Header Ads



இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, சோபை இழந்த வெசாக் - அன்னதானப் பந்தல்களின் எண்ணிக்கை சரிவு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, வெசாக் பண்டிகை சோபை இழந்துள்ள நிலையில், வெசாக் தினங்களில் வழங்கப்படும் அன்னதான பந்தல்களும் (தன்சல்) குறைந்தளவிலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை  வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த வருடம் 6,000 தன்சல்கள் பதிவுசெய்யப்பட்டிருந்த  நிலையில் இம்முறை 92 தன்சல்களே பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் மேற்படிச் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்தார்.

கொழும்பு நகரில் கடந்த வரும் 150 தன்சல்கள் பதிவுசெய்யப்பட்டிருந்ததாகவும் எனினும் இம்முறை நான்கு தன்சல்களே பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வெசாக் மண்டலங்கள், பந்தல்களே நாடுபூராகவும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததடன், குறிப்பாக  தலைநகர் கொழும்பின் எந்தப் பகுதிகளிலும் வெசாக் மண்டலங்களும் பந்தல்களும் அமைக்கப்படவில்லை என்றும் கூறினார்.

No comments

Powered by Blogger.