Header Ads



ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் - சுறாக்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர், நெத்திலிகள் மட்டுமே பிடிபட்டுள்ளன

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட வேண்டிய முக்கிய நபர்கள் சுதந்திரமாக நடமாடுவதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று -24- நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் யோசனை தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சுறாக்கள் இன்னும் சுதந்திரமாக நடமாடுகின்றனர். நெத்திலி மீன்கள் மட்டுமே பிடிக்கப்படுகின்றன. இது தவறானது. இந்த நாட்டில் நடந்த ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பாகவும் சிறியவர்களே கைது செய்யப்படுகின்றன.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இங்குள்ள பலர் முன்கூட்டியே அறிந்திருந்தனர். இவர்களின் பேச்சில் அதனை காணமுடிந்தது. நாம் இங்கு பேசி பயனில்லை.

இங்கு பேசுவதால் இறந்தவர்கள் மீண்டும் உயிர் கிடைக்காது. நியாயம் கிடைக்கும் வரை மக்கள் ஆத்திரத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மக்கள் கோபம் முற்றிலும் நியாயமானது எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.