Header Ads



ஒரு கண்ணீர் கதை

- Mohideen -

 முஸ்லிம்கள் இந்த நாட்டில் அனுபவித்ததை போல தமிழ் சமூகம் அதிக சலுகைகளை அனுபவித்தது இல்லை எனலாம் . ஆரம்ப கால முஸ்லீம் சமூக பெரியார்கள் சிறந்த வாழ்வினை, வாழ்க்கை முறையை இந்த நாட்டில் வாழ்ந்து காட்டி அவர்களின் அந்த நல்ல நடத்தையின் காரணமாக பல சலுகைகளை இந்த sinhala மக்கள் நமக்கு இந்த நாட்டில் வழங்கினார்கள் நமக்கென்று தனி பாடசாலைகள் .நமக்கென்று வானொலி சேவை (இந்தியாவில் தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்கு கூட இல்லாமல் இருந்தது) நமது இஷ்டத்துக்கு பள்ளி வாசல்கள், நமக்கென்று மையவாடி, நமது மௌலவி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்.. இன்னும் எவ்வோளோ சலுகைகள்...எமக்கு தெரிந்து சுமார் 1980 களில் இருந்து 1990 இடை பட்ட காலத்துக்குள் முஸ்லீம் சமூகத்தில் நான் கண்டது பிற சமூகத்துடன் மிக நெருங்கி பழகியது.

நாங்கெல்லாம் சின்ன பள்ளிகளில் தான் ஓதினோம் ..தஃலீம் குரான் ..30ம் ஜூஸு ..30ஜூஸு சம்பூரணம் பண்ணினா ஹசரத்துக்கு சாரம் ஜுப்பா துணி ,ஈச்சம்பழம்,கற்கண்டு,பழங்கள் எல்லாம் கொடுப்போம்.. கந்தூரி வைத்து ஊரெல்லாம் கொண்டாட்டமாக இருக்கும்.EM ஹனிபா வின் பாடல்கள் ஓங்கி ஒலிக்கும் அருள் மணக்கும் அதோடு நெய் மணக்கும் சாப்பாடு, கிடுகு சோறு எல்லா இன மக்களும் ஆசையாய் வருவார்கள்..பராஅத் இரவு ரொட்டி பள்ளிகள் தோறும் .மௌலூது என்று வீடெல்லாம் ஒரே ஓதல் கமகம சாம்பிராணி வாசம் அப்பப்பா பரக்கத் பரக்கத் சாப்பாடு சந்தோசம் ..நோன்பு காலங்களில் தராவிஹ் தொழுகை ,ஹிஸ்பு மஜ்லிஸ் அமல்களை முடித்து விட்டு எல்லோரும் விடிய விடிய விழித்து குதூகலித்த நாட்கள் அப்பா என்ன சொல்வது அப்போதுள்ள பெண்கள் முகத்தை மூடி கொண்டு தனித்து ஒதுங்கி விடவில்லை வயது முதிர்ந்த பெண்கள் கூட தலையில் முக்காடு கீழ விழாமல் மிக பாதுகாப்பாக தான் மரியாதையுடன் வாழ்ந்தார்கள் மார்க்கத்துக்கு எந்த பிசகும் வரவில்லை. அந்நிய மக்கள் தமிழ் கூட சிறப்பாக கதைப்பார்கள் புத்தாண்டு வந்துவிட்டால் அவர்கள் எங்களுக்காகவே விசேடமாக பலகாரம் செய்வார்கள்...

