொலிஸ் அத்­தி­யட்­சகர் நிசாந்த சொய்­ஸாவின் கீழ் முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்நிலையில் பொலிசார் அமித் வீரசிங்கவைக் கைது செய்ததன் ஊடாக கண்டி பகுதியில்  வன்முறைகள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதாக   குறித்த உயர் பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டினார்.
-Vidivelli

4 comments:

  1. A Poor Muslim Women worn SHIP steeringweel is arrested and kept inside jail even without bail... But a Racist who burnt Digana village was released... See the situation of JUSTICE in Sri Lanka.

    I hope at least this time they will not release him (?) if the government authority love to establish peace in Srilanka.

    ReplyDelete
  2. just soda bottle nothing will happen

    ReplyDelete
  3. இவனை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த பாடம் புகட்டுவதை இம்முறையையாவது எதிர்பார்க்கலாமா????

    ReplyDelete
  4. IVANUKKU POLICE PATHU KAPPA OMG.. WHAT IS THIS NONSENSE???/

    ReplyDelete

Powered by Blogger.