May 15, 2019

முஸ்லிம் மக்களை இனவெறி, தாக்குதலில் இருந்து பாதுகாப்போம்...!


- வ.ஐ.ச.ஜெயபாலன் -

முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிரான இனக் கலவரத்தை எதிர்த்துக் குரல் கொடுபதோடு முஸ்லிம் சகோதர இனத்தின் பாதுகாப்புக்கு அவசியமான எல்லாவற்றையும் ஆற்ற தனித்தும் இன சமூகமாகவு இலங்கை+மலையக தமிழர்கள் முன்னிற்க்க வேண்டும். 

13ம் திகதி குண்டுவெடிக்கும் யூலை கலவரம் என்றெல்லாம் சிங்கள தலைவர் ஒருவர் சமிக்ஞை கொடுத்ததாக சொல்கிறார்கள். அவரை நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டாமா? கோத்தா அணி இலங்கையில் இருந்து வகாபிகளையும் அடிபடைவாதிகளையும் ஒழித்துக் காட்டுகிறேன் என மேற்க்கு நாடு ஒன்றிடம் ஒப்பந்த அடிப்படையில் விடுப்புப் பெற்றிருப்பதாக தகவல் உலாவுகிறது.

வகாபிகள் அடிப்படை வாதிகளின் ஆபத்துபற்றி சிங்கள மக்களிடையும் மேற்க்கு நாடுகளிலும் அச்சம் உள்ளது. இந்த சுழலில் இலங்கை+மலையக தமிழர்கள் சிக்கவில்லை என்பது நிம்மதி. வகாபிகளையும் அடிப்படைவாதிகளையும் நல்வழிப்படுத்துவது முஸ்லிம்களது உள்வீட்டுப் பணி. இந்த சமயத்தில் தேசிய சர்வதேசிய செயல்பாடுகள் மூலம் முஸ்லிம்களை பாதுகாப்பதும், அமைதி திரும்பியபின் வகாபி அடிப்படை வாதிகளை நல்வழிப் படுத்தும் போராட்டத்தில் முஸ்லிம் ஜனநாயக சக்திகளுகள் வெற்றிபெற ஆதரவு அளிப்பதுமே இலங்கை+மலையகதமிழரான நமது கடமையாகும். எங்கள் பணியில் முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக சிங்கள ஜனநாயக சக்திகளையும் உலக தமிழர்களையும் அணிதிரட்டுவோம்/
.
முஸ்லிம்களை சிங்கள இனவெறியர்களிடம் இருந்து பாதுகாக்கும் பணியில் புலம்பெயர்ந்த தமிழர்களும் பங்களிக்க வேண்டும். நீங்கள் வாழும் நாடுகளில் வசிக்கும் இலங்கை முஸ்லிம் அமைப்புகளுக்கு ஆதரவாக விரைந்து கழம் இறங்க வேண்டுமென புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு விண்ணப்பிக்கிறேன். 

முஸ்லிம் மக்களின் பாதுகாப்பையும் முஸ்லிம் ஜனநாயக சக்திகளின் வெற்றியையும் உறுதிப்படுத்துவது உலக மக்களின் கடமை என்பதை உரத்துச் சொல்வோம்.

12 கருத்துரைகள்:

Thank you sir. News from Tamil media and posts and comments from Tamils seemed to be more hateful and against Muslims but your words indeed give us peace of mind. Most of the Tamils have forgotten how united we were and how Muslims helped them during the hard times.

அன்மையில் ஒரு தமிழ் அமைச்சருக்கும் மிக கவலை 1983 போல் எமக்கு நடக்க வில்லை என.அவர் யாரென உங்களுக்கும் நன்கு தெரியும்.

ஐயா உங்களுக்கு நன்றி

ஜெயபாலன் சார்,
முஸ்லிம்கள் தற்போதய அரசாங்கத்தில் ஒரு பகுதி. 100% முஸ்லிம்கள் ஆதரவு (21 MPs). பல முஸ்லிம் அமைச்சர்கள், 2 கவர்னர்கள். (சிங்கள MPs கூட 100% ஆதரவு அரசுக்கு இல்லை),
இது உங்களுக்கு தெரியாதா சார்?.

எனவே, அவர்களின் சொந்த அரசாங்கத்தின் படைகள் அவர்களை சிங்கள காடையர்களிடமிருந்து பாதுகாப்பார்கள் தானே.
நீங்கள் ஏன் தேவையில்லாமல் மூக்கை நுளைக்கிறீங்க?

உங்களது காலத்துக்கு ஏற்ற கருத்து வரவேக்கத் தக்கது

I think Muslims buy you with their money ...have you forgotten how many tamil people died under Muslim groups and how many tamil villages wiped off by them ...have you ever raised your against that...do you know how did they behave during the war and end of the war...probably u might a converted guy still use the tamil name

மதிப்பிற்குரிய அய்யா ஜெயபாலன்
உங்களது இந்த பெருமானது கொண்ட முயட்ஷிக்கு எனது நன்றிகள் பல . உண்மையில் இந்த எமது தாய்நாடு வேண்டி நிக்கும் , எம்மிலாம் இருந்து எதிர்பார்ப்பது எல்லாம் எல்லா சமூகமும் எத்திரு நாட்டில் ஒற்றுமையாக வாழ்வதையே . உங்கள் முயஷியாய் மிகவும் பாராட்டுகிறேன் . வணக்கம் அய்யா .

If everyone in all religion become wiser as your are, Our Sri Lanka will be a peaceful and prosperous Nation.

Thanks for your support. However, I need to know what your understanding of Wahhabism is. Media & western nations depict it as terrorism. Contrary, it is not. No terrorism is in Wahhabism. The belief of God: one & only one is worthy to be worshipped. No intermediary- Awliyya, Kabr prayer, Kanthuri - which are all prohibited. This is what Imam Abdul Wahab did, people call it Wahhabism.

மிக்க நன்றி ஐயா

Post a Comment