Header Ads



றிசாத் பதியூதின் உடனடியாக பதவி விலகவிட்டால், அடுத்தவாரம் நம்பிக்கையில்லா பிரேரணை

அமைச்சர் றிசார்ட் பதியூதின் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் றிசார்ட் பதியூதீன் அடிப்படைவாதிகளுடன் சம்பந்தப்பட்டிருந்தார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், சில விடயங்கள் உறுதியாகி இருப்பதாலும் அவர் உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -12-  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர் றிசார்ட் பதியூதீன் பதவி விலகவில்லை என்றால், அனைத்து கடசிகளையும் இணைத்துக்கொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் எனவும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக யோசனை அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. Monks duty stay inside the temple and saying bane but not outside temple.

    ReplyDelete
  2. தனக்குள்ள வாக்கு வங்கி 3 அல்லது 4, இதனைவைத்துக் கொண்டு இவர் சட்டத்தை அமல்படுத்த இவர் காட்டும் கரிசனை நிச்சியம் இனவாதத்தின் பிரதிபலிப்பு என்பதை சிறு பிள்ளைக்கும் விளங்கும், பாராளுமன்ற அங்கத்தவர்கள் இனவாதம்பேசும்போது அவர்களுக்கு எதிராக என்ன சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை வாசகர்களுக்கு தெரிவிப்பீர்களா?

    ReplyDelete
  3. நமோ தத்தே பதரத்தோ நரகத்தோ சம்மான் சம்பு தஸ்ஸ.

    ReplyDelete

Powered by Blogger.