Header Ads



அமைச்சர் ரிஷாத்தை இக்கட்டான, நிலைக்கு தள்ளிவிட வேண்டாம் - மஹிந்த

நம்பிக்கையில்லா பிரேரணையை பிற்படுத்தி அரசாங்கம் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை இக்கட்டான நிலைக்கு தள்ளிவிடவேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார்.

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடிய பாராளுமன்ற அமர்வின் போது, இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களால் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தெரிவுக்குழு அமைத்து விசாரிப்பது தொடர்பில் எழுந்த சர்ச்சையில் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது குற்றச்சாட்டுக்களை தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கையளித்திருக்கின்றனர். குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் தெரிவித்திருப்பதாக அறியக்கிடைத்தது. அதனால் அரசாங்கம் நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் பிற்படுத்த தேவையில்லை.

அத்துடன் ரிஷாத் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகம்கொடுக்க தயார் என்று இருக்கும்போது அரசாங்கம் அதனை பிற்படுத்துவதால் ரிஷாத் பதியுதீனே இதனால் இக்கட்டான நிலைக்கு ஆளாகின்றார்.

மேலும். அதேபோன்று நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்துக்கு திகதி நிர்ணயிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இருக்கின்ற காரணத்தால், இதுதொடர்பாக தீர்மானத்தை அவர் எடுக்கவேண்டும் எனவும், சபையில் இதற்கு முன்னர் ஒருபோதும் இடம்பெறாதளவு விவாதம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன எனவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் கேள்வியெழுப்பியுள்ளார். 

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

1 comment:

  1. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறார் மகிந்த மூத்தப்பா

    ReplyDelete

Powered by Blogger.