Header Ads



ஜனநாயகம் - மனித உரிமையை ஒதுக்கிவைத்துவிட்டு, தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் வழங்க வேண்டும் - சஜித்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைக் கைவிட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தை முன்னர் இருந்ததைவிட பலப்படுத்த வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர், பூகோள பயங்கரவாதம் இலங்கையிலும் ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில், உத்தேசிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை கைவிட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தை மேலும் பலப்படுத்த வேண்டும்.

அதற்கு மேலும் பல ஏற்பாடுகளை இணைக்க வேண்டும்.

ஜனநாயகம், மனித உரிமைகள் என்பனவற்றை பாதுகாத்தல் என்பதை தேசிய ஒழுங்கு பத்திரத்திலிருந்து சற்று ஒதுக்கிவைத்து, பயங்கரவாதத்தை தடுக்க தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் வழங்க வேண்டும் என சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

6 comments:

  1. It is impossible to ensure safety and security without protecting the democracy and maintaining human rights Mr Sajith.

    ReplyDelete
  2. நல்ல வேலை இவன் யார் என்று அடையாளம் காண கிடைத்தது. இல்லா விட்டால் எம் மக்கள் இவனை ஜனாதிபதி ஆகியிருப்பார்கள்

    ReplyDelete
  3. இவருடைய கருத்துகளை உன்னிப்பாக க் கவனிக்கும்போது ஓர் உண்மை புலப்படுகின்றது, யாரோ மேலிடத்தில் உள்ள ஒருவருக்கு அல்லது ஒரு குழுவுக்கு கடைக்குப்போவதைப்போல இருக்கின்றது. அண்மைக்காலங்களில் இவருடைய கருத்துப்போக்கில் அல்லதுபேச்சில் மேலிட செல்வாக்கு பாரியளவு தென்படுகின்றது. இந்த நாட்டில் வாழும் படித்த, உலகத்தை நன்றாகப் புரிந்துவாழும் இளைஞர்கள் இந்த நாட்டு அரசியலில் ஈடுபட்டு இந்த நாட்டு மக்கள், நாட்டின் தேவைகளுக்கு முன்னுரிமைகொடுத்து நாட்டை ஆளக்கூடிய ஆட்சியாளர்கள் உடனடியாகத் தேவைப்படுவதை இந்த நாட்டின் தற்போதைய சுரண்டல்வாத அரசியல் நிலைமை சுட்டிக் காட்டுகின்றது.

    ReplyDelete
  4. உங்க மண்டையில் தேசம் கலந்த இனவெறி தெரியுது!

    ReplyDelete
  5. through demolishing human rights and democracy are you intending rule the country as Hitler? yes of-course, that exactly what your father did while he was president. killed all the challenging leaders by using the name of LTTE, that the lesson you have got from your father.

    ReplyDelete
  6. நாய்ச்சிங்களவனின் குணம் வெளி ப் பட்டு விட்டது, இதோடு இவனை நம்பாதீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.