May 20, 2019

குருநாகல், புத்தளம் முஸ்லிம்களின் அவலக் கதைகள்


• நான் மதம் மாறிய காரணத்தினால் என்னை கொல்வார்கள் என்ற அச்சத்தில் பள்ளிவாசலுக்குள் பதுங்கியிருந்தேன்.
• பக்கத்து வீட்டவர் அவர்களின் வீட்டில் எங்களுக்கு பாதுகாப்பு தந்துவிட்டு, பின்னால் வந்து எங்கள் வீட்டை தாக்கினார்கள்.
• வீட்டில் கொத்தனார் வேலைக்கு வந்தவர்களே எங்களது வீட்டை தாக்கினார்கள்.
• கல்யாண வீட்டுக்கு பந்தல் கட்டுவதற்கு வந்த பையன்தான் ஜன்னல்களை அடித்து நொறுக்கினான்.
• நோன்பு திறக்க எதுவுமே இல்லாத நிலை வயலுக்குள் ஒழிந்திருந்தோம். பல நாட்கள் பட்டினி நோன்பு நோற்றோம்.
• எனது கடையை உடைக்கும்போது எனது சிங்கள நண்பர்தான் ஓடிவந்து அவர்களை உடைக்க விடாமல் காப்பாற்றினார்.
குருநாகல் மாவட்டத்திலிருந்து பல சோகமான வாக்குமூலங்கள்...

2

• தந்தையின் மரணத்தின் பின்னர் எங்களைப் பார்க்க இங்கு யாரும் வரவில்லை - மரணித்த அமீரின் மகன்
• ....... அங்கிள்தான் எங்கள் வீட்டுக்கு நெருப்பு வைத்தார் - 3 வயது பிஞ்சுக் குழந்தை வாக்குமூலம்.
• மகளுக்கு அடையாளம் போட்ட நகைகளை எடுத்துக்கொண்டு, வீட்டையும் கொழுத்திவிட்டுச் சென்றார்கள்.
• வீடு எரியூட்டப்பட்டதால் தினமும் ஒவ்வொரு வீடுகளின் தஞ்சம் கோரும் குடும்பங்களின் அவலம்.
• இயக்கவெறி காரணமாக, முஸ்லிம்களே முஸ்லிம்களை காட்டிக்கொடுத்து தாக்குதல் நடாத்தப்பட்ட புச்சம்பொல கிராமத்தின் கண்ணீர் கதைகள்.
• ஒரு ஜமாத்தினரை இன்னொரு ஜமாத்தினர் ஊரில் ஒதுக்கிவைத்திருக்கும் அவலம்.
புத்தளம் மாவட்டத்தில் இனவாத வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரல்கள்

2 கருத்துரைகள்:

ஒரு முஸ்லீம் என்ற அடிப்படையில் அண்மையில் நடந்த சம்பவங்களை பார்க்கும்போதும் கேட்கும் போதும் மிகவுமே வேதனையாக இருக்கின்றது

ஒரு புறம் முஸ்லிம்களின் அறியாமையும் கோழைத்தனமும் சமயோகித்த அறிவு இன்மையும் தெட்ட தெளிவாக தெரிகின்றது. முஸ்லீம் சமூகம் இன்னும் எவ்வளவோ கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன.

உண்மையை சொல்லப்போனால் இன்னும் தூய இஸ்லாம் எம் மக்களுக்கு தெரியவில்லை நபிகளாரின் வரலாறு தெரியவில்லை எதை விட்டு கொடுக்க வெண்டும் எதை விட்டு கொடுக்க கூடாது என்ற அறிவும் இல்லை . நாம் ஏக இறைவனை மட்டுமே வணங்குகிறோம் என்று வாயளவில் சொல்லுகின்றோம் ஆனால் உண்மையில் உள்ளத்தால் நாம் இறைவனை அன்பு கொள்ளவில்லை அவனை உறுதியாக ஏற்றுக்கொள்ளவும் இல்லை .அவ்வாறு ஏற்றுக் கொண்டு இருந்தால் இந்த சமூகம் ஜும்மாஹ் தொழுகையை கைவிட்டு இருக்காது அட்ப உலக இன்பங்களுக்காக கொள்கையை விட்டு கொடுத்து இருக்க மாட்டார்கள்

சிறந்த ஒரு தலைமைத்துவமும் இல்லை சிறந்த ஒரு வழிகாட்டுதலும் இல்லை, தூர நோற்க்கும் இல்லை அதை சிந்திப்பதட்கான அடிப்படை அறிவும் இல்லை.

மிகவுமே கசப்பான உண்மை என்ன என்றால் இலங்கை முஸ்லீம் சமூகம் மிக கீழ்மட்டத்தில் உள்ள ஒரு அடிமை சமூகம்.

நான் தமிழ் சகோதரர்களை பார்த்து பெருமை படுகின்றேன் அவர்கள் எங்களை விட எவ்வளவோ மேலானவர்கள்

இதுக்கெல்லாம் யார் வழியமைத்து கொடுத்தது.அரபு கலாசாலைகலில் ஓதி moulavi பட்டம் பெற்றவுடன் 75% மானோருக்கு உலக வாழ்க்கை மீது அதி தீவிர ஆசையும் ஆரம்பிக்கிறது.இப்பொழுது ஆரம்பிப்பார் ஒரு இயக்கத்தை அதில் சில அரை குறை moulavi களை இணைப்பார்.சில நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்தி பனம் கரப்பது.இவரை கண்டு இன்னும் சிலர் இயக்கம்,அதன் பிறகு அவர்களுக்குள் பணத்துக்காக,பதவிக்காக யுத்தம்.இப்படியாக இந்த Muslim பெயர் தாங்கிகள் எமது சமூகத்தை பிற மதத்தாருக்கு காட்டிக் கொடுத்து,இறுதியில் சஹ்ரான் போன்ர பயங்கரவாதிகளும் உருவானார்கள்.இற்றைக்கு சுமார் 15 வருடங்களுக்கு முன் இருந்த உலமாக்கலினை மாற்று மதத்தாரும் மதித்து நடந்த வரலாறும் உண்டு.கோழைகல் Islam என்னும் பெயர்தாங்கிகல் எம்மை பணத்துக்காக காட்டிக் கொடுத்த துரோகிகள்.தவ்ஹீத் எனும் அழகிய பெயரை வைத்து கொண்டு எம்மை காட்டிக் கொடுத்த கயவர்கல்.

Post a comment