Header Ads



முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு, அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் - முஜிபுர் ரஹ்மான்

சாதாரண முஸ்லிம் மக்கள மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால், இதனை தொடர்ந்தும் கட்டுப்படுத்த முடியாது போனால், அரசாங்கத்தில் இருப்பதா இல்லை என அரசியல் தீர்மானத்தை எடுக்க நேரிடும்.

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் நடந்து மூன்று வாரங்ள் எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. எனினும் திடீரென முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் ஒருதிட்டமிட்ட செயல்.

இதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காது போனால், விரைவான தீர்மானத்தை எடுக்க போவதாகவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. ஆளுக்கொரு அறிக்கை விடாமல் சமூக நலன் கருதி எல்லா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து செயல்படுவதே காலத்தின் தேவை.

    ReplyDelete
  2. Definitely, you cannot ask muslims to vote for UNP in the next elections....

    ReplyDelete

Powered by Blogger.