நாம் வடளப்பம் முதல் பிரியாணி வரை அவர்களுக்கு கொடுப்போம்...வெசாக் தினம் வந்தால் வெசாக் கூண்டு மேல ஏற்றும் போது மகிழ்ச்சி ஆரவாரத்துடன் நாம் ஆர்பரிப்போம் .நோயாளி ஆனா அவர்கள் வந்து நலம் விசாரிப்பார்கள் இப்படி இருந்த சக வாழ்வு சிதைந்து எல்லா வீட்டிலும் இஸ்லாத்தை கையில் எடுத்து எல்லோருமே பத்வா கொடுக்க ஆரம்பித்து அவன் காபிர் அவன் சுவர்க்கம் போக மாட்டான், அவன் மூத்திரம் கழுவாதவன் அவன் தாரத சாப்பிட கூடாது...(ஆனா ஹாஸ்பிடல் போன இந்த மக்களோட மக்களாகத்தான் தான் சாப்பிடணும்) என்று .எங்களுக்கு என்று bank, சல்லி உள்ளவனுக்கு எல்லாம் international school, நினைத்த இடமெல்லாம் மதரசா,(மதரஸாக்கள் பற்றி தனியா எழுதலாம் அவ்ளோ இருக்கு) ( ஹலால் ஹராம் Certificate (sinhala மக்கள் தமது வியாபாரம் முஸ்லிம்கள் மத்தியில் நடக்க வேண்டும் என்ற காரணத்தால் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு ஹலால் certificate ஐ விரும்பியோ விரும்பாமலோ பெற்றார்கள்..அதுபோல தான் bank கணக்குகளும் முஸ்லிம்களுக்கு பல அரபு பெயர்களில் கணக்கு ஆரம்பித்து கொடுக்க அரச வங்கிகள் கூட இணங்கியது அதெற்கென சில மௌலவி மார்கள் பத்வா கொடுக்க அந்த வங்கிகள் சம்பளம் கொடுத்து வைத்தது இப்போ அந்த மௌலவிகளை காணவில்லை காரணம் முஸ்லீம் பெயரில் உள்ள வங்கிகளிலும் வட்டி எடுக்கிறார்களாம் - பத்வா கொடுத்த மௌலவி ஒதுங்கிட்டார் கணக்கு திறந்தவன் எல்லாம் வட்டில மாட்டி.முன்பு வாழ்ந்த சமூக நலமிக்க நம் முஸ்லீம் தலைவர்கள் நாட்டுக்கும் சமூகத்துக்கு நல்லதை செய்து விட்டு எல்லா காலங்களிலும் சமூகம் நல்லதை அனுபவிக்கட்டும் என்றுதான் விட்டு சென்றனர்..ஆனால் எங்கிருந்து டா வந்தீங்க எங்க சக வாழ்வு..நிம்மதி..எங்கள் மார்க்க விழுமியங்கள், நபியின் கௌரவம், அல்லாஹ் வின் பெருமை எல்லா வற்றையும் குழி தோண்டி புதைத்து..அநியாயமாக இப்போ எங்கள் எல்லோரையும் தவிக்க விட்டு நம்மோட சிறந்த நட்புகளின் முகம் பார்க்க முடியாமல் செய்து விட்டீர்களே...!!! உங்களையெல்லாம் என்ன செய்வது ..

நீங்கள் எல்லாம் என்ன பதில் கொடுக்க போறீங்க...கியாமத் நாளில்...இன்று இந்த சமூகம் ஒரு சிவப்பு நிற சமூகம் தான் அதை மாற்ற எப்போது முடியுமோ தெரியாது..அதுவரை இந்த நரக வாழ்க்கைதான் நீங்கள் விரும்பியதும் இதைத்தானே அறிவுகெட்ட மூடர்களே ! எல்லாம் சமூகத்துக்காக தான் செய்தோம் என்று நீங்கள் சொன்னால் உங்கள் வாயில் ஈயம் தான் ஊற்ற வேண்டும். இன்று சமூகம் பாடாய் படுகின்றது இதற்காத்தான் பாடுபட்டிர்களா மூடர்களே ! அநியாய பாவிகளே ! கோடி கோடியாக பணம், கல்வி வளம், தொழில் வளம் இதெல்லாம் சமூகத்துக்கு கொடுத்தால் அதுதானே நீங்கள் சமூகத்துக்கு செய்யும் சேவை .இன்று எத்தனையோ பச்சிளம் பாலகர்களை. குடும்ப தலைவனை, தலைவியை, முழு குடும்பத்தியும் அழித்து விட்டு அந்த சாம்பல் மேட்டில் உங்கள் சமுகத்தை உயர்த்தி வைக்கவா உயிரை விட்டீர்கள்..மடையர்கள், உங்களை விட கேவலம் மிக்கவர்கள் தரும் பிச்சையில் இந்த சமூகம் வாழ வேண்டுமா ? 

எதை விதைத்தாயோ அதனையே நீ அறுவடை செய்தாக வேண்டும் ! பாவிகள் செய்யும் தீவினை காரணமாக நாம் நல்லோர்களையும் தண்டிப்போம் காரணம் அந்த நல்லோர்கள் இவர்கள் செய்யும் பாவத்தால் நமக்கென்ன ஆகப்போகிறது அவர்கள் தானே நரகத்துக்கு போக போகிறார்கள் என்று எண்ணி வாழா இருந்தார்களே அதற்காக .என்று நமக்கு இறைவன் ஏற்கனவே சொல்லி சொல்லி இருக்கிறான் .(விட்டான் என்பது முடிந்து விட்டது) இறைவன் கப்பல் கதை கூட சொல்கிறானே ! அதெல்லாம் படிப்பினை பெற தான் .போதை கும்பலை நாம் தடுக்கவில்லை ! கலப்படம் செய்வதை நாம் தடுக்கவில்லை ! கடத்தலை காட்டி கொடுக்கவில்லை ! விபச்சாரத்தை தடுக்கவில்லை சமூகங்களை, உறவுகளை விட்டு ஒதுங்கி கொண்டே போனோமே ! அரைத்த மாவையே அரைத்து கொண்டு எல்லோருக்கும் ஒவ்வொரு கொள்கைகளை தூக்கி கொண்டு அலைந்தோம் தவிர இதனை தடுக்க நமக்கு வக்கிருக்கவில்லை நேரமும் இருக்கவில்லை .. இப்போ அழிவை தரவில்லை நேரத்தை கொஞ்சம் தந்துள்ளான் அதனால் வீட்டில் இருந்து சிந்தித்தால் நாம் எல்லோரும் என்ன செய்ய வேண்டும் என்று விளங்கும்

5 comments:

  1. மர மண்டைக்கு எப்ப வெளங்கும்

    ReplyDelete
  2. நாட்டின் அரசின் தீர்க்தரிசனமான முடிவுகளும் மொத்த குடிமக்களின் நற்பண்புகளும் பாதுகாப்புப் படையினரின் தன்னலமற்ற சேவைகளும் நாட்டுப்பற்றும் அல்லாஹ்வின் அருளும்தான் இந்த சோக சம்பவம் நடந்தும் பிற இன மக்களை வெறிபிடித்தவர்களாக மாற்றாமல் இருப்பதற்கு காரணங்களாகிவிட்டது. இந்நாட்டில் வாழும் சிறப்பாக முஸ்லிம் இனத்தவர் தொடர்ந்தும் இங்கு நம்பிக்கையுடன் வாழவேண்டுமாக இருந்தால் சங்கைக்;குரிய உலமாப் பெருந்தகைகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் கல்விமான்களும் ஒன்றிணைந்து தங்களுக்குள் இருக்கும் வாதங்களுக்கு அப்பால் சென்று நாட்டிற்காக முழு சமூக மக்களுக்காகவும் மொழிவுகளை ஏற்பாடு செய்து அதன்மூலம் சமூக ஒற்றுமையினையும் நாட்டின் பிற இன மக்களுடன் சௌஐன்னியமாக; நாட்டின் நலனை ஓம்பும் நற்பிரiஐகளாக இவரகளை மாற்றாவிட்டால் அதனுடைய பலன்களை நாமே அனுபவிக்க வேண்டிவரும்.

    ReplyDelete
  3. You are very correct, until the big bang on Easter Sunday the leader ship of our community including ULAMA & POLITICIATIONS Ministers) spend their valuable time like DEAF & BLIND. They did not like to correct any mistakes because they loose their image & votes, they want only popularity. Now what happened they too have to hide & seeks protection from investigations. Our leadership had a full authority & power to identify & stop the unwanted groups & extremist among us and could averted that disaster. but they failed to do so.

    ReplyDelete
  4. முதல் நாம மத்தவன விட உயரிய சலுகை அடைந்தோம் என்கிறத நிப்பாட்டுக.எல்லாருக்கும் பொதுவான முறையில்தான் நமக்கும் சலுகை இருக்கு,நாம ஒண்டும் தங்க தட்டில சாப்பிட்டு ராஜயோக வாழ்க்கை வாழள.வெள்ளிக்கிழமை 2 மணி நேரத்தோட விடுற அத மத்த நாட்களில் அரை மணித்தியாலம் வீதம் எடுக்கோம்(எல்லா பாடசாலையும் 1.30 விடுர நம்மட 2 க்கு).நோன்புக்க விடுமுறை எடுக்கம் ஆகஸ்ட் மாத ஒரு மாத விடுமுறைக்கு பதிலாக.வேற என்ன இருக்கு?முதல் முஸ்லிம்கள் கண்ணை விளித்து பாருங்கள் நாம ஒன்றும் சும்மா தண்டத்துக்கு வாழள இந்த நாட்டுள.

    ReplyDelete
  5. தெஹிவளையில் சாமி ஊர்வளம் செய்தார்கள் வீதி முளுக்க தண்ணி ஊற்றி சத்தமாக சாமியை புகழ்ந்தவண்ணம்.அதை நான் பார்த்து ரசித்தேன் படத்திலதான் இப்படிபார்த்தேன் இங்கயும் இதல்லாம் இருக்கு என்று தெஹிவள கண்டி ஸ்டோர் முன்னுக்கு உள்ள பொத்த விகாரைக்கு முன் நின்றுகொண்டு.தமிழர்களுக்கும் என்ன உரிமை இருக்கோ அதே உரிமைதான் சிங்கள மக்களுக்கும் இருக்கு,கிரிஸ்டிய மற்றும் முஸ்லிம்மக்களுக்கும் இருக்கு.

    ReplyDelete

Powered by Blogger.