Header Ads



ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு அமைச்சு வேண்டாம் - மத, இன பெயர்களுடனான அரசியல் கட்சிகளை தடைசெய்க

பௌத்தம், இந்து, கத்தோலிக்கம், இஸ்லாம் என ஒவ்வொரு மதங்களுக்கும் ஒவ்வொரு அமைச்சை கொண்டு நடத்துவதை விட , முன்னரைப் போலவே சகல மதங்களுக்கும் ஒரே அமைச்சை உருவாக்குமாறு, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் மதங்களின் பெயரிலோ அல்லது இனங்களின் பெயர்களுடனான அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொரலையில் இன்று -14- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போ​தே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசியல் கட்சிகளின் பிரதேச மட்ட தலைவர்கள் தொடர்புபட்டுள்ளதாகவும், எனவே தம்முடைய அடியாட்களை கட்டுபடுத்துமாறும் அரசியல் கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. ,அதிப்புக்குரிய பேராயர் காட்டிய உயர்ந்த மனிதாபிமானத்தை என்றும் மதிக்கிறோம். உங்கள் ஆலோசனைகளை மதிக்கிறோம். ஆனால் தயவு செய்து இது புத்தர்களின் நாடு என்பதுபோன்ற பேரின வாத சார்பு அரசியல் ஆலோசனைகள் சொவவதை நிறுத்துங்கள்.

    ReplyDelete
  2. பெளத்த இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ பாடசாலைகளையும்
    பாடசாலைகளையும்தடை செய்து பொது பாடசாலை அமைக்க ஆலோசனை சொல்லுங்கள்

    ReplyDelete
  3. ஒவ்வொரு இனத்திற்கும் தனிப் பாடசாலைகளை என்பதையும் தடை செய்ய ஆலோசனை சொல்க

    ReplyDelete
  4. இது புத்தர்களின் நாடல்ல அவர்களும் இந்தியா, நேபாளத்தில் இருந்து வந்தவர்களே!

    ReplyDelete

Powered by Blogger